குறுங்கவிதைகள் (10)

கற்றாரை முட்டாளே

காமுறுவர்

கற்றார் வயிறெரிவர்

*****

சந்தா கட்டினேன்

கவிதை வந்தது

பிரதி வரவில்லை

*****

புருஷனின் அழுக்குச்சுவடு

அழுத்தித் துடைக்கும்

அடிமைப் பெண்டாட்டி

*****

கணவன் எழுதிய

கவிதைப் புத்தகம்

கிழித்துத் துடைத்தனள்

தோசைக்கல்லை

*****

தசரதன் செத்த

பத்தாம் நாளில்

தாலியறுத்தவர்

ஆயிரம் பேர்

*****

About The Author