இராசிபலன்கள் (2-3-2009 முதல் 8-3-2009 வரை)

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு சம்பந்தமான பொருட்கள் உற்பத்தி விற்பனை செய்வோர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், காவல்துறை, தீயணைப்புத் துறை சார்ந்தவர்கள், இணைய தளங்களை நடத்துபவர்கள், மின்சாரத்துறை சார்ந்தவர்கள், விளையாட்டு மற்றும் யோகாசனப் பயிற்சிக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். தாயின் உடல் நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் குறைந்து காணப்படும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் மனக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். நண்பர்களால் பொருட் செலவுகளும், மன நிம்மதி இன்மையும் ஏற்படலாம். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காணப்படும். காதல் விஷயங்களில் மற்றவர்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். தொலை தூரப் பயணங்களால் மன மகிழ்ச்சியும், பொருள் வரவும் உண்டாகலாம். தந்தை மகன் உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை உருவாகும். சகோதரர்களால் எதிர்பார்த்த ஆதாயங்களை அடைய இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். உடம்பில் வாயு மற்றும் வலி போன்ற உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம்:-

ரிஷபராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். நாட்பட்ட சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செய்தொழில் விஷயங்களில் பங்காளிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வேற்று மதத்தினரால் வெளி நாடு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நீண்ட காலமாக கடன் கொடுத்து வராத பணம், பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். குடும்பத்தில் விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்புக்கள் உள்ளது. மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகின்ற காலமாகும். நீண்ட தூரப் பயணங்களால் ஆதாயம் இல்லை. குடும்பச் சொத்து சம்பந்தமாக உறவினர்கள் இடையே இருந்து வந்துள்ள மனக் கசப்புகள் இன்னும் சற்று நீடிக்கும். வெகு நாட்களாக வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள், கலைப் பொருட்கள் விற்பனை செய்வோர்கள், கலைஞர்
கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென் கிழக்கு
பரிகாரம் – வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வரவும்.

மிதுனம்:

மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலக் கனவான புதிய வீடு நிலம் வாங்கப் போட்டிருந்த திட்டங்களில் வங்கிகளின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் வீண் பழிச் சொல் ஏற்பட இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் எதிர்பாராத சலுகைகளும் பண வரவும் உண்டாகலாம். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கும். மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் செல்வோர்கள் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லது. வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தீராத நாட்பட்ட நோய்கள் தீர வேண்டிப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவதால் நோய் குறைய வாய்ப்பு உள்ளது. குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருதல் நல்லதாகும். காய்கறிகள், இலை பூ பழம், சிறு தின்பண்ட வியாபாரிகள், வங்கிப் பணியாளர்கள், தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள், தொலைத் தொடர்புத் துறை சார்ந்தவர்கள், ஸ்டேஷனரிப் பொருட்கள் உற்பத்தி, விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் மிகுந்த லாபம் அடைவார்கள். வெளி நாட்டு விஷயங்களில் கவனமுடன் செயல்படவும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். வேலை இல்லாதவர்களின் புதிய வேலை வாய்ப்பிற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும் காரணமற்ற மனக் குழப்பங்களும் ஏற்படலாம். பூர்வீக சொத்து சம்பந்தமாகிய விஷயங்களில் பெரியவர்களின் உதவிகளால் நல்ல முடிவுகள் கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். தண்ணீர், கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், கடல் துறை சார்ந்தவர்கள், உப்பு வியாபாரிகள், ஜவுளி நூல் போன்ற சாதன வியாபாரிகள், அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். தாயின் உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் ஏற்பட்டு அதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லதாகும். நண்பர்களிடம்
கவனமாகப் பேசிப் பழகுதல் சிறந்தது.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

