இது ராணுவச் சிரிப்பு (3)

துப்பாக்கி சுடும் பயிற்சியில் அந்த வீரன் மிக மோசமாகச் செய்திருந்தான். ஒரு தடவைகூடச் சரியாகச் சுடவில்லை. ஆத்திரமடைந்த பயிற்சியாளர் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்ட, அந்த வீரன் மனமொடிந்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறினான்.

பயிற்சியாளர் அவனிடம், "நீ துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதென்றால் ஒரு குண்டை மட்டும் நம்பாதே! நிறைய குண்டுகள் வைத்துக் கொள்” என்று அறிவுரை சொன்னார்.

*****

ஆர்மியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவரிடம் அவரது பேரன் கேட்டான், "தாத்தா, நீங்கள் ஆர்மியில் காவல் காக்கும் பணியில் இருக்கும்போது பயப்படுவீர்களா?" என்று.

தாத்தா சொன்னார், "முதலில் பயமாகத்தான் இருக்கும் – தூங்கினபிறகு சரியாகிவிடும்"

*****

அவன் ராணுவத்தில் பணிபுரியும் அப்பா பற்றி நண்பனிடம் பெருமை அடித்துக்கொண்டான், "என் அப்பா பெரிய இஞ்சினியராக்கும், ஆல்ப்ஸ் மலை தெரியுமா உனக்கு? அதை என் அப்பாதான் கட்டினாராக்கும்!" என்றான்.

மற்றவனுடைய அப்பா கடற்படையில் வேலை செய்பவர். அவன் சொன்னான் "உனக்கு Dead Sea தெரியுமா, அதைக் கொன்றதே என் அப்பாதான்"

*****

புதிதாகக் காவலுக்கு நிற்க வைக்கப்பட்டிருந்தான் அந்த சிப்பாய். போதுமான அடையாள அட்டை இல்லாமல் யார் வந்தாலும் உள்ளே விடக்கூடாது என்று அவனுக்கு கட்டளை இடப்பட்டிருந்தது.

அப்போது ஒரு மேஜர் ஜெனரல் காரில் அங்கு வந்தார். அவரது காரை ஓட்டிவந்த டிரைவர், வந்திருப்பது மேஜர் ஜெனரல் வீலர் என்று கூறினான். காவலில் இருந்த சிப்பாய் அடையாள அட்டையில்லாமல் யாராயிருந்தாலும் உள்ளே விட முடியாது என்று கண்டிப்பாகக் கூற வாக்குவாதம் வலுத்தது.

மேஜர் ஜெனரல் டிரைவரிடம், ”நீ பாட்டுக்கு வண்டியை உள்ளே செலுத்து” என்று கட்டளையிட, காவல் காத்த சிப்பாய் ”அப்படி உள்ளே நுழைந்தால் எனக்கு சுடுவதற்கு அதிகாரமிருக்கிறது” என்றான்.

மேஜர் ஜெனரல் மறுபடியும் தன் டிரைவரை உள்ளே காரைக் கொண்டு போகும்படிக் கூற புதிதாக வந்திருந்த அந்த சிப்பாய் காருக்கு அருகே வந்து, "ஜெனரல், நான் வேலைக்குப் புதுசு – இப்போது நான் யாரைச் சுட வேண்டும், உங்களையா அல்லது காரை ஓட்டும் டிரைவரையா?" என்று கேட்டான்.

மூலம்: ஆஹாஜோக்ஸ்.காம்

About The Author

1 Comment

  1. sun

    இது சிரிக்க இல்லை சிந்திக்க தான் செய்யவைக்கிறது

Comments are closed.