இனிப்புச் சீயம் (சுகுண்டலு)

தேவையான பொருட்கள்:

அரிசி – 400 கிராம்
உளுத்தம் பருப்பு – 200 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
பச்சைக் கடலைப்பருப்பு – 250 கிராம்
வெல்லம் – 350 கிராம்
ஏலக்காய் – 5
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில், பச்சரிசியை நன்றாகக் கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்து, உளுத்தம்பருப்பைக் கழுவி இரண்டு மணி நேரம் தனியாக ஊற வைத்து, இரண்டையும் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, பச்சைக் கடலைப்பருப்பை நன்றாகக் கழுவிக் குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்த கடலைப் பருப்பை நீரின்றி வடித்து விட்டு, அதையும் மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், பொடித்த வெல்லம், ஏலப்பொடி, சிறிது உப்பு சேர்த்துக் குட்டிக் குட்டி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். நீர் சற்று அதிகமாகிவிட்டால், அடுப்பில் வைத்தும் கிளறிக் கொள்ளலாம். பிறகு, எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளை மாவில் தோய்த்துப் பொன்னிறமாகப் பொறித்தெடுங்கள்!

நாவூறச் செய்யும் இனிப்புச் சீயம் தயார்!

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கோ அல்லது இவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிலாச்சாரல் பொறுப்பல்ல.

About The Author