இது என் காதல் சொல்லும் கவிதை இல்லை!

காதல் சொல்லக் கவிதையா? கவிதை சொல்லக் காதலா…?
காதலைச் சொல்லக் கவிதை பல உண்டு…
கவிதையாய் நின்ற காதல் பல உண்டு…
கவிதை சொல்ல நான் கவிஞன் இல்லை
இது என் காதல் சொல்லும் கவிதை இல்லை
கவிதை இன்றிக் காதல் இல்லை
உன் காதல் இன்றி என் கவிதை இல்ல!
காற்றில் கரைந்து சுவாசம் கலந்தது கூந்தல் மணம்
சிறகு இன்றிக் காற்றில் பறந்தது எந்தன் மனம்!
உன்னை பார்க்கத்தான் பார்க்கிறேன்!
உன் குரல் கேட்கத்தான் கேட்கிறேன்!
காதல் சொல்லத்தான் நினைக்கிறேன்
கண்கள் கசிய நிற்கிறேன்
கைகளில் உன் மண அழைப்பிதழுடன்…
அப்படியே போய் விடு!… அண்ணன் என்று சொல்லி விடாதே!

About The Author