சென்ரியூ – நகைப்பாக்கள் (1)

பூவா தலையா?
பூ கேட்கிறாள்
விதவை

***

முதியோர்களின்
முழு நேரப் பேச்சிலும்
இளமைக் காலம்

***

கல்லும் இருந்தது
நாயும் இருந்தது
கை உடைந்த நேரத்தில்

***

அன்னையும் பிதாவும்..
படித்துக் கொண்டிருக்கிறது
ஆஅனாதைக் குழந்தை

***

அதிவேகமாய் ஓடினான்
ஓட்டப் பந்தய வீரன்
அடுத்த வீட்டுப் பெண்ணுடன்!

***

மாற்று அறுவை சிகிச்சை
செய்து முடித்தார் மருத்துவர்
நோயாளியை மாற்றி!

***

About The Author

3 Comments

  1. sankaranarayanan

    good and thoughtprovoking – pls introduce this poet to me
    tks
    from s shankaranarayanan writer

Comments are closed.