இராசிபலன்கள் (27-8-2012 முதல் 2-9-2012 வரை)

மேஷம் :-

மேஷராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். கலைப் பொருள் விற்பனையாளர்கள், கலைத் துறை சார்ந்த கலைஞர்கள், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், உணவுக்கூடம் நடத்துபவர்கள், அழகுக்கலைக் கூடங்களை நடத்துபவர்கள், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள், சினிமா மற்றும் நாடகத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலன் அடைய வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! பொருளாதாரம் சம்பந்தமாகத் தொலை தூரப் பயணங்களை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வர முயற்சிப்பீர்கள். வேலையாட்களால் வீண் பொருள் விரயமும் மன உளைச்சலும் உண்டாகும். புதிய வீடுகள், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். உடம்பில் ஒவ்வாமை மற்றும் சளி சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். தந்தை மகன் உறவுகளில் பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும். கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக் கூடிய காலமாகும். வெளி நாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவுகளைச் சந்தித்துத் திரும்புவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். பொதுவாக, இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென் கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

ரிஷபம் :-

ரிஷபராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் செய்வோர் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பயனடைவர். பெண்களால் தென் திசையில் இருந்து நற்செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வந்து சேர இருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லது. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும். பழமையான கட்டடங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம். காதல் விஷயத்தில் அனுகூலம் ஏற்படாது! வெகு காலமாகக் கட்டப்படாத ஆலயத் திருப்பணிகளுக்கான பணிகளைச் செய்வீர்கள். தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். கட்டட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர், கட்டில், மெத்தை, ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், சினிமா மற்றும் நாடகத்துறைகளைச் சார்ந்தவர்கள், அழகுக் கலைக்கூடம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் சம்பந்தமாகப் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மை அடைவீர்கள். பழைய கடன்களை அடைப்பதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். பொதுவாக, இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் :- 6
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- தென்கிழக்கு
பரிகாரம் :- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு.

மிதுனம் :-

மிதுனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குல தெய்வ வழிபாடுகளைச் செய்து வருவீர்கள். பயணங்களின்போது மிகுந்த கவனத்துடன் பயணம் செய்து வருவது நல்லது. விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஜவுளி, நூல் போன்றவற்றின் வியாபாரிகள், மருந்து நிறுவனம் நடத்துவோர், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்வோர், முதியோர் இல்லங்களை நடத்துவோர், நெருப்பு சம்பந்தமான தொழிற்சாலைகளை நடத்துவோர், வெளிநாட்டுத் தூதரகங்களில் பணி செய்வோர், ஹோட்டல் தொழில் செய்வோர், அரசுத் துறை சார்ந்த ஆலயப் பணியாளர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும். தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் காணப்படும்.

இராசியான எண் :- 1
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு.

கடகம் :-

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். ஆதரவற்ற சிறுவர்களுக்காக உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணங்கள் நிறைவேறும். உற்றார், உறவினர்களிடமிருந்து ஆதாயம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். வர வேண்டிய பணம் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பயணத்தில் புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். பண வரவுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சினைகள் தீர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வர வேண்டிய கடன், கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் போன்றவை வந்து சேரும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். தண்ணீர் கூல்டிரிங்ஸ், போன்ற திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பூஜைப் பொருட்களை விற்பனை செய்வோர், மருத்துவத் துறைகளைச் சேர்ந்தவர்கள், தாய் – சேய் நல விடுதிகளை நடத்துவோர் ஆகியோர் ஆதாயம் அடைவர். சகோதர, சகோதரிகளின் தடைப்பட்ட திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுப காரியங்களில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்.

இராசியான எண் :- 2
இராசியான நிறம் :- வெள்ளை
இராசியான திசை :- மேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு

சிம்மம் :-

சிம்மராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் ஏற்படாது. ரேஸ், லாட்டரி போன்றவற்றில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்! குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். பயணங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மனநிறைவை அடைவீர்கள். உடல் நிலையில், வாயு மற்றும் வாத சம்பந்தமான சிற்சில தொல்லைகள் வந்து போவதன் மூலம் மருத்துவச் செலவுகள் உண்டாகும். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். வெகு காலமாக வராத கடன், கொடுத்திருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். காண்டிராக்ட் தொழிற் செய்வோர், காய்கறி வியாபாரிகள், அச்சுத் தொழிற்சாலைகளை நடத்துபவர்கள், அஞ்சல் துறைகளைச் சார்ந்தவர்கள், வங்கிகளில் பணி புரிவோர், ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர் ஆகியோர் ஆதாயம் பெறுவர்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு.

கன்னி :-

கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். ரேஸ், லாட்டரி, சூதாட்டம் போன்றவற்றைநம்பி ஏமாறாதீர்கள்! மற்றவர்களின் விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்! பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் ஏமாறாதீர்கள்! மனைவிக்குச் சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து காணப்படும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். வேற்று மதத்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசியர்கள், நாடகக் கலைஞர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்வோர், அஞ்சல் துறைகளைச் சார்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வங்கிகளில் பணி செய்வோர் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 5
இராசியான நிறம் :- பச்சை
இராசியான திசை :- வடக்கு
பரிகாரம் :- புதன்கிழமையில் மஹாவிஷ்ணு மற்றும் ஆஞ்சனேயர் வழிபாடு.

