அனாடமிக் தெரபி (23)

சர்க்கரை நோயாளிகள் காலை இழப்பது ஏன்?

இப்படி, நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக அதிகமாக உறுப்புக்களை வெட்டி எடுப்பார்கள். கடைசியாக, மாத்திரையின் டோஸ் அதிகமாகி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் டோஸை உயர்த்த முடியாது என்கிறபோது, இன்சுலின் என்கிற திரவத்தை ஊசி வழியாகச் செலுத்தச் சொல்வார்கள்.

மாத்திரைக்கும் இன்சுலினுக்கும் என்ன வித்தியாசம் என்றால், மாத்திரை கணையத்திடம் இருக்கும் இன்சுலினை எடுத்துக் கெட்ட சர்க்கரைக்குக் கொடுக்கிறது. இன்சுலின் மருந்தோ தானே கணையத்தின் வேலையைச் செய்து விடுகிறது. தானே கெட்ட சர்க்கரைகளை அங்கீகரித்து விடுகிறது.

இதற்காக எலி, பன்றி போன்ற விலங்குகளிடம் சுரக்கும் இன்சுலினை எடுத்துக் கடைகளில் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி நமது உடம்புக்குள் செலுத்திக் கொள்கிறோம்.

இப்படி, சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, இன்சுலின் ஆகியவற்றை யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறோமோ அவர்கள் எல்லாருமே கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரை என்கிற பொய்ச் சான்றிதழைக் கொடுத்து உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் கெடுக்கிறோமே தவிர, இதனால் எந்தவொரு நன்மையும் கிடையாது.

சர்க்கரை நோயாளிகளுக்குக் காலில் மதமதப்பு, எரிச்சல், குத்துதல், குடைதல் போன்றவை ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது என்றால், நமது உடல் ஒரு பாட்டில் போன்றது. இரத்தம் நீர் போல அதில் நிறைந்திருக்கிறது. ஒரு பாட்டிலில் தண்ணீர் அதிக நேரம் எந்த இடத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்? பாட்டிலின் அடிப்பகுதியில்தான், இல்லையா? அது போல, உடலிலுள்ள இரத்தம் முதலில் உள்ளங்காலை நோக்கித்தான் பாய்ந்து செல்லும். புவியீர்ப்பு விசையின் காரணமாக நமது உடலில் உள்ளங்கால்தான் இரத்தத்தில் உள்ள பொருட்களை முதன் முதலில் எடுக்கும். எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரை, இன்சுலின் மூலமாகக் கிடைக்கும் கெட்ட சர்க்கரைகளை முதன்முதலில் உள்ளங்கால்தான் சாப்பிடுகிறது. கெட்ட சர்க்கரையைச் சாப்பிடுவதால் உள்ளங்காலுக்கே முதன் முதலில் நோய் ஏற்படுகிறது. இது உள்ளங்காலில் இருக்கும் செல்கள் கெட்டுப் போவதால் ஏற்படுவதில்லை; செத்துப் போவதால் ஏற்படுகிறது!

நாம் உள்ளங்காலில் வலி வந்தவுடன் யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம், அக்குபஞ்சர், நியுரோ தெரபி, முத்ரா, ரெய்க்கி போன்ற மருந்தில்லா மருத்துவங்களுக்குச் செல்வோம். ஆனால், மருந்து மாத்திரையை மட்டும் விடமாட்டோம். சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த மருந்தில்லாத மருத்துவத்தை நாம் திட்டுவோம். "நான் யோகாவுக்குச் சென்றேன். அக்குபஞ்சருக்குச் சென்றேன். ஆனால், கால் வலி குறையவில்லை" என்று. நீங்கள் மருந்து மாத்திரையை நிறுத்தினீர்களா? சர்க்கரை மருந்து, மாத்திரைகளை நிறுத்தாத வரையில் எந்த மருந்தில்லாத வைத்தியத்தாலும் உங்கள் நோயைக் குணப்படுத்த முடியாது. மருந்து மாத்திரைகள் மூலமாக உடலைக் கெடுக்கும் வேலையை மட்டும் சரியாகச் செய்து விட்டு மருந்தில்லாத வைத்திய முறைகளை ஏன் குறை கூறுகிறீர்கள்?

கால் மதமதப்பு, எரிச்சல் உள்ள நோயாளிகளுக்குச் சிறிது காலத்திற்குப் பிறகு காலில் புண் தோன்றும். உடலில் எந்த இடத்தில் புண் வந்தாலும் ஆறிவிடும். ஆனால், உள்ளங்காலில் வரும் சர்க்கரை நோய்ப் புண் மட்டும் ஆறாது. ஏனென்றால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாத செல்கள் புண் வந்தால், நோய் வந்தால் எப்படித் தம்மைக் குணப்படுத்திக் கொள்ளும்? பிறகு, அந்தப் புண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கும் நாம் அதே மருத்துவரிடம்தான் செல்கிறோம்.