சிம்மம்:-

சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். செய்தொழிலில் பங்காளிகளுடன் வீண் மன சஞ்சலங்களும், பொருள் இழப்பும் வந்து சேரலாம். வெளி நாட்டில் வசிப்பவர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரக் கூடிய காலமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று நீடிக்கவே செய்யும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடவும். வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். சகோதர சகோதரிகளின் தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சம்பந்தமாக புதிய முயற்சிகளைச் செய்வீர்கள். உடல் நிலையில் உஷ்ணம் மற்றும் சுரம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். தந்தை மகன் உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். அரசியல்வாதிகள், அரசு வழக்கறிஞர்கள், நெருப்பு சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், அணு ஆராய்ச்சி செய்யக் கூடிய விஞ்ஞானிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். காதல் விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் மிக கவனமுடன் பயின்று வருதல் சிறந்ததாகும். யாத்திரையில் கவனம் தேவை.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்குப் புதிய முறை மருத்துவம் மூலம் விடை காண்பீர்கள். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷயத்தில் பணம் மற்றும் பொருட்களை நம்பிக் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். வீண் மன சஞ்சலங்களால் காலந் தாழ்ந்த உணவும் தூக்கமும் ஏற்படலாம். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும். குடும்பத்தில் இருந்து பிரிந்து போனவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு சென்று வர வாய்ப்பு உள்ளது. கட்டி முடிக்கப்படாத பழமையான ஆலயங்களை மீண்டும் கட்ட எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும் காலமாகும். விவசாயம் செய்பவர்களுக்கு வேலையாட்களால் நல்ல லாபம் பெறுவார்கள். இரசாயனம், எண்ணை போன்ற பொருட்களின் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், மீன், முட்டை, மாமிச உணவு வியாபாரிகள், பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் உண்டாகி அவர்களால் நன்மை அடைவீர்கள்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும்.

துலாம்:-

துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். தந்தை வழிச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். மனைவியால் எதிர்பாராத தன வரவு உண்டாகலாம். விட்டுப் போன பழைய வழக்குகள் மற்றவர்களின் தூண்டுதல்களால் திரும்பவும் தொடரலாம். பழைய பொருட்களின் வியாபாரிகள், இரசாயனம் மற்றும் வட்டித் தொழிற் செய்வோர்கள், மற்றவர்களிடம் உதவிப் பணி செய்பவர்கள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். தீராத நாட்பட்ட நோய்கள் தீர வேண்டிப் புதிய கடன் வாங்குவீர்கள். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் திரும்ப வந்து சேர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்களையும் ஆடம்பர அலங்காரப் பொருட்களையும் வாங்குவீர்கள். செய் தொழில் சம்பந்தமான பொருப்புகளை மற்றவர்களை நம்பிக் கொடுத்து பிரச்சனைக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. மாமன் வழியின் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். யாத்திரையில் கவனமுடன் சென்று வருவது நன்றாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்ப
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

விருச்சிகம்:-

விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்று பின்னடைவுகள் ஏற்படலாம். கணவன் மனைவி உறவுகளில் காரணமற்ற சில மனக் கசப்புகள் வந்து நீங்கும். கொடுக்கல் வாங்கல் போன்ற தொழிற் செய்வோர்களுக்கு சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு எதிர் பார்த்து இருந்த அரசு உதவித் தொகைகள் கிடைக்கக் கூடும். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். காரணமில்லாத முன் கோபத்தைத் தவிர்த்தல் நல்லது. மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் இன்னும் சற்று கால தாமதம் ஏற்படும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களின் மூலமாக திடீர் தன வரவு உண்டாகலாம். தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், ஷேர் மார்க்கெட் தொழிற் செய்வோர்கள், போலீஸ், ராணுவத்துறை சார்ந்தவர்கள், காவல் துறையினர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வீட்டில் மிக கவனமுடன் இருத்தல் நல்லது.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்ய எண்ணுவீர்கள். நண்பர்களின் உதவியால் வர வேண்டிய பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும் காலமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் அவப் பெயர்கள் உணடாக வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும். நீண்ட காலமாக வர வேண்டிய குடும்பச் சொத்துகள் திரும்ப வந்து சேரும். கம்ப்யூட்டர், மின்சாரம் போன்ற துறையை சார்ந்தவர்கள், பேராசிரியர்கள், பழம், பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆசிரமங்கள் நடத்துவோர்கள், நறுமண பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதியும் உற்சாகமும் அடைவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயத்தில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். காதல் விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களால் நல்ல தகவல்கள் வந்து சேரும். உடம்பில் மேகம், உஷ்ணம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். முன் கோபத்தை தவிர்க்கவும்.

