பாபா பதில்கள்-திருமணம்-எளியவை எட்டு

1. இன்றைக்கு மக்கள் கொஞ்சம் பொருளாதார நிர்ப்பந்தங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்கு முதன்மையான சில காரணங்களில் ஒன்று, திருமணங்களில் ஏற்படுகின்ற செலவுகளும் விரயங்களும். கல்யாணம் என்பது ஒரு பெரிய myth என்று குழம்பிக் கொண்டு, எந்தச் ‘சாமியாரிடமாவது’ ஜோசியம் கேட்கச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பாபா என்ன சொல்கிறார் என்றால் ‘வரதட்சணையற்ற, செலவுகள் குறைந்த திருமணங்கள் வேண்டும்’ என்கிறார். பாபா புதுசாகச் சொல்லவில்லை. பரமாச்சாரியார் மாதிரி spiritual giant எல்லாம் சொன்னதைத்தான் பாபா insist பண்ணி சொல்லிக் கொண்டிருக்கிறார். வரதட்சணைக் கொடுமை இந்த மண்ணில் ஒழிய வேண்டும். பெண்ணைப் பெற்றவர் கடனாளியாகி வருடம் முழுவதும் கஷ்டப்படக் கூடாது. சாஸ்திரப்படி திருமணம் செய்ய வேண்டியது அவசியம்தான். அதற்காக வீண் செலவு செய்யக் கூடாது. யாருக்கு வசதி இருக்கிறதோ அவர்கள் ஆடம்பரமாகத் திருமணம் செய்து கொள்ளட்டும்.

2. பெண்களுக்குத் தான் நல்ல புத்தி வர வேண்டும். ஒரு தந்தை மூத்த பெண்ணை எவ்வளவோ கஷ்டத்தில் இருக்கின்றபோது திருமணம் செய்து கொடுத்திருப்பார். அதன் பிறகு ஏதோ கொஞ்சம் பணம் கவர்மெண்டி லிருந்தோ அல்லது வேறு எந்த விதமாகவோ வந்திருக்கும். அதனால் அவளுடைய தங்கைக்கு சில சவரன் நகைகளைக் கூடுதலாகக் கொடுக்கிறபோது மணப் பெண்ணின் அக்கா, அக்காவின் கணவன் இரண்டு பேரும் எங்களுக்கும் அதே அளவுக்கு நகை வர வேண்டும் என்று புலம்புவார்கள். எவ்வளவு முட்டாள்தனமான நிலைமை! இது மாற வேண்டும்.

3. சிக்கனம் வர வேண்டும். அனாவசியமான போலிச் சடங்குகள் மறைய வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல் உண்மையாக நடக்க வேண்டும். இதற்காக ஆண், பெண் இருவரும் தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் மாற வேண்டும். இந்தச் சமுதாயத்தைப் பிடித்திருக்கும் இந்த மாதிரியான டாம்பீக லௌகீக நிர்ப்பந்தங்கள் மாற வேண்டும்.

Baba"4. ஒரு திருமணத்திற்குத் தேவையானது ஆரோக்கியமான, அறிவுள்ள பையனும் பெண்ணும்தான். இதைத் தவிர வேறு எந்த qualities -ம் தேவையில்லை. ஆனால் நடப்பது என்ன? பெண்ணைப் பிடித்திருக்கும். ஆனால் அவள் வேலைக்குப் போவாளா, இல்லையா என்ற கேள்வி வந்துவிடும். பெண்ணின் குடும்பத்தினர் கல்யாணத்திற்கு என்ன செய்வார்கள் அல்லது என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள் என்கிற மாதிரியெல்லாம் பாயிண்ட் வந்துவிடும். ஒரு கல்யாணத்திற்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்கள் எல்லாம் இன்றைக்கு கல்யாணத்தோடு தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, இந்த மண்ணில் அதுவே ஒரு நிர்ணயமாக, திருமணத்திற்கு ஒரு pretext-ஆகிப் போய்விடுகிறது. பெண்ணுக்குப் பையனைப் பிடிக்க வேண்டும். பையனுக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டும். இரண்டு பேருடைய family culture ஒத்துப் போக வேண்டும். பெண்ணும் பிள்ளையும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த criterionம் இல்லை.

