இராசிபலன்கள் (21-7-2014 முதல் 27-7-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பயணத்தின்போது மற்றவர்களிடம் முன் கோபம் தவிர்த்தல் நல்லதாகும்! புதிய ஆடைகள், ஆபரணங்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மன நிறைவை அடைவீர்கள். வங்கிகளில் இருந்து வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். பங்குச்சந்தை, கமிஷன், தரகு, ஏஜன்சி சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், மாமிச உணவு வியாபாரிகள், அடகுக்கடை நடத்துபவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் பெறுவர். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. விவசாயம் சுமாராகப் பலிதமாகும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டுகளும் பொருள் வரவும் உண்டாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்! சளி, ஒவ்வாமை போன்ற தொல்லைகள் வந்து போகும். கணவன் – மனைவி உறவுகளில் இதுநாள் வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். செய்யாத குற்றங்களுக்காகப் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். அண்டை அயலாருடன் காரணமற்ற, சிறிய விஷயங்களுக்காக வீண் பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனத்துடன் பேசிப் பழகுதல் நல்லது. நீண்ட காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவரால் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம்! மாணவர்கள் கல்வி உதவித் தொகைகளும் பரிசும் பாராட்டும் பெற வாய்ப்பு உள்ள காலமாகும். அரசு சம்பந்தமான உதவித் தொகைகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வாயு, வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். வீட்டை அலங்கரிப்பதிலும், வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமும் செலவுகள் ஏற்படலாம். உணவகத் தொழில் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர், எரிபொருள் வியாபாரிகள், மசால் சம்பந்தமான உணவுப் பொருட்களை விற்பவர்கள் ஆகியோர்க்கு நல்ல லாபம் தரக் கூடிய காலமாகும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதன் மூலம் செலவுகள் உண்டாகலாம். தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், கலைக் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், இசைத்துறை, திரைப்படம், நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் ஒரு சிலருக்குப் பண வரவு உண்டாகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது! தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வேறு மருத்துவர்களின் உதவியை நாடுவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வடக்கு திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். மற்றவர்களின் விஷயங்களில் வீணாகத் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! அலுவலகப் பணி செய்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ள காலமாகும். சகோதர சகோதரிகளின் தடைப்பட்டு வந்த திருமணக் காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணியது நிறைவேறும். இதுநாள் வரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், பொதுத்தொண்டு நிறுவனத்தினர், ஆலயப் பணிபுரிவோர், வங்கி எழுத்தர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், பத்திரிக்கையாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர்க்கு நற்பலன் தரக் கூடிய காலமாகும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் செலவுகள் உண்டாகும். அரசு சம்பந்தமான விசா போன்ற பிரச்சினைகளில் நல்ல சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஒரு சிலர் வீடு மற்றும் தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! அலுவலகப் பணி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். அரசியல்வாதிகளிடம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுப் பொறுமையுடன் இருத்தல் நல்லது! தேவையற்ற புதிய நட்புக்களால் நிம்மதி இழக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருங்கள்!

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வாயு, வாதம் சம்பந்தமான தொல்லைகள் வந்து போகலாம். மகான்களின் தரிசனங்களால் மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள். இதுநாள் வரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! தேவையற்ற புதிய நட்புக்களால் நிம்மதி இழக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருங்கள்! கட்டி முடிக்கப்படாத ஆலயப் பணிகளை மீண்டும் தொடர்ந்து செய்வீர்கள். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! தண்ணீர், ஐஸ், குளிர்பானம் போன்ற திரவப்பொருள் வியாபாரிகள், உப்பு, உரம் ஆகிய பொருட்களை விற்பனை செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணிபுரிவோர், மருத்துவத் தொழில் செய்பவர்கள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவர்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். மகான்களின் தரிசனங்களால் மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த புனிதப் பயணங்கள் சென்று வர வாய்ப்பு உள்ளது. தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணியது நிறைவேறும். நீண்ட காலமாக இருந்து வந்த காதல் விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். பூஜைப்பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், நகை வியாபாரிகள், கணினித் தொழில் செய்பவர்கள், பழம், கூல்டிரிங்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். கணவன் – மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளைப் பழுது பார்ப்பதன் மூலம் செலவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் செலவுகளும் புதிய பொறுப்புக்களும் உண்டாகலாம். நில புலன்கள் சம்பந்தமான பழைய வழக்குகள் மீண்டும் தொடரும். அலுவலகப் பணி செய்பவர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் மிகவும் பொறுமையுடன் பணியாற்றுதல் நல்லதாகும்!

