லக… லக… ஜோக்ஸ் (30)

டாக்டர்: இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்!
நோயாளி: பனியன்கூட போட்டிருக்கக்கூடாதா டாக்டர்?

**********


நபர் – 1:
என்னங்க கல்யாணத்துக்கு வந்துட்டு, மொய் எழுதாமப் போறீங்க?
நபர் – 2: எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க!

**********


நண்பன் – 1:
ரொம்ப நேரமா உலக வரைபடத்துல என்ன தேடுற?
நண்பன் – 2: எல்லா நாடும் இருக்கு. ‘கொடநாடு’ மட்டும் கிடைக்கவே மாட்டேங்குது!

**********


நபர் – 1:
என்னங்க! வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?
நபர் – 2: உங்களுக்குத்தான் வீடே கிடையாதே?
நபர் – 1: அதனாலதான் வீட்டோட கேட்கிறேன்!

**********


தொண்டன் – 1:
தலைவர் ஏன் திடீர்னு தற்கொலைக்கு முயற்சி பண்ணினார்?
தொண்டன் – 2: செத்தா சிவலோகப் பதவி கிடைக்கும்னு சொன்னாங்களாம்!

About The Author