5. அடுத்தது, கல்யாணம் என்பதை ஒரு பொழுது போக்கிற்காக, அந்த காலத்துப் பெரியவர்கள் மூன்று நாள் பண்ண வேண்டும், ஒன்பது நாள் பண்ண வேண்டும் என்று சொல்லி, வருபவர்களுக்கத் தங்குவதற்கு இடம், அதற்கான சாப்பாடு, கல்யாண மண்டப வாடகை என்று சம்பந்தமில்லாமல் செலவுகள் திணிக்கப்பட்டு, மிகப் பெரிய அளவில் நடத்தி வந்தார்கள். இந்தக் காலம் fast world. Everyone is running short of time. அந்த அளவிற்கு இப்போது ஆர்வமும் இல்லை. கல்யாணத்திற்கு வருகிறவர்கள் ரிசப்ஷனுக்கு வருவதில்லை. ரிசப்ஷனுக்கு வருகிறவர்கள் கல்யாணத்திற்கு வருவதில்லை. அப்படி வந்தாலும் ‘நம் வீட்டுக் கல்யாணத்திற்கு அவர்கள் வந்தார்கள், அதனால் அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு நாம் போயாக வேண்டும்’ என்று அதை ஒரு கடமையாக நினைக்கிறார்கள். ‘அவர்கள் நம் வீட்டுக் கல்யாணத்திற்கு பத்து ரூபாயில் பொம்மை தந்தார்கள். நாம் பத்தேகால் ரூபாயில் கொடுக்கலாம்’ என்கிற எண்ணம் வேறு. ஒரு formality-க்காக வருகிறார்களே தவிர, ’நம் பெண்’ என்று நினைத்து வருபவர்கள் ஒரு பத்து சதவிகிதம் கூடத் தேற மாட்டார்கள். ஒரு உண்மையான அன்பு என்பது இந்தச் சடங்குகளில் இல்லை. யாரோ எந்தக் காலத்திலோ ஏற்படுத்தி வைத்த சட்டங்களை மாற்ற வேண்டும். இரண்டு நாள், மூன்று நாட்களில் செய்யும் கல்யாணங்களை மூன்று மணி நேரத்தில் நிம்மதியாகச் செய்துவிட்டு, பணத்தை விரயம் பண்ணாமல், if they can afford அந்தப் பணத்தை பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கொடுத்துவிட்டால் அவர்களாவது சந்தோஷமாக இருப்பார்கள். What is the point in wasting on all these things?

6. ஜாதகப் பொருத்தம்கூடத் தேவையில்லை என்ற தத்துவத்தை பாபா போதித்து வருகிறார். வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி என் உளமே புகுந்ததனால் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, பாம்புமிரண்டும் நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – இதுதான் என்னுடைய பிலாசஃபி. இன்னும் சொல்லப் போனால் இந்த ஜாதகம் ஜோசியம் இதையெல்லாம் கட்டிக் கொண்டு அழுகிற நாம்தான் மணவாழ்க்கையில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் போலியாக, நிம்மதியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை எதையும் பார்க்காத கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் ஜம்மென்று இருக்கிறார்கள். அதனாலே நீங்கள் கொஞ்சம் பிராக்டிகலாக நினைத்தால் உங்களுக்கு தானாகப் புரிய ஆரம்பித்துவிடும்.

7. பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்துவிட்டால் கல்யாணம் ஆக வேண்டும். நட்சத்திரங்கள் சரியில்லை என்று சொல்வது, அல்லது பாங்க் பாலன்ஸ் எவ்வளவு, நகை நட்டு எவ்வளவு, வேறு என்ன வசதிகள் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருப்பதில் சில பெண்களுக்கு 35 வயது வரை கல்யாணம் ஆகாமல் இருக்கிறது. இப்படி இருப்பதனால் ஒரு பெண் சமுதாய ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்குத் தன்னுடைய பங்கை நெகடிவ்வாகக் கொடுக்கக் கூடிய துர்பாக்கியம் இந்த மண்ணில் ஏற்படுவதை நாம் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்.

