மீன்களும் கண்ணீரும்..

நிரம்பிக் கிடக்கின்றன
நீர் நிலைகள்..
வெறும் மழையினால்
மட்டுமல்ல..
எப்போதேனும் மீனுடன்
பேசியதுண்டா..
வீட்டுத் தொட்டிக்குள்
முட்டி முட்டித் திரும்பும்போது
சொல்லாமல் சொல்கின்றன..
உங்களைப் போலவே
தொட்டி வாழ்க்கைதானா
எங்களுக்கும்?
தினந்தோறும்
பிரிந்து போகும்
தங்கள் இனத்திற்காகக்
கண்ணீர் விடுகின்றன
நீருக்குள் மீன்கள்..
எப்போதும் வற்றாமல்
கடல்!
—————————————-

About The Author

2 Comments

  1. Surya

    today enga veetula Fish kulambu…. unga Kavithai ya padichathuku apram fish sapta mudiyalanga……………………

    payapula……………… sentiment la off panitainga pa….. cha………..

    Meen pochea……………..

  2. radha

    Hஎஅர்ட் டொஉசிங் லினெச்……….. Wஒர்ட்ச் ர் அல் வ்ர்ய் cலெஅர் 2 எவெர்ய்பொட்ய்…….. ணிc

Comments are closed.