அதன் பிறகு, கட்டை விரலிலுள்ள செல்கள் அழுகிப் போய்க் கட்டை விரலுக்கு நோய் ஏற்படும். மருத்துவரிடம் சென்று காண்பித்தால், "உங்களுக்கு சுகரினால்தான் கட்டை விரல் அழுகிப் போச்சு" என்று கட்டை விரலை அறுத்து எடுப்பதற்கு நாள் குறிப்பார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று "நான் ஆரம்பத்தில் இருந்து உங்களிடம்தான் வருகிறேன். நீங்கள்தான் சர்க்கரை நோய் வந்துவிட்டதென்று முதலில் சிறிய மாத்திரையைக் கொடுத்தீர்கள். நானும் சாப்பிட்டேன். சுகரை டெஸ்ட் செய்யச் சொல்லி எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். நானும், தினமும் டெஸ்ட் செய்து வந்தேன். மருந்து மாத்திரையின் டோஸ் அதிகமானது. நானும், அதிகப்படுத்திக் கொண்டேன். அன்று முதல் இன்று வரை தினமும் சரியாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். பிறகு, உடலில் பல உறுப்புகளில் நோய் வருகிறதென்று புதுப் புது மருந்து மாத்திரைகளைக் கொடுத்தீர்கள். பிறகு, இன்சுலின் என்ற ஊசியும் கொடுத்தீர்கள். தினமும் வாக்கிங் போகச் சொன்னீர்கள். நான் போய்க் கொண்டிருக்கிறேன். இனிப்பு சாப்பிடக் கூடாதென்று கூறினீர்கள். நான் கடந்த பத்து வருடமாக இனிப்பு சாப்பிடுவதில்லை. நீங்கள் சொன்ன அனைத்தையும் ஒழுங்காகச் செய்தேனே, என்னுடைய கட்டை விரல் ஏன் அழுகிப் போனது?" என்று யாராவது கேட்டீர்களா?

உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்கிறேன். உங்கள் மருத்துவர் சொன்ன அனைத்தையும் நீங்கள் ஒழுங்காகச் செய்ததால்தான் உங்கள் கட்டை விரல் அழுகிப் போய் விட்டது.

கட்டை விரலை எப்பொழுது வெட்டி எடுக்கிறீர்களோ, தயவு செய்து அப்போதிருந்தே பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் காலை வெட்டியெடுக்க வேண்டியது வரும்.

ஏனென்றால், நீங்கள் சாக்கரை மாத்திரையை மட்டும் விடுவதில்லையல்லவா ? அடுத்து மூட்டு வரை வெட்ட வேண்டியது வரும். அடுத்தது, தொடை அருகே வெட்ட வேண்டியது வரும். இப்படி எத்தனையோ பேர் கால்களை வெட்டிக்கொண்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள்.

இன்னுமாங்க புரியல, சர்க்கரை நோயை எந்த மருந்து மாத்திரையாலும் குணப்படுத்த முடியாது என்று?

இதற்கு ஒரேயொரு தீர்வு, உணவிலுள்ள கார்போ ஹைட்ரேட்டை வாய், வயிறு, சிறுகுடல் ஆகிய மூன்று இடங்களிலும் ஒழுங்காக ஜீரணம் செய்து தரம் வாய்ந்த, வீரியம் வாய்ந்த நல்ல சர்க்கரையாக மாறச் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்வது மட்டுமே! இந்த ஒரு சுலபமான வித்தையைத் தெரிந்து கொள்வது மூலமாக மட்டுமே சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும்.
நமது சிகிச்சையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாப்பிடக் கூடாதென்கிறார்களே? பத்து வருடமாகச் சாப்பிடாமல் இருக்கிறீர்களே உங்கள் நோய் குணமாகி விட்டதா? சர்க்கரை நோய்க்கும், இனிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, நமது சிகிச்சையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை வியாதி குணமாகும்.

அதாவது, முன்பே கூறியது போல், சர்க்கரை அளவு அதிகரிப்பதால் நோய் வருவதில்லை. சர்க்கரையின் தரம் குறைவதால் மட்டுமே நோய் வருகிறது. எனவே, நமது சிகிச்சையில் நாம் இனிப்பு, எண்ணெய்ப் பலகாரம், உருளைக்கிழங்கு போண்டா, சாப்பாடு, சப்பாத்தி எதுவாக இருந்தாலும் எப்படிச் சாப்பிட வேண்டுமென்கிற வித்தையைக் கற்றுக் கொண்டு அதன்படி சாப்பிட்டால் நல்ல சர்க்கரை இரத்தத்தில் கலக்கும்பொழுது இயற்கையாகவே இன்சுலின் சுரந்து விடும். இதனால், சர்க்கரை நோயை உடனடியாகக் குணப்படுத்த முடியும்.

எனவே, சர்க்கரை அதிகமாக உள்ளதென்று தயவு செய்து யாரும் பயப்பட வேண்டாம்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்..
.

About The Author