அனாடமிக் தெரபி (33)

உடலில் உள்ள செல்களுக்கு அறிவு கெட்டுப்போதல்! நோய்வாய்ப்படுதலின் இறுதிக்கட்டம்!:

நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தனித்தனி அறிவு உண்டு. இந்த அறிவு சீராக இயங்கிக் கொண்டிருக்கும்போது நாம் ஆரோக்கியமாக இருப்போம். அந்த அறிவு கெட்டுப்போகும்போது அது நோயாக மாறுகிறது. நமது உடலில் உள்ள செல்களுக்கும் அறிவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது. அதனால் ஏற்படுபவை உயிர்க்கொல்லி நோய்கள். குறிப்பாக புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ்.

செல்களுக்கு அறிவு திடீர் என நேரடியாகக் கெட்டுப்போகாது. கடந்த நான்கு வாரங்களாக நாம் பார்த்து வருவது போல், முதலில் இரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறையும். பின்னர், இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் போகும். பிறகு, இரத்தத்தின் அளவும் குறையும். அப்புறம், மனது கெட்டுப்போகும். இந்த நான்கு நோய்களும் வந்து அவற்றுக்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், அல்லது இவற்றுக்குத் தவறான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் உயிர்க்கொல்லி நோய்களான புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவை வரும்.

உடலில் இரண்டு வகையான அறிவு உள்ளது. ஒன்று, நோய்க்கிருமிகளை அழிக்கும் அறிவு. இரண்டாவது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரு குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்கும் அறிவு.

இவற்றுள், முதல் அறிவு கெட்டுப்போனால் எய்ட்ஸ். இரண்டாம் அறிவு கெட்டுப்போனால் புற்றுநோய்!

நமது உடலில் எந்த நோய்க்கிருமி எப்போது உள்ளே சென்றாலும் தைமஸ் சுரப்பி, கல்லீரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜைகள், இரத்தத்தின் வெள்ளையணுக்கள், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளும் ஒன்று சேர்ந்து அந்த நோய்க்கிருமியை அழித்து விடும். நமது உடலில் ஒரு நோய்க்கிருமி உள்ளே வந்தால் இந்த உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த நோய்க்கிருமியின் தன்மை என்ன, அதை எப்படி அழிக்க முடியும், அதற்கு என்ன மருந்து வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து அந்த மருந்துக்குத் தேவையான மூலப்பொருட்களை இரத்தத்தில் இருந்து எடுத்து, அந்த மருந்தைத் தயார் செய்து நோய்க்கிருமிகளை அழித்து விடுகின்றன.

பிறந்த குழந்தைக்கு என்ன தைரியத்தில் தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமிகளை உடலுள் அனுப்புகிறார்கள் என்றால், நமது உடலில் மேற்படி அறிவு உள்ளது; அந்த அறிவு எந்த நோய்க்கிருமியாக இருந்தாலும் அழிக்கும் என்ற நம்பிக்கையில்தான்.

இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உலகில் எந்த நோய்க்கிருமியாலும் மனிதனுக்கு நோய் வராது. நம் உடலில் இந்த அறிவு இருக்கும் வரை. அந்த அறிவும் கெட்டுப்போவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படிக் கெட்டுப்போனால் என்ன ஆகும்? நோய்க்கிருமி உடலுக்குள் சென்றவுடன் அதை அழிப்பதற்கு அறிவு இல்லை என்பதால் நோய்க்கிருமிகள் நன்றாகச் சாப்பிட்டு வளர்ந்து குண்டு குண்டாக ஆகி உடல் உறுப்புகள் அனைத்தையும் சேதப்படுத்தும்.

இப்படி நம் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்க்கும் அறிவு கெட்டுப்போவதால் உறுப்புகள் பாதிப்படைவதற்கு எய்ட்ஸ் என்று பெயர்.

அப்படியானால் புற்றுநோய்?… அது பற்றி அடுத்த வாரம்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்...

About The Author