இராசிபலன்கள் (23-6-2014 முதல் 29-6-2014 வரை)

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறைந்து காணப்படும். புதியதாக வீடு, நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் பிரியத்துடன் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைவீர்கள். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். களவு போன பொருட்கள் உறவினர்கள், நண்பர்கள் உதவியால் திரும்பக் கிடைக்கும். பிள்ளைகளுக்கு உடல்நிலையில் வந்த பாதிப்புகளால் வெளியூர்ப் பயணங்களும் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு நிம்மதி இழக்காதீர்கள். அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், பழைய பொருள் விற்பவர்கள், வேதியியல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அணு ஆராய்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள், பழைய இரும்பு சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகள் இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். நிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் தன வரவு உண்டாகலாம். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்திருந்த பண உதவிகள் கிடைக்கலாம். திரும்பி வராமலிருந்த கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் போன்றவை மீண்டும் கைக்கு வந்து சேரும் காலமாகும். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட்செலவு உண்டாகும். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருங்கள்! காதல், பெண்கள் சம்பந்தமான விஷயங்கள் போன்றவற்றில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது! குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைந்து காணப்படும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், இனிப்பு சம்பந்தமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், வாசனைத் திரவியங்களை விற்பவர்கள், கலைத்துறை சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், நடிகர்கள் போன்ற கலைத்தொழில் செய்பவர்கள், பாத்திர வியாபாரிகள், கலைக்கல்லூரி சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். தீராத நோய்கள் புதிய மருத்துவ முறைகளின் மூலமாகத் தீர வாய்ப்புள்ளது. பிரிந்துபோன பழைய உறவுகள் மீண்டும் தொடரலாம். அரசியல்வாதிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வும் பணியிட மாற்றமும் ஏற்படலாம். மனைவியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். கல்வி பயிலும் இடங்களில் மாணவர்கள் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கணினிப் பணி செய்பவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள், ஆலயங்களில் பணிபுரிபவர்கள், பூஜைப்பொருள் வியாபாரிகள், பூ பழம் நறுமணப் பொருட்கள் போன்றவற்றை விற்கும் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பொதுத்தொண்டு நிறுவனங்கள் – பொதுநலத்துறை சார்ந்த பணியாளர்கள் ஆகியோர் லாபம் அடைவர். கண்களில் கவனம் தேவை! வாகனங்களில் சற்றுக் கவனத்துடன் பயணம் செய்து வருவது நல்லது! கூட்டுத்தொழில்களில் காரணமற்ற மனக் கசப்புகள் வர இருப்பதால் முன் கோபத்தை விலக்குதல் சிறந்தது!

