இல்லாத காலம்

காலம்
இயக்கத்துடனான
தொடர்புச் சொல்
தவிர
ஏதுமில்லை அதில்

வயதும்கூட
யாருக்கும்
ஏறுவதும் இல்லை
இறங்குவதும் இல்லை

இந்தக் கணத்தில்
வாழமுடிகிறதா
அதுபோதும் உனக்கு

வேறென்ன வேண்டும்
இதைவிட?

இப்போது நீ
வாழ்கிறாய்,
இல்லாத காலத்தின்
கற்பிதம்விட்டு.

About The Author