அனாடமிக் தெரபி (46)

2. உணவில் எச்சில் கலக்க வேண்டும்

சாப்பிடும் பொழுது உணவில் எச்சில் கலந்து சாப்பிட வேண்டும். எச்சில் கலந்த உணவு மட்டுமே நல்ல பொருளாக இரத்தத்தில் கலக்கிறது. எச்சில் கலக்காத உணவு கெட்டப்பொருளாக இரத்தத்தில் கலக்கிறது. எச்சிலில் நிறை நொதிகள் (என்சைம்) உள்ளன. உணவில் உள்ள மூலக்கூறுகளைப் பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன.

எச்சிலால் கலக்கப்பட்ட உணவு மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும். எச்சிலால் கலக்கப்படாத ஒரு உணவு வயிற்றுக்குள் செல்லும்பொழுது அது கெட்ட பொருளாகவும், கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இல்லை நாங்கள் எச்சில் கலந்துதான் சாப்பிடுகிறோம் என்று எல்லோரும் சொல்வோம். ஆனால் உண்மையில் எச்சில் சரிவரக் கலப்பது கிடையாது.

சாப்பிடும்பொழுது உணவை மெல்லும்பொழுது யார் யார் எல்லாம் உதட்டைப் பிரித்து மெல்லுகிறோமோ அவர்களுக்கு எச்சில் கலப்பது கிடையாது. மெல்லும்பொழுது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்பொழுதுதான் எச்சில் கலக்கும். உதட்டைப் பிரித்து மெல்லுவதற்கும், உதட்டை மூடி மெல்லுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், சாப்பாட்டை ஒரு பந்து போல கற்பனை செய்யுங்கள். எச்சில் ஒரு பந்து, உதட்டைப் பிரித்துச் சாப்பிடும் பொழுது காற்றுப்பந்து வாய்க்குள் சென்று சாப்பாட்டிற்கும் எச்சிலுக்கும் இடையில் தடையாக இருந்து ஜீரணத்தை கெடுக்கிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்கு காற்று எதிரி. எனவே, தயவு செய்து இனிமேல் எப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், உணவை வாய்க்குள் அனுப்பவதற்கு மட்டும் உதட்டை பிரியுங்கள். உணவு வாயுக்குள் நுழைந்த உடன் உதட்டை பிரிக்காமல் மென்று முழுங்கும் வரை உதட்டை பிரிக்காமல் இருங்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் மிகவும் குறைவு. ஏனென்றால் இந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு உதட்டை மூடிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. சில வெளிநாட்டுக்காரர்களும் நம்மூரில் வந்து சாப்பிடும்பொழுது வேடிக்கை பாருங்கள்! அவர்கள் உதட்டைப் பிரிக்காமல் மென்று சாப்பிடுவார்கள். ஆனால் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உதட்டைப் பிரித்து சாப்பிடுவதன் மூலமாக இந்த நாடுகளில் அதிகமாக சர்க்கரை நோய் இருக்கிறது.

உடனே சில நாடுகள் புத்திசாலி என்றும் சில நாடுகள் முட்டாள்கள் என்றும் தவறாக நினைத்து விடாதீர்கள். சில நாடுகளில் மனரீதியான நோய்களுக்கு அதிகமாக மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உதட்டை மூடிச் சாப்பிடும் அனைத்து நாடுகளிலும் இருக்கும் மக்கள் அனைவரும் மனரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டு மனநோயாளி என்ற முத்திரை குத்தப்பட்டு அனைவரும் தினமும் பல மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். சில நாடுகளில் உடல் ஒழுங்காக இல்லை. ஆனால், மனது ஒழுங்காக இருக்கிறது. சில நாடுகளில் மனது ஒழுங்காக இல்லை. ஆனால், உடல் ஒழுங்காக இருக்கிறது. எனவே, மருந்து மாத்திரை கம்பெனிகளுக்கு எல்லா நாட்டிலும் வியாபாரம் திருப்தியாக நடக்கிறது. எனவே, தயவு செய்து இனிமேல் ஒவ்வொரு வாய் உணவையும் உதட்டை மூடி மென்று விழுங்குங்கள்.

உதட்டை மூடிச் சாப்பிடுவதால் நேரம் அதிகமாகும் என்று சந்தேகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரம் அதிகமாகாது, குறைவுதான் ஆகும். நீங்கள் ஒரு சப்பாத்தியை வாயில் வைத்து உதட்டைப் பிரித்து 40 முறை மெல்லுங்கள். சப்பாத்தி, சப்பாத்தி போலவே இருக்கும். கூழ் போல ஆகாது. ஆனால் உதட்டை மூடி நான்கு முறை மெல்லுவதால். சப்பாத்தி கூழ் போல மாறிவிடும். முழுங்க வேண்டிய வேலையே இல்லாமல் மைசூர்பா போல வழுக்கிக் கொண்டு உள்ளே செல்லும். உதட்டைப் பிரித்து ரொம்ப நேரம் சாப்பிடுவதை விட உதட்டை மூடி கொஞ்ச நேரத்திலேயே சாப்பிட்டு முடித்து விடலாம். எப்பொழுது உதட்டை மூடி மெல்லுகிறோமோ எச்சிலுக்கு ஒரே சந்தோஷம். காற்று என்ற எதிரி இல்லை என்பதால் சீக்கிரமாக உணவில் உள்ள அனைத்து மூலக்கூறுகளையும் பிரித்து அதை நல்லபடியாக ஜீரணம் செய்கிறது.

இந்த முறையில் சாப்பிடும்பொழுது ஒரு சின்ன சிக்கல் ஏற்படும். தாடை ஒரு வாரத்திற்கு நன்றாக வலிக்கும். ஏனென்றால் பல வருடங்களாக இல்லாத புதுப்பழக்கம் அல்லவா.. அப்படித்தான் வலிக்கும். அந்த வலியைத் தாங்கிக்கொண்டு ஒரு வாரம் பொறுமையாக இருந்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக இருக்கலாம். எனவே, சிகிச்சையில் இரண்டாவது மிக மிக முக்கியமான விஷயம் சாப்பிடும் பொழுது வடை, போண்டா, பொங்கல், ஊத்தாப்பம் எது எப்பொழுது யார் சாப்பிட்டாலும் உதட்டை மூடி மென்று முழுங்கும் வரை உதட்டைப் பிரிக்க கூடாது.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author