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் நீண்ட கால நினைவுகளாக இருந்த தாய்நாட்டிற்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. பயணத்தில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! குடும்பத்தில் நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நிறைவேறுவதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். கூட்டுத் தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும் காலமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். மருத்துவமனைகளில் பரிசோதனைப் பணி செய்பவர்கள், வனத்துறை சார்ந்தவர்கள், இயந்திரம் – கணினி போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், எண்ணெய் – பலசரக்கு வியாபாரிகள், கமிசன் – தரகு – ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், பழைய பேப்பர் – பிளாஸ்டிக் – இரும்பு வியாபாரிகள், ஒப்பந்தத் தொழில், கமிஷன் தொழில் செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவினர்களைச் சந்தித்துத் திரும்ப வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாகத் திரும்பி வராமலிருந்த கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் போன்றவை நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்! பயணங்களின்பொழுது மற்றவர்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம்! ஆனால், பயணங்களில் சில புதிய சந்திப்புகளால் நன்மை அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். வேதியியல் – எண்ணெய் – எரிபொருள் வியாபாரிகள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், தூதரகங்களில் பணிபுரிவோர் ஆகியோர் நற்பலன் அடைவர். பணியாட்களால் எதிர்பாராத ஆதாயங்களும் மகிழ்ச்சியும் ஏற்படும். அலுவலகப் பணியாளர்களுக்குப் பணியிட மாற்றத்துடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கலாம். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாக வாய்ப்பு உள்ள காலமாகும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டங்களால் இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை தேவை! வங்கிகள் மூலமாக வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம், பொருட்கள் மற்றவர்களின் உதவியால் கை வந்து சேரும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த பண உதவிகள், நல்ல செய்திகள் வந்து சேரும். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் சற்றுக் குறையும். மறைமுக எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் குறைய வாய்ப்பு உள்ள காலமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவது சிறந்ததாகும்! வட்டித் தொழில், கமிசன், தரகு, ஏஜன்சி, குத்தகைத் தொழில் போன்றவை செய்பவர்கள், உணவகம் நடத்துதல் போன்ற நெருப்பு சம்பந்தமான பணியாளர்கள், இராணுவத்தினர், காவல்துறை சார்ந்தவர்கள், மின்சாரத்துறைப் பணியாளர்கள் மின்சாரம் தொடர்பான பொருட்களை உற்பத்தி / விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலமாக தன வரவு உண்டாகலாம். விசா சம்பந்தமான வெகுகாலப் பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன், கேட்டிருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகள் கல்வித்துறையில் பரிசும் பாராட்டும் பெறுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். காதல் விஷயங்களில் நற்செய்திகள் வந்து சேரும். அசைவ உணவு வியாபாரிகள் நற்பலன் அடைவர். மூலம் போன்ற வயிற்று உபாதைகள் வந்து போகும். புதிய ஆடை ஆபரணம் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது! நண்பர்கள் மூலமாகப் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பிரிந்து போன கணவன் – மனைவி திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பூர்விகச் சொத்துக்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்லதொரு சாதகமான முடிவு கிடைக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த நாட்பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை அடைவீர்கள். விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். பழுதுபட்ட ஆலயங்களை, வீடுகளைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். நண்பர்களால் வீண் பிரச்சினைகளும், நிம்மதிக் குறைவும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் பழகி வருதல் சிறந்தது.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்களிடம் நாம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம். ஒரு சிலர் வீடு, தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்யத் திட்டம் போடுவீர்கள். உணவகத் தொழில் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில்கள் செய்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், அமைச்சர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். குடும்பத்தில், தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நிறைவேற இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது. காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். தொழிலாளர்களுடன் முன் கோபத்தைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம்! நீண்ட தூரப் பயணங்கள் மூலம் காரியங்கள் நிறைவேறும் காலமாகும். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி செய்வது நல்லதாகும். நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கணவன் – மனைவி உறவுகளில் வெகு நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்றுக் குறைந்து நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சூரிய நமஸ்காரம் செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தென் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிட இருப்பதால் நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது சிறந்தது. கணவன் – மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்! மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாதீர்கள்! வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் நல்ல தகவல்கள் வந்து சேரும். கணவன் – மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். பிரிந்து போன உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் பாரத்துக் கொள்ளுதல் நல்லது! புத்தகம் மற்றும் பேப்பர் வியாபாரிகள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், நாடகத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமண விஷயமாக நல்ல முடிவுகள் கிடைக்கலாம். நண்பர்கள், உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட்செலவு ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த தம்பதியர், பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளுக்காகக் கடன் கேட்டு எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வழக்கு விஷயங்களில் முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பெரிய மனிதர்களுடனான சந்திப்பின் மூலம் காரியங்களை உற்சாகத்துடன் சாதித்துக் கொள்ளுவீர்கள். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! இசைக் கலைஞர்கள், இசைக் கல்லூரியில் பணிபுரிவோர், கலைத்துறை சார்ந்தவர்கள், கட்டட சம்பந்தமான ஆடம்பர அலங்காரப் பொருட்கள் விற்பவர்கள், இணையத்தளம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைவர். திரும்பி வராமலிருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம் பொருட்கள் சம்பந்தமாக வீண் பிரச்சினைகள் உருவாகலாம். புதிய தொழில்கள் தொடங்குவதைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் உகந்ததாகும்! குலதெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கடன், சொத்து போன்ற விஷயங்களில் பிறருக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும். உற்றார் உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். வாயுத்தொல்லை போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். நகை வியாபாரிகள், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், கட்டில் மெத்தை போன்ற அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றுபவர்கள், மந்திரிகள், வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள், கட்டட சம்பந்தமான பொருட்கள் விற்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். பெண்கள் விஷயங்களில் செய்யாத குற்றங்களுக்காக அவப்பெயர் ஏற்படலாம். புதிய ஆடை அணிகலன்களை வாங்கப் புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் நிம்மதியுடன் கூடிய பொருட்செலவு உண்டாகும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி நிலைகள் மாறி முன்னேற்றம் காணப்படும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்! புனிதப் பயணம் சென்று வர முயற்சிப்பீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்! பயணம் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கலாம். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலமாகும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! பூஜை சாதனப் பொருட்கள் விற்பவர்கள், ஆலயப் பணியாளர்கள், உப்பு வியாபாரிகள், கப்பல் பணி செய்பவர்கள், திரவப்பொருள் வியாபாரிகள், கட்டட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், கலைக்கல்லூரி நடத்துபவர்கள், அதில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். கவனத்துடன் இருந்தால் வீடு, தொழிற்சாலை ஆகியவற்றில் திருட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஒரு சில உத்தியோத்துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பணியிட மாற்றம் ஏற்படலாம். தந்தை – மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

******************************************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author