ஆண்களுக்கான முகப் பூச்சுகள்

பெண்களுக்கான முகப்பூச்சுகள் தெரியும், அதென்ன ஆண்களுக்கான முகப்பூச்சுகள் என்று ஆச்சரியமடைபவர்கள் கண்டிப்பாக மேலே படியுங்கள்! நல்ல சத்தான உணவு, நாள் தவறாத உடற்பயிற்சி, சிகை அலங்காரம், நல்ல நேர்த்தியான ஆடைகள் இவற்றோடு தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் வேலை முடிந்துவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர் ஆண்கள். ஆனால், தினமும்/அடிக்கடி முகச்சவரம் செய்வதாலேயே அவர்களுடைய சருமம் கடினமடைந்துவிடுகிறது. முகப்பூச்சினைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் கடினத்தன்மை குறைந்து நாளடைவில் மென்மையான சருமத்துடன் அழகாகத் திகழ்ந்திடலாம்.

எண்ணெய்ச் சருமத்திற்கேற்ற முகப்பூச்சு

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – சிறிதளவு,
முட்டை – 1,
ஆப்பிள் – ½,
எலுமிச்சைச் சாறு – 1 மேஜைக்கரண்டி.

செய்முறை :

வேகவைத்து ஆறிய ஓட்ஸுடன் முட்டையின் கரு, நன்கு மசித்த ஆப்பிள், எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம்.

வறண்ட சருமத்திற்கேற்ற முகப்பூச்சு

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – சிறிதளவு,
முட்டை – 1,
பாதாம் எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி.

செய்முறை :

வேகவைத்து ஆறிய ஓட்ஸுடன் முட்டையின் மஞ்சள் கரு, பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம்.

பொதுவான முகப்பூச்சுகள்

* 2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம்.

* நன்கு மசித்த வாழைப்பழத்துடன், ஸ்ட்ராபெர்ரி மற்றும் அன்னாசிச் சாறு சிறிதளவு சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம்.

* நன்கு மசித்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவலாம்.

* முட்டையின் மஞ்சள் கருவுடன் 1 மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம்.

* 1 மேஜைக்கரண்டி தக்காளி விழுதுடன் 1 மேஜைக்கரண்டி வேகவைத்த ஓட்ஸ், 1 மேஜைக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம்.

* நன்றாக வேகவைத்து விழுதாக அரைத்த சோளத்தை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம்.

About The Author

1 Comment

  1. ganesh

    இது முகப்பூச்சு மதிரி தெரியல இதோ சமயல் குறிப்பு மதிரி இருக்கு

Comments are closed.