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற வேண்டாம்! புதிய நண்பர்களின் சேர்க்கையால் செலவுகளும், நிம்மதியின்மையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை! செய்யும் தொழிலில் புதிய கூட்டாளிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். பயணத்தின்போது வண்டிகளில் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது! காய்கறிகள், இலை, கீரை போன்ற உணவுப்பொருட்களை விற்பவர்கள், திரைப்படம், நாடகம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், ஒப்பனைக்கூடம் நடத்துபவர்கள், சிற்றுண்டி விடுதி நடத்துபவர்கள், நகைக்கடை நடத்துபவர்கள் ஆகியோர் மிகுந்த நற்பலன்களை அடைவர். கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும். புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள். பிரிந்து போன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ள காலமாகும். மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். வர வேண்டிய பூர்விகச் சொத்துக்களில் இதுநாள் வரையில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்ல முடிவு பெறும். விசா போன்ற வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது!

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள் உறவினர்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். மற்றவர்களின் விஷயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்த்தல் நல்லது! காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது! அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. மீன், முட்டை, மாமிசம், எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்றவற்றை விற்பவர்கள், அணுசக்தித்துறை சார்ந்த அறிவியலாளர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். விசா பிரச்சினைகளுக்கு எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும் காலமாகும். பிறரிடம் வேலை செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்றுவது நல்லது. வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் இட்டு பிதுர்களையும், காளி போன்ற அம்மன்களையும் வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வீடுகளில் அல்லது பயணத்தில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்கள் அடைவீர்கள். சளி, காய்ச்சல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். எலும்பு, நரம்பு ஆகியவற்றிலும் பாதிப்புகள் வந்து போகலாம். அண்டை அயல் வீட்டுக்காரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! வீடு வாகனங்களை வாங்குவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள். பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுங்கள்! ஆலயங்களில் தொண்டு செய்பவர்கள், அலுவலக உதவியாளர்கள், வங்கித் தொழில் புரிவோர், வழக்கறிஞர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீருவதற்கான நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். காதல் சம்பந்தமாக இது வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். இதுநாள் வரையில் இருந்து வந்த பண நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் நிம்மதி அடைவீர்கள். நண்பர்கள், உறவினர்களால் எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரச் சுற்றுலா சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களில் எதிர்பாராத தன வரவு உண்டாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் ஏமாற்றம் அடைய வேண்டாம்! குடும்பச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் பெரிய மனிதர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்காதிருங்கள்! வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவுகளைத் தேடித் தாய்நாடு சென்று வருவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். இரும்பு, இயந்திரம், வேதிப்பொருள், பழைய பொருட்கள் முதலியவற்றை விற்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், கமிஷன் தொழில் செய்பவர்கள், பலசரக்கு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றை விற்பவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வர இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது! புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கைவந்து சேரும். கண், காது போன்ற இடங்களில் கவனம் தேவை!

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் இட்டு சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் எதிர்பார்த்த காரியங்களில் மன நிறைவடைவீர்கள். பயணத்தின்போது பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருங்கள்! பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப்போகும் காலமாகும். மின்சாரம், எரிபொருள், உணவகம் சார்ந்த தொழில்கள் செய்பவர்கள், இவற்றில் பணிபுரிவோர், கணினி சாதன வியாபாரிகள், வேதித்துறை, அணு அறிவியல்துறை சார்ந்தவர்கள், காவல்துறையினர், இராணுவத்தினர் ஆகியோர் நற்பலன்களை அடைவர். காதல் விஷயங்களில் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாகும். மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற வேண்டாம்! வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். வெகு காலமாக வழிபடாமல் விட்டுப் போன குலதெய்வ ஆலயங்களைத் தரிசனம் செய்வதற்கான காலமாகும். பொதுச் சேவைகளான ஆலயத் திருப்பணிகள் போன்றவற்றில் பங்கு கொண்டு நற்பெயர் எடுப்பீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். ஒரு சிலருக்குப் புதிய வீடு வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. சமுதாய முன்னேற்றத்துக்கான பொதுத் தொண்டுகளில் தலையிட்டுப் பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வர வேண்டிய பணம், பொருட்கள் மற்றவர்களின் உதவியால் கிடைக்கும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு போன்றவற்றில் சாதகமான முடிவுகள் கிடைக்கத் தாமதம் ஆகலாம். மகான்களின் எதிர்பாராத ஆசிகளால் நிம்மதி அடைவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டில் இருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக் குழப்பங்கள் உண்டாகலாம். அலுவலகப் பணியாளர்களுக்குப் பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கலாம். வாகனத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், அரசியல்வாதிகள், கமிஷன், தரகு ஆகிய தொழில்கள் செய்பவர்கள், அரசு உயர்பதவி வகிப்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், உணவகப் பணி செய்பவர்கள், நெருப்பு சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் லாபம் அடைவர்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author