அறிவியல் முத்துக்கள் (1)

கணினிச் சில்லுகள் (Computer Chips)

Computer Chipsகணினிச் சில்லுகள் என்பன மிக நுண்ணிய சிலிகான் துண்டுகளாகும்; இத்துண்டுகளில்தான் மின்னணுச் சுற்றுகளை (electronic circuits) அமைப்பர். இம்மின்னணுச் சுற்றுகள் ஒருங்கிணைந்த சுற்றுகள் (Integrated Circuits – IC) எனப்படும். சில்லுகளை உருவாக்க ஒற்றைப் படிகம் கொண்ட தூய சிலிகான் பயன் படுத்தப்படுகிறது. இச்சிலிகானின் அணுக்கள் ஒரே சீராக பிணைக்கப் பட்டிருப்பதால் எளிதாக மின் அமைப்பைச் சில்லுகளில் பதிக்க முடியும் என்பதே அதனைப் பயன்படுத்துவதற்குக் காரணம். உருளை வடிவ ஒற்றைப்படிக சிலிகான் 0.5 மி.மி. தடிமன் கொண்ட சிறு சிறு வட்டத் தகடுகளாக நறுக்கப்படும். பின்னர் சில வேதிப் பொருட்கள் அல்லது புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி மின் சுற்றுகளை அமைப்பதற்கான வழித் தடங்கள் அதில் செதுக்கப்படும். பிறகு வட்டத் தகடுகள் சிறிய சில்லுகளாக வெட்டப்பட்டு, அவை களிமண் போன்ற பொருளில் பதிக்கப்பெற்றுப், பொன்னிழைக்கம்பியால் கட்டப்பெறுகின்றன.

இரத்ததில் சர்க்கரையின் அளவு

நமது உணவில் உள்ள சர்க்கரையானது வளர்சிதை மாற்றத்தின் (metabolism) வாயிலாக குளுகோசாக மாற்றம் பெற்று இரத்தத்தோடு கலக்கிறது. இதனை அளப்பதற்குப் பொதுவாக நொதிகள் (enzymes) எனப்படும் வேதியியல் பொருள்கள் (chemicals) பயன்படுத்தப் படுகின்றன. குளுகோஸ் ஆக்சிடேஸ் மற்றும் குளுகோஸ் பெராக்சைட் எனப்படும் நொதிகள் குளுகோசை குளுகோனிக் அமிலமாகவும் ஹைட்ரஜன் பெராக்சைட் ஆகவும் மாற்றுகின்றன; இதன் விளைவாக சிகப்பு வண்ணப் பொருள் ஒன்று உற்பத்தி செய்யப்படுவதோடு, இவ்வண்ணத்தின் அடர்த்தியும் கருவி ஒன்றினால் அளக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட அடர்த்தியுள்ள குளுகோஸ் மாதிரியும் (sample) செலுத்தப்படுகிறது. இந்த இரண்டு மாதிரிகளின் அளவைக் கொண்டு இரத்ததில் உள்ள குளுகோசின் அளவு கணக்கிடப்படுகிறது. சாதாரணமாக இரத்ததில் குளுகோசின் அளவு 60-100 mg% இருக்க வேண்டும்.”

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    A small correction. Glucose oxidase is an enzyme (nodhipporuL) but glucose peroxide is not an enzyme. The color reaction that is measured is simply due to the reaction of glucose (in the blood) and oxygen catalyzed by the enzyme Glucose oxidase. The products are gluconic acid and hydrogen peroxide. Hydrogen peroxide then reacts with another chemical such as dianisidine to oxidize the latter to a chromogen (color producer) which is measured and the glucose concentration is calculated against a calibrated curve in the glucometer. Currently an electrochemical method is used to measure the current produced by the reaction between glucose (in the blood), glucose dehydrogenase (enzyme), and potassium ferricyanide. No hydrogen peroxide and no color reaction but just electron flow is measured.

Comments are closed.