இராசிபலன்கள் (19-5-2014 முதல் 25-5-2014 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடு, நிலம் வாங்குவது போன்ற விஷயங்களைச் சற்றுத் தாமதமாகச் செய்வது உகந்ததாகும். உறவினர்கள் நண்பர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும். நண்பர்களிடம் காரணமற்ற மனக்கசப்புகள் ஏற்பட்டு பிரச்சினைகள் உருவாகலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு சென்று வருவீர்கள். உத்தியோகம் செய்பவர்களுக்கு இடையூறுகள் வந்து போகும். விவசாயிகள், கமிசன் தொழில் செய்பவர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! பூர்விகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து வந்த தொல்லைகள் மேலும் தொடரும் என்பதால் கவனமாகச் செயல்படுவது நல்லது. எழுத்துப்பணி செய்பவர்கள், வங்கிப் பணியாளர்கள், காய்கறி – இலை – கீரை போன்ற உணவுப்பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள், அஞ்சல்துறையைச் சார்ந்தவர்கள், அச்சுத் தொழிற் செய்பவர்கள், ஆகியோர் நல்ல இலாபம் அடைவார்கள். பயணங்களின்போது பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் நன்மை அடைவீர்கள். விருந்தினர்களின் வரவால் பொருட்செலவுகள் உண்டாகும். வெகு காலமாக வராத கடன், கொடுத்து இருந்த பணம் கை வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடும் பாசிப் பயறு தானமும்.

ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் ஏற்படக் கூடும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். தென் திசையில் இருந்து பெண்களால் ஆதாயம் உண்டாகும். தீராத பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்கள் உதவியால் தீர்வுகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணவரவு உண்டாகும். முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும். பூ, பழம் விற்பவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், வழக்குரைஞர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், நகைக் கடை நடத்துபவர்கள், பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு நற்பலன் உண்டாகும். எதிர்பாராத விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடையலாம். குலதெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. தாய் – தந்தையர் உறவில் வந்துள்ள பிரச்சினைகள் தீரும். வெளிநாடு செல்லுவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். சளி, அலர்ஜி போன்ற நோய்கள் வந்து போகும். பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு மன நிறைவடைவீர்கள். உறவினர்களின் எதிர்பாராத வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடும் கடலை தானமும்.

மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். தீயணைப்புத்துறை – உணவகம் – கேஸ் வெல்டிங் போன்ற நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், இராணுவத்தினர், காவல்துறை, கார சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், நிலக்கரி விற்பவர்கள் ஆகியோர் புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேரும் காலமாகும். நீண்ட பயணங்களால் லாபம் அடைவீர்கள். வாய், பற்கள், முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். நண்பர்கள் உறவினர்களால் பணவரவு உண்டு. தந்தை – மகன் உறவு சுமாராகக் காணப்படும். பக்கத்து வீடுகளில் பக்குவமாகப் பேசிப் பழகுவதால் பிரச்சினைகள் குறையும். புதிய வீடு, நிலம் வாங்க எடுத்துக் கொண்ட நீண்ட கால முயற்சிகளில் நல்ல பலன் உண்டாகும். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தொடரும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுங்கள். மற்றவர்களை நம்பிக் கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லதாகும். தொழிற்சாலைகளில் பணி செய்பவர்கள் நற்பலன் அடைவார்கள். ஆலய வழிபாடுகளால் நிம்மதி அடைவீர்கள். தொழிலில் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுச் சமாளித்துக் கொள்ளுவீர்கள். பிறருக்காக ஜாமீன் போடுவதால் வீண் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- முருகன் வழிபாடு.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம். சொத்துப் பிரிவினை போன்ற விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தேடி வரும் காலமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டு. வர வேண்டிய சொத்துக்கள் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புனிதப் பயணம் சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். உப்பு வியாபாரிகள், படம் – கண்ணாடி போன்ற பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், திரவப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள்.
பிள்ளைகளால் எதிர்பாராத தன வரவு உண்டாவதோடு அவர்களால் பொருட் செலவும் உண்டாகும்.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விரதம் இருந்து அம்மன் ஆலய வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்து வர வேண்டும்.

சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். எதிர்பார்த்திருந்த வங்கிக் கடன், உதவித் தொகைகள் கிடைத்து வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். வெகு காலமாக இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லைகள் தீரும். இதுநாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். வராத கடன், கொடுத்திருந்த பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் கூட்டாளிகளுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காதல் விஷயங்களில் வெற்றி ஏற்படக்கூடிய காலமாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள்,
ஆசிரமவாசிகள், ஆலயப் பணி செய்பவர்கள், பழமையான பொருட்களின் வியாபாரிகள், தோல், மீன், முட்டை, மாமிச வியாபாரிகள் நற்பலன்களை அடைவர். சொத்து சம்பந்தமான நாட்பட்ட வழக்குகளுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வயிற்றுத்தொல்லை, மூலம் போன்ற உபாதைகள் வந்து நீங்கும். வேற்று மதத்தவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் வழிபாடு, காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடு ஆகியவற்றைச் செய்து வாருங்கள்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இதுவரை விடை காண முடியாத நோய்களுக்கு விடைகாணும் காலமாகும். தந்தை – மகன் உறவில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். முதுகு, கால்கள் ஆகியவற்றில் நோய்கள் வந்து விலகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்தால் வீட்டில் திருட்டுப் போவதைத் தடுக்கலாம். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். தொழில் பிரச்சினைகளில் மேலும் சற்றுப் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இரும்பு – இயந்திரம் – இரசாயனம் சம்பந்தமான தொழில்களில் ஈடுபடுபவர்கள், பெட்ரோல், டீசல் முதலான எண்ணெய் வியாபாரிகள், பலசரக்குத் தொழில் நடத்துபவர்கள், பழைய இரும்புப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். பயணங்களில் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் மூலமாக எதிர்பாராத பொருட் செலவுகள் வரக்கூடும். பயணங்களில் கவனம் தேவை! குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- ஐயப்பன் ஆலய வழிபாடும் எள் தானமும்.