இராசியான எண்;-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் தட்சிணாமூர்த்தி ஆலய வழிபாடு செய்து வரவும்.

மகரம்:-

மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இது நாள் வரை ஏற்பட்டு இருந்த தடைகள் நீங்கித் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடியான சூழ்நிலைகள் இன்னும் சற்று நீடிக்கும். வேலையில்லாமல் புதிய நபர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவீர்கள். நாட்பட்ட தீராத அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களுக்குப் புதிய வழக்கறிஞர்களை நாடுவது நல்லது. இரும்பு இயந்திரம் போன்ற பொருட்களை உற்பத்தி விற்பனை செய்வோர்கள், பழைய பொருள் வியாபாரிகள், பலசரக்கு எண்ணை வியாபாரம் செய்வோர்கள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள், இன்சினியரிங் கல்லூரி சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். வெகு காலமாக வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேற இன்னும் சற்று கால தாமதம் ஆகும். காதல் விஷயத்தில் மனக் குழப்பங்களும் பிரச்சனைகளும் உண்டாகலாம். பிரிந்து போன உறவுகளுடன் திரும்பச் சேர்ந்து வாழ வழி உள்ள காலமாகும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் சனீஸ்வர ஆலய வழிபாடு செய்து வரவும்.

கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திடீர் வரவால் சிற்சில மன நிம்மதி இன்மை ஏற்பட்டாலும் அவர்களால் பொருள் வரவுகள் உண்டாகலாம். மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடையாதீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் எவ்வித ஆதாயமும் இல்லை என்பதால் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. சம்பந்தம் இல்லாத நபர்களால் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக இருப்பதால் கவனமுடன் இருக்கவும். யாத்திரையில் குறிப்பாக அரசியல்வாதிகள், கலைஞர்களுடன் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். செய்தொழிலில் வேலையாட்களால் மன நிம்மதி குறைவும் பொருள் இழப்பும் ஏற்படலாம். ஒரு சிலருக்குப் புதிய வீடுகள், வாகனங்கள் மற்றும் நில புலன்கள் வாங்க வாய்ப்பு
உள்ளது. நெருப்பு, ராணுவம் மற்றும் அரசு உயர் பதவி வகிப்பவர்கள், மருந்துப் பொருட்களை உற்பத்தி விற்பனை செய்வோர்கள், நூல் வியாபாரிகள், இவற்றை ஏற்றுமதி இறக்குமதி தொழிற் செய்வோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

மீனம்:-

மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கக் கூடிய காலமாகும். வேற்று மதத்தினரால் ஆதாயம் இல்லை. வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். புதிய வீடு வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகளின் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் கேட்ட பணம் கிடைக்கும். ஒரு சிலர் வீடு மாற்றம் செய்வார்கள். அறநிலையத்துறை, ஆலயப்பணி செய்வோர்கள், இன்சினியரிங் கல்லூரி சார்ந்தவர்கள், நவரத்தின வியாபாரிகள். தங்கம். வெள்ளி நகை வியாபாரிகள், இனிப்புப் பொருள் உற்பத்தி, விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். நாட்பட்ட தீராத நோய்க்குப் புதிய மருத்துவரின் மூலம் நோய்கள் தீர வாய்ப்பு உள்ளது. உடம்பில் வாயு மற்றும் வாதம் போன்ற உபாதைகள் வந்து போகலாம்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

About The Author