8. Ritualistic wedding வேண்டாம், பகுத்தறிவுக் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்பவர்கள் சிம்பிளாக ரெஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம் செய்து கொள்ளலாமே! ஆடம்பரச் செலவு வேண்டாமே!

என்னைவிடவும் பெரியவர்களெல்லாம் ஆன்மீகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்களும் இதைத்தான் சொன்னார்கள். நீங்கள் அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. நான் சொல்வதைக் கேட்க முயற்சி செய்யுங்கள்.

About The Author

1 Comment

 1. சாரதி

  எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் .அவரவர்கள் தங்கள் பெருமைக்கு தகுந்தவாறு கருத்து தெரிவிக்கின்றார்கள் …பின்பற்றமாட்டார்கள் என்று தெரிந்தும் கூட! இது மனித இயல்பு .
  யோகியதயுள்ள எந்த ஆணும் பெண்ணும் தங்கள் சான்றிதழ்களைக்காட்டி பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் இதை யாரும் உடைக்க முடியாது சட்ட பாதுகாப்பு உண்டு. புது ஆடைகள்/நகைகள்//வரவேற்புகள்/விருந்து தேவையில்லை .தெரிந்த நண்பர்கள்/உறவினர்களுக்கு செய்தி செல் போன் மூலம் கூறிவிட்டு அவர்கள் இஷ்டப்பட்ட வீட்டுக்கு உபயோகப்படும் பொருள்களை உங்கள் தேவைகளுக்கேற்ப பரிசாக அளிக்கலாம் விருந்து தேவையில்லை.வாழ்த்து கூற வரும் அன்பர்கள் தாங்களே ஏதேனும் தின்பண்டங்களை கொண்டு வந்து கூட்டாக சாப்பிடலாம்
  செலவு/மண்டபம் நேரம் எல்லாம் மிச்சம்
  இக்காலத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் சொந்தமாக சம்பாரிப்பதால் அவர்களுக்கு யாருடைய பொருளும் தேவையில்லை .குடும்ப் தேவைகள் அனைத்தும் செட்டாக கடைகளில் மலிவாக கிடைக்கிறது .பெற்றோர்களை சிரமப்படுத்த வேண்டாம்
  காலையில் 5 மணிக்கு எழுந்தால் இரவு 11 மணி வரை அனைவருக்கும் ஓயாத வேலை..வேறு யாருடனும் பேசுவதில்லை ,எல்லா பொருள்களும் பச்கேகில் சிக்கனமாக கிடைக்கிறது
  சமூகம் இவர்களை கட்டுப்படுத்துகிறது [கௌரவம் வறட்டு அந்தஸ்து]
  இப்படி செய்தால் இந்திய பொருளாதாரமே நொடித்து விடும்.
  அது தான் காரணம்
  திருமணம் / /மரணத்திலும் தான் அதிக செலவு செய்யப்படுகிறது.
  இந்த ஏரியாவில் தட்டிக்கேட்டவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் [என்னையும் சேர்த்து]
  ஜாக்கிரதை .
  ஜனங்களும் சுயநலத்தை முன்னிட்டு ஒரு குருவிடம் சார்ந்து தாங்கள் தவறை மறைதுக்கொல்கிரார்கள் காஞ்சி ஆச்சாரியார் பட்டு வேண்டாம் என்று கூறியும் அவரை குரு என்று ஏற்றுக்கொண்டவர்கள் பட்டு புடவைகளை காட்டுவதில்லையா.

  இந்த விவாதங்கள் நமக்கு பொழுது போக்கு
  பட்டி / வழக்காடு மன்றத்தில் விவாதம் கலை கட்டும்.
  பார்த்தசாரதி

Comments are closed.