அனாடமிக் தெரபி (20)

ஹை சுகர், லோ சுகர்- சில தகவல்கள்

ஹை சுகர் (High sugar), லோ சுகர் (Low sugar)இரண்டு பிரச்சினைகளும் ஒன்றுதான். இரண்டுக்கும்பெரிய வித்தியாசம் கிடையாது. உதாரணமாக, ஒருவர் சாப்பிடும் உணவில் 500சர்க்கரைகள் இருக்கின்றன. இந்த ஐந்நூற்றில் 100 நல்ல சர்க்கரை,400 கெட்டசர்க்கரையென வைத்துக் கொள்வோம். இவை இரத்தத்தில் கலக்கின்றன. அவர் உடலில்சேர்த்து வைக்கப்பட்ட கிளைகோஜென் (Glycogen)தீர்ந்து விட்டதென வைத்துக் கொள்வோம். இப்பொழுது என்னாகும்?100 நல்ல சர்க்கரை இன்சுலின் வாங்கிக்கொண்டு செல்லுக்குள்ளே புகும். 400 கெட்ட சர்க்கரை இன்சுலின் கிடைக்காததால் சிறுநீர் வழியாக வெளியேறும். அட்ரினல் சுரப்பி, கிளைகோஜனைத் தேடும். ஆனால்,கிளைகோஜன் இல்லையென்பதால் இரத்தத்தில் தேவையான அளவு சர்க்கரை விநியோகம்(குளுக்கோஸ் சப்ளை)செய்ய முடியாது. எனவே, செல்களுக்குள் சர்க்கரைபோகாததால் செல்கள் மயக்கமடையும். நோயாளி மயக்கமடைந்து விடுவார்.

இந்த நேரத்தில் அவர் இரத்தத்தில் சர்க்கரை அளவைச் சோதனை செய்தால் குறைவாக இருக்கும்.மருத்துவர்கள் உடனே "லோ சுகரால் மயக்கம் வந்து விட்டது" என்று கூறுகிறார்கள்.

ஆனால், உண்மையில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவருக்கு மயக்கம் வரவில்லை. உடலில் கிளைகோஜன் இல்லையென்பதால்தான் மயக்கம் வந்தது.

உதாரணம் இரண்டு, இரத்தத்திலுள்ள 100 நல்ல சர்க்கரை செல்களுக்குள் போய்விட்டது; ஆனால், 400 கெட்ட சர்க்கரை இரத்தத்திலேயே இருக்கிறது;இன்னும் சிறுநீராக வெளியே செல்லவில்லை என வைத்துக் கொள்வோம். இந்த நிலையிலும்,செல்களுக்குச் சர்க்கரை தேவைப்படும்பொழுது கிளைக்கோஜன்இல்லையென்ற காரணத்தினால் மயக்கம் வரும். இப்பொழுது அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரை400 இருக்கும். மருத்துவர்கள் சர்க்கரை அதிகமாக இருந்ததால்தான்இவருக்கு மயக்கம் வந்து விட்டது என்று கூறுவார்கள்.ஆக, சர்க்கரை கூடுவதாலோ, குறைவதாலோ ஒருவருக்கு மயக்கம் வருவதில்லை.

உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கிளைகோஜன் என்கிற செறிவூட்டப்பட்ட சர்க்கரை தீரும்பொழுது மட்டுமே மயக்கம் வருகிறது.
கெட்ட சர்க்கரை சிறுநீர் வழியாகவெளியே போனால்அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. உடலில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிமட்டுமே நாம் கவலைப்பட வேண்டும்.
எனவே, சர்க்கரைப் பரிசோதனைஎன்பது ஒரு தேவையில்லாத வேலை.

சிலருக்குச் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். ஆனால், மயக்கம் போட மாட்டார். ஏனென்றால், கிளைக்கோஜென் சப்ளை ஆகி விடும். சிலருக்குச் சர்க்கரை அளவு அதிகமாகஇருக்கும். மயக்கம் போட மாட்டார். ஏனென்றால், அது நல்லசர்க்கரையாகவும் இருக்கலாம். சிலர் மருத்துவமனைக்குச் சென்று சர்க்கரைப் பரிசோதனை செய்வார்கள். பரிசோதனை செய்வதற்கு முன்பு தெம்பாக இருப்பார்கள். பரிசோதனை ரிப்போர்ட்டில் 300 இருக்கிறது, 400 இருக்கிறது என்று தகவல் அறிந்தவுடன் உடம்பில் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்படும். இதற்குக்காரணம் என்னவென்றால், சர்க்கரை அளவு மிதமாக இருக்க வேண்டுமென்று நாம் புத்தியில்பதிவு செய்துள்ளோம். இதற்கு மேலேயும், கீழேயும் அளவு காட்டும்பொழுது நமதுபுத்தி நம் மனதைக் கெடுத்து, மனம் உடலைக் கெடுத்து நோய் உண்டாக்குகிறது.

