இன்ப நுகர்வு

இன்பம் அனுபவித்தால்
நோய் வருமோ எனும் பயம்

நற்குலத்தில் பிறந்தால்
நல்வழி மாறிவிடுவோமோ எனும் பயம்

செல்வம் இருந்தால்
அரசிடம் பயம்

கௌரவமாய் இருந்தால்
கேடு வந்திடுமோ எனும் பயம்

வலிமையிருந்தால்
விரோதியிடம் பயம்

அழகிருந்தால்
முதுமை வருமோ எனும் பயம்

சாத்திரங்கள் கற்றால்
வாதங்களில் ஈடுபட பயம்

நற்பண்புகள் இருந்தால்
தீய மனிதரிடம் பயம்

உடல் என்றால்
மரணம் குறித்த பயம்

மனிதனுக்கு எல்லாவற்றிலும்
பயம் இணைந்தே உள்ளது

இப் புவியில் பயமில்லாதிருப்பது
வைராக்கியம் ஒன்றே

(சமஸ்கிருத செய்யுட்களின் தமிழ் மொழியாக்கம்)
(பரத்ருஹரின் சுபாஷிதம் மின்னூலில் இருந்து)

About The Author

1 Comment

  1. aruna

    மிக நல்ல இன்ப கவிதை தொடரட்டும் உங்க கவிதைகல்

Comments are closed.