அதீதாவுக்கு

32.

நடுநிசிப்
பெருமழை..
கருநீர்க் கோடுகளின்
பெருநடனம்…
என் வெளியெங்கும்
பெருகும்
நீ இசைக்கும்
நாதக் கவிதைகளின்
மணியோசை…
வா.. வா..
வந்துவிடு
என்னுள் எப்போதும்
நிரந்தரமாய் உறைந்திட…

33.

கவிதைக்குப்
"பொருள்" இல்லை
அதை எழுதுபவனுக்கு
"பொருள்" ஒரு பொருட்டில்லை
"பொருள் பொதிந்த" கவிதை
கவிதை இல்லை

கவிதை ஒரு
ஆழ்ந்த அனுபவம்:
சின்னக்குழந்தைகளின்
மண்குடில்போல
அவர்களின் காய்கறிக் கடை போல
அவர்களின்
வெளீர் மழலை இசைபோல
உன்
ஆடி நர்த்திக்கும்
அதிநீண்ட கண்ணிமைபோல…

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author