துலாம் :-

துலாம்ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பெண்கள் சம்பந்தமான விஷயங்களில், செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது! நிலக்கரி, பெட்ரோல், டீசல், பலசரக்கு, எண்ணெய் போன்ற தொழில்கள் செய்வோர், காவல்துறை, ராணுவம் சார்ந்தவர்கள், தீயணைப்பு நிலையப் பணியாளர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில்களைச் செய்வோர், பூமி, நில புலன்கள் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். குடும்பச் சொத்துக்களில் ஏற்பட்டிருந்த வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்! சமுதாய முன்னேற்றம், ஆதரவற்றோர் ஆசிரமங்கள், பொதுத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து பணி ஆற்றுவதன் மூலம் நிம்மதி, பெயர், புகழ் அடைவீர்கள். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்குவீர்கள். உடம்பில் வயிறு சம்பந்தமான, வாயு போன்ற உபாதைகள் வந்து போகலாம். உத்தியோகத் துறையினருக்கு மேலதிகாரிகளால் வீண் மனச் சஞ்சலமும் பதவி இடமாற்றமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பொறுப்புடன் பணி ஆற்றுங்கள்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு.

விருச்சிகம் :-

விருச்சிகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். குல தெய்வ ஆலயத் திருப்பணிகளுக்கான விஷயங்களில் பணி ஆற்றுவதன் மூலம் நற்பெயரும் புகழும் ஏற்படும். கோர்ட், வழக்கு விஷயங்களுக்காகப் புதிய வழக்கறிஞர்களின் உதவியை நாடி அவர்களால் நன்மை அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கை வந்து சேரக் கூடிய காலமாகும். புதிய நண்பர்களிடம் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. மஹான்களின் சந்திப்புகளால் நிம்மதி அடையலாம். நண்பர்கள் வீட்டுச் சுப காரியங்களில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். நீண்ட தூரப் பயணங்களின் மூலமாக, எதிர்பார்த்த பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். அரசு, வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளி போடுதல் நல்லது. பயணத்தில் மிகவும் கவனம் தேவை. தங்கம், செம்பு, வெள்ளி போன்ற உலோகப் பொருள் வியாபாரிகள், மருந்துப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள், நில புலன்களை வாங்கி விற்பவர்கள், கேஸ் வெல்டிங் தொழில் செய்வோர், ஹோட்டல் தொழில் செய்வோர் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண் :- 9
இராசியான நிறம் :- சிவப்பு
இராசியான திசை :- தெற்கு
பரிகாரம் :- செவ்வாய்க்கிழமையில் துரக்கை ஆலய வழிபாடு.

தனுசு :-

தநுசுராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குப் புதன் நன்மை தரும் கிரகமாகும். பயணத்தில் புதிய, பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த, வர வேண்டிய பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கை தேவை!. பிள்ளைகளின் சுப காரியங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டு விஷயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயங்கள் உண்டு. கணவன் – மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமை உண்டாகும். இரும்பு, இயந்திரம், இரசாயனம், பழைய கழிவுப் பொருட்களின் வியாபாரிகள், பலசரக்கு மற்றும் எண்ணெய் வியாபாரிகள், கல், மணல் வியாபாரிகள், அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். காதல் விஷயத்தில் எதிர்பார்த்திருந்த தகவல் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். திடீர் அதிர்ஷ்மான ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் பண வரவு உண்டாகும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.

இராசியான எண் :- 8
இராசியான நிறம் :- நீலம்
இராசியான திசை :- தென்மேற்கு
பரிகாரம் :- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடு.

மகரம் :-

மகரராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பூ, பழம், போன்றபூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றை நடத்துவோர், தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர், தின்பண்ட வியாபாரிகள், பேராசிரியர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்வோர் ஆகியோர் நற்பலன்களை அடைவர். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலமாக நிம்மதி அடைவீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! வங்கிகளின் மூலம் எதிர்பார்த்திருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும்! திருட்டுப் போன பொருட்கள், காவல் துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களின் உதவியால் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. குல தெய்வ ஆலயத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். உடம்பில், தலைவலி, முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம்.

இராசியான எண் :- 3
இராசியான நிறம் :- மஞ்சள்
இராசியான திசை :- வடகிழக்கு
பரிகாரம் :- வியாழக்கிழமையில் தட்சிணா மூர்த்தி வழிபாடு.

கும்பம் :-

கும்பராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தந்தை மகன் உறவுகளில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். மீன், முட்டை போன்ற மாமிச உணவு வியாபாரிகள், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்வோர் ஆகியோர் நற்பலன் அடைவர். உடல் நிலையில், நரம்பு, எலும்பு போன்றவற்றில் உபாதைகள் வந்து போகும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட்டு அவமானப்பட இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். திடீர் அதிர்ஷ்டமான ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் நிம்மதியும் பொருள் வரவும் உண்டாகலாம். உடல் நிலையில், கண், காதுகளில் சில உபாதைகள் வந்து போகும். மஹான்களின் தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு, எதிர்பார்த்திருந்த இட மாற்றம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தீராத நோய்களுக்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கக்கூடிய காலமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த பணம் கை வந்து சேரும்.

இராசியான எண் :- 4
இராசியான நிறம் :- கருப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடு.

மீனம் :-

மீனராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வெளி நாடு சென்று வர வெகு காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பதால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். குடும்பச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடு, நிலம், வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன், கேட்ட பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. பெண்களால் தென்திசையில் இருந்து எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். உத்தியோகம் பாரப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழையபொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறை, விஞ்ஞானத் துறை சார்ந்த பணியாளர்கள், மத போதகர்கள், மடாதிபதிகள், அழுகக்க்கூடிய, மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். தாயின் உடல் நிலையில், சில பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

இராசியான எண் :- 7
இராசியான நிறம் :- கருஞ்சிவப்பு
இராசியான திசை :- வடமேற்கு
பரிகாரம் :- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு.

*****************

Gnanayohi Dr. P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M
18(25B/1), Pulavar Street
Krishnapuram
Kadayanallur – 627 759
Tirunelveli District, Tamil Nadu, India
Phone : 04633-243029
Mobile : 98425-10578, 98425-29691
Fax : 04633-240390
Website : www.gnanayohi.com

About The Author