உலகத்தில் யாருக்கும் சர்க்கரை மிதமாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது;இருக்காது; இருக்கத் தேவையில்லை. சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு அதிகமாகஇருக்கும். நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் கிடைக்கும். கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின்கிடைக்காது. தேவையான சர்க்கரைகள் செல்லுக்குள்ளே போகும்.கெட்ட சர்க்கரைகள் சிறுநீராகப் போகும். அளவுக்கதிகமான சர்க்கரைகள்கிளைக்கோஜென்னாக மாறும். இந்த வேலைகள் உடலில் நடந்து கொண்டிருக்கும்போது சர்க்கரையை யார் அளந்து பார்த்தாலும் அது முன்பின் முரணாகத்தான் இருக்குமேதவிர,சீராக இருக்காது.

சில நேரங்களில், உடலுக்கு நோய்கள் வரும்பொழுதோ, உடலில் வேறு சில முக்கியமான வேலைகள் இருக்கும்பொழுதோ கெட்ட சர்க்கரையை சிறுநீராக அனுப்புவது, நல்லசர்க்கரையை கிளைக்கோஜென்னாக மாற்றுவது ஆகியவை தாமதமாகவும்வாய்ப்புள்ளது. இந்தச் சமயங்களில் நாம் சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்து அதிகமாக உள்ளது,குறைவாக உள்ளது என்று பயப்பட்டால் இந்த பயம்தான் நோயே தவிர,இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு நோய் கிடையாது.

செல்களுக்குச் சர்க்கரையின் அளவு அதிகமாகத்தேவைப்படும்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். செல்களுக்குச் சர்க்கரையின் அளவு குறையும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகும். இதை யாரும் ஒரு குறிப்பிட்ட அளவு வைத்து ஆராய்ச்சி செய்யக் கூடாது!

நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்கள் சர்க்கரை அளவுசீராக இருக்கிறது. ஒரு பாம்பை உங்கள் மடியில் போட்டால் பாம்பைப் பார்த்துபயப்பட்ட அடுத்த விநாடி உங்கள் சர்க்கரை அளவைச் சோதித்துப்பாருங்கள். ஹைசுகர் எனச் சொல்லப்படும் அளவையும் தாண்டியிருக்கும். உடலுக்கு அறிவில்லையா? தேவையில்லாமல் ஏன் இப்படி அதிகப்படுத்துகிறது? ஏனென்றால், ஒரு வேளை பாம்பு கடித்தால், விஷத்தைத் தூக்கி வெளியே வீசுவதற்கு உடம்பிலுள்ள அனைத்து செல்களுக்கும் சர்க்கரை தேவைப்படும். அதனால், சேர்த்து வைக்கப்பட்டசர்க்கரையை இரத்தத்தில் அனுப்புகிறது. பாம்பு வெளியில் சென்ற பிறகு ‘அப்பாடா’ என்று உங்கள் மனதிலுள்ள பயம் தெளிவடைந்தால் ஒரு 10 நிமிடத்திற்குப் பிறகுசர்க்கரையின் அளவு ஒழுங்காகி விடும்.

இப்பொழுது சொல்லுங்கள்! சர்க்கரை ஏறி இறங்கியதால் உங்களுக்குநோய் வந்ததாஇல்லை, பாதுகாப்பு வந்ததா? இதே போல் சர்க்கரை அளவு சரியாக இருக்கும் ஒருவரின் கையில் ஒரு கத்தியால் சிறியதாக ஒரு காயத்தை ஏற்படுத்தினால் அடுத்த விநாடி, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏன்? காயம்பட்டஇடத்திலுள்ள செல்கள் தங்களைக் குணப்படுத்திக் கொள்வதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

உடலிலுள்ள செல்கள் வேலை செய்வதற்காக அல்லது நோயைக் குணப்படுத்துவதற்காக சர்க்கரை, B.P ஆகியவற்றின் அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சோதித்துப் பார்த்து அதிகமாகியிருக்கிறது இது நோயெனக்கூற முடியுமா?

சீரான சர்க்கரை அளவு என்பது ஆபரேஷன் செய்யும்பொழுதும்,அவசரக் காலத்திலும் மட்டுமே செல்லுபடியாகும்.
அது ஏன் என்பது அடுத்த வாரம்…

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author

1 Comment

  1. vettriyarasan

    நல்ல சக்கரை,கெட்ட சக்கரை என்பதை எப்படி கண்டுபிடிக்கமுடியும்? நல்ல சக்கரை எதெதில் இருக்கும்.கெட்ட சக்கரை என்பதை எப்படி எப்படி தவிர்க்கலாம். எந்தெந்த காய்கறிகளில், பழங்களின் நல்ல, கெட்ட சக்கரை உள்ளது என்பதை விளக்கவும்

Comments are closed.