இத்தாலியன் வெஜ்ஜி பீட்சா

தேவையான பொருட்கள் :

 
 
 

பீட்சா பேஸ்:
 மைதா மாவு – 2கப்
ஈஸ்ட் – 1 டே.ஸ்பூன்
சர்க்கரை – 1 டீ.ஸ்பூன்
உப்பு – 1 டீ.ஸ்பூன்
எண்ணை – 3 டே.ஸ்பூன்
 
சாஸ்:

தக்காளி – 2
பூண்டு – 2 பல்
மிளகாய் – 1
ஓரேகனோ – 1 டீ.ஸ்பூன்
இத்தாலியன் சீசனிங் – 1 டீ.ஸ்பூன்
உப்பு – ½ டீ.ஸ்பூன்

டாபிங்:

சீஸ்[மாசரோலா,பார்மேசான்] – 1 கப்
வெஜ்ஜி[குடைமிளகாய்,வெங்காயம்,
காளான்,ஆலிவ்,தக்காளி] – 1 கப்
 
செய்முறை:

• வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடத்திற்குப் பிறகு அக்கலவையில் மைதா, எண்ணை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு பிசைந்து மூடி 2- 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

• தண்ணீரைக் கொதிக்க வைத்து முழு தக்காளியைப் போட்டு 3 நிமிடம் கழித்து எடுத்து குளிர்ந்த நீரிலிட்டு மேல் தோலை நீக்கி மிக்ஸியில் மற்ற சாஸ் பொருட்களுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

• வாணலியில் எண்ணை ஊற்றி, அரைத்த விழுதை மெல்லிய தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்.

• மைக்ரோவேவ் அவனை கன்வென்ஷனல் அவன் பேக் மோடில்(mode) 550 டிகிரி அளவில் ப்ரீ ஹீட் செய்யவும்.

• காய்கறிகளை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

• இரும்பு தவா அல்லது பேக்கிங் ட்ரே எடுத்து எண்ணை தடவி மாவை இரண்டு பாகமாக பிரித்து ஒரு பாகத்தை தவாவில் வைத்து கையால் வட்ட வடிவமாக ஓரங்கள் சிறிது தடிமனாகவும் நடுவில் சற்று மெல்லியதாகவும் தட்டவும்.

• அதன் மேல் சாஸ் தடவி, சீஸ் தூவி, மேலே காய்கறி தூவி, ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி அவனிற்குள் 15 நிமிடம் வைக்கவும். பிறகு பிறாயில் மோடில்(broil mode) 2 நிமிடம் வைத்து எடுத்தால் பீட்சா தயார்.

 
 
 

                      

 
 
 

குறிப்பு:

ஓரேகனோ – இத்தாலியன் ஹெர்ப் எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும்
இத்தாலியன் சீசனிங் – பேசில், தைம், ஓரேகனோ சேர்ந்த கலவை.
சீஸ் – ஒயிட் சீஸ் உபயோகிக்கலாம்
(இன்ஸ்டன்ட் ஈஸ்ட் என்றால் 1 மணி நேரம் ஊற வைத்தால் போதும்.)

  “

About The Author