துலாம்:-

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் தொடங்குவதில் சற்றுப் பின்னடைவு ஏற்படும். பயணங்களின்பொழுது பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் சென்று வர வேண்டும். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பங்குத் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் காணுவீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். காதல் விஷயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும். கண் காதுகளில் கவனம் தேவை. புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். நீண்ட காலமாக வராத கடன், கொடுத்த பணம் திரும்பிக் கை வந்து சேரும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிறர் நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் நண்பர்களின் ஆதரவால் நிறைவேறும். நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கும். நெடும் பயணங்களில் மிகவும் கவனமாகச் சென்று வாருங்கள்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு.

விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். சிலருக்கு வீடு மாற்றம், தொழிற்சாலை இடமாற்றம் ஏற்படலாம். புதிய வீடு, நிலம், கார் போன்றவை வாங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும். விவசாயம் செய்பவர்கள், காய்கறி – பழ வியாபாரிகள், பூஜைப்பொருள் விற்பவர்கள், உப்பு வியாபாரிகள், திரவ உணவு வியாபாரிகள், நறுமணப் பொருள் வியாபாரிகள், ரத்தின வியாபாரம் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். ஒரு சிலருக்குச் சொத்துக்களை விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட சம்பந்தமான விஷயங்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில மாட்டிக்கொள்ள வேண்டாம்! வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும். முன் கோபம் தவிர்ப்பது நல்லது! ஒரு சிலருக்கு நண்பர்கள் பங்காளிகள் ஆகியோரால் ஆதாயம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சீராக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாகும் காலமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்தில் காரணமற்ற பொருட் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்யுங்கள்.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாத நிலை இருப்பதால் புதிய கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின்போது சம்பந்தம் இல்லாத விஷயங்களால் வீண் பிரச்சினைகள் வந்து விலகும். பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். காதல் சம்பந்தமான விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பங்குத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நஷ்டம் வர வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது! காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கக்கூடிய காலமாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் நல்லது. இரசாயனம், அணு ஆராய்ச்சி போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், பழைய பொருட்கள் – மீன் – முட்டை – மாமிசம் போன்றவற்றை விற்பவர்கள், வட்டித் தொழில் செய்பவர்கள், ஏஜன்சி – குத்தகை போன்ற தொழில்களைச் செய்பவர்கள், பழைய இரும்பு – பேப்பர் – பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இன்னும் சில நெருக்கடிகள் உண்டாகும். வாயு போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் வழிபாடு.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். சிற்சில பாதிப்புகள் வந்து விலகும். நண்பர்களால் சிற்சில பிரச்சினைகள் வந்து விலகும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். காதல் சம்பந்தமான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள், நற்பெயர் புகழ் உண்டாகும் காலமாகும். பிள்ளைகளுக்கு இதுவரையில் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும். நெருப்பு – கேஸ் – சிற்றுண்டிச் சாலைகள் – அரிசி – பலசரக்கு சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் பணிபுரிவோர், மருந்து வியாபாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடையலாம். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பயணங்களின்போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில நன்மைகள் வந்து சேரும். நாட்பட்ட வழக்கு விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. நரம்பு, உணவுக் குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும். அலுவலகப் பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தைத் தவிர்த்து மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது!

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சூரிய நமஸ்காரம்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பெண்களால் தூரத்தில் நற்செய்திகளைக் கேட்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். மூலம் போன்ற வயிறு சம்பந்தமான தொல்லைகள் வந்து போகும். மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளைச் சந்தித்து நிம்மதி குறையலாம். நிலம் வாங்குதல் போன்ற நீண்டகால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் நல்ல தகவல்கள் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களை தள்ளிப் போடுவது நல்லது. காய்கறி – இலை – கீரை போன்ற பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள், கட்டில் மெத்தை போன்ற ஆடம்பர அலங்காரப் பொருட்கள் விற்பவர்கள், இரசாயனப் பொருள் வியாபாரிகள், கமிசன் – தரகுத் தொழிற் செய்பவர்கள், மரம் – ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் விற்பவர்கள், அஞ்சல்துறையினர், பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் இலாபம் அடைவர். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும், வீண் பிரச்சினைகளும் ஏற்படலாம். நீதிமன்றம், வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

இராசியான எண்கள்:- 5, 6.
இராசியான நிறங்கள்:- பச்சை, வெள்ளை.
இராசியான திசைகள்:- வடக்கு, தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாவிஷ்ணு, மகாலட்சுமி வழிபாடு.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். காரணமற்ற சிறிய விஷயங்களால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்து விலகும். கலைத்துறையினரும், அரசியல்வாதிகளும் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது! பயணங்களில் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் எச்சரிக்கை! வராத கடன், கொடுத்திருந்த பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும். வாகனத் தொழில் செய்பவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், கலைத்துறையைச் சார்ந்தவர்கள், நறுமணப் பொருள் வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள், நவரத்தின – வெள்ளி வியாபாரிகள் ஆகியோருக்கு நற்பலன் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காணப்படும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்காக முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் இதுநாள் வரையில் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். நீண்ட பயணங்கள் மூலமாகச் சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்துக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். மேகம், உடற்சூடு சம்பந்தமான பீடைகள் வந்து விலகும்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மகாலட்சுமி ஆலய வழிபாடு.

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author