இனிப்பு வகை – மாலாடு

தேவையான பொருட்கள்

பொரிகடலை – 1 டம்ளர்
சர்க்கரை – 3 டம்ளர்
நெய் – அரை டம்ளர்
முந்திரிப்பருப்பு – 10
ஏலக்காய் – 4 (பொடித்தது)

செய்முறை

1. பொரிகடலையை மிக்ஸியில் நைஸாக திரித்துக் கொள்ளவும்.
2. திரித்த பொரிகடலையுடன் சர்க்கரையையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
3. நெய்யில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
4. திரித்த கலவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வதக்கிய முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
5. பின்னர், சிறிது சிறிதாக நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

சுவையான மாலாடு பத்தே நிமிடங்களில் தயார்! திடீர் விருந்தினரை அசத்த ஏற்ற இனிப்பு வகை இது.

கூடுதல் டிப்ஸ்

1. நெய்யை அதிகம் விடாமல் சிறிது சிறிதாக விட்டே மாவை உருண்டை பிடிக்க வேண்டும்.
2. இனிப்பு குறைவாக வேண்டுவோர் 3 டம்ளர் சர்க்கரைக்குப் பதில் 2 1/2 டம்ளர் சர்க்கரை போட்டுக் கொள்ளலாம்.
3. பொரிகடலையைத் திரித்து வைத்துக் கொண்டால், எப்பொழுது தேவையோ உடனடியாக மாலாட்டைத் தயார் செய்து கொள்ள முடியும்.”

About The Author