சிரிக்க… சிரிக்க… – 9

மனைவி: இன்னைக்கு சன்டே. வாங்க வெளிய போயிட்டு வரலாம். நாந்தான் காரை ஓட்டுவேன். சரியா?

கணவன்: அதாவது கார்ல போயிட்டு ஆம்புலன்ஸ்ல திரும்பி வரலாம்னு சொல்றியா?

*****

மனைவி: வீட்டுல எங்க பணத்தை வைச்சாலும் நம்ம பையன் எடுத்துடறான். என்ன செய்யறதுன்னே தெரியலைங்க.

கணவன்: அவனோட பாடப்புத்தகத்துல வைச்சுடு. கண்டிப்பா பத்திரமாயிருக்கும்.

*****

சண்டையின்போது,

மனைவி: இப்படியே எங்கூட சண்டை போட்டுகிட்டே இருந்தீங்கன்னா, நான் எங்கம்மா வீட்டுக்குப் போயிடுவேன். திரும்ப வரவே மட்டேன்.

கணவன்: ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் சொல்ற. ஆனா செய்யமாட்டேங்குற!!

*****

மனைவி: உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம பக்கத்து வீட்டில் இருக்கும் 60 வயதுக்காரரு 20 வயது பெண்ணை கல்யாணம் செய்துக்கிட்டாராம்.

கணவன்: என்னை பார்த்தப்புறமும் அவருக்கு புத்தி வரலியா? இந்த வயசுலேயும் ரிஸ்க் எடுக்கும் அவருடைய மன தைரியத்தைப் பாராட்டுறேன்.

*****

ஆஃபிஸிலிருந்து லேட்டாக வந்த கணவன் மனைவியிடம்,

கணவன்: சாப்பிட என்ன இருக்கு?
மனைவி (கோபத்தில்): ம்… விஷம்.
கணவன்: எனக்கு கொஞ்சம் வெளில வேலையிருக்கு. நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

*****

About The Author