இராசிபலன்கள் (9-6-2014 முதல் 15-6-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பொருள் வரவும் உண்டாகும். அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்திருந்த ஆதரவு கிடைக்கும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பொதுப்பணி செய்பவர்கள் கவனத்துடன் பணி ஆற்றினால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கலாம். பூர்விகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த நாட்பட்ட பிரச்சினைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கும். புனிதப் பயணம் மேற்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம். நண்பர்கள், உற்றார் உறவினர்களின் வரவால் செலவுகள் உண்டாவதோடு நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். வீடு நிலம் போன்றவற்றின் பேரில் புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி அடையலாம். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், கழிவுப் பொருட்களை வாங்குவோர் / விற்போர், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள், வட்டித்தொழில் தரகு ஏஜன்சி கமிசன் போன்ற தொழில்கள் செய்பவர்கள், பழைய இரும்பு – பழைய பேப்பர் – பிளாஸ்டிக் போன்ற பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். விவசாயம் சுமாராகக் காணப்படும். மற்றவர்களுக்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷயங்களில் சற்றுக் கவனமாக நடந்து கொள்ளுங்கள்! பொருளாதாரத்தில் இதுநாள் வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர், அம்மன் வழிபாடு செய்து கருப்பு வஸ்திரம் தானம் செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத்தொழில் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். அரசு வழக்கு விஷயத்தில் சாதகமான தீர்ப்புகள் வந்து சேரும் காலமாகும். நீண்ட பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. பயணங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாக விபத்துக்களைத் தவிர்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசும் பாராட்டும் பெற வாய்ப்புகள் உள்ளன. தேவையான பொருளாதாரம் கை வந்து சேரக்கூடிய காலமாகும். காதல் விஷயங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து உறவுகள் வலுப்பெறும். பூ பழம் பூஜை சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், நறுமணப் பொருள் விற்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் மிகவும் நல்ல பலன்களை அடைவர். வெகு காலமாகப் பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் தீர்ந்து நிம்மதி ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்காக நீண்ட பயணமும் வீண் பொருட்செலவுகளும் செய்ய வேண்டியிருக்கும். நகை வியாபாரிகள் எதிர்பாராத லாபம் அடைவர்.

இராசியான எண்:- 3.
இராசியான நிறம்:- மஞ்சள்.
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ வழிபாடு செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை! சகோதரர்களால் திடீர் தன வரவு உண்டாகும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் வந்து சேரச் சற்றுத் தாமதம் ஆகலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் உதவியால் திருமணம் நடக்கும். நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றில் கவனமாக இருப்பது நல்லது! ஆடம்பர அலங்காரப்பொருள் வியாபாரிகள், திரைப்படம் நாடகம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். தீராத நோய்களுக்குப் புதிய முறை மருத்துவத்தின் மூலமாக நல்ல குணம் கிடைக்கும். பிள்ளைகளால் சில செலவுகளும், வீண் பிரச்சினைகளும் வந்து போகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச்சொல் வந்து போக வாய்ப்பு உள்ளது. சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைவதன் மூலம் மன நிறைவடைவீர்கள்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வருக!

கடகம்:

கடகராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பூஜைப்பொருள் வியாபாரிகள், மனநலக் காப்பகம் நடத்துபவர்கள், தாய் சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள், உப்பு உர வியாபாரிகள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். புதிய தொழில்கள் ஆரம்பிக்கலாம். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். சகோதரர்களால் நிம்மதி குறைந்தாலும் அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். நாட்பட்ட தீராத வழக்குகளைத் தீர்ப்பதற்காகப் புதிய வழக்கறிஞர்களை நாடுவதன் மூலமாக நல்ல பலன்களை அடைய வாய்ப்புகள் உள்ளன. வெகுநாட்களாகத் திரும்பி வராமலிருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம் திரும்பக் கிடைக்கும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது! மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். நீண்ட பயணங்களை மேற்கொள்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உடம்பில் இருந்து வந்த தொல்லைகள் மாறி, செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 6.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வருக!

சிம்மம்:

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகளிடமிருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவி உறவில் சிற்சில பிரச்சினைகள் வந்து போகும். கூட்டுத் தொழிலில் பங்காளிகளுடன் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து தீரும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகளுக்குப் பெரிய மனிதர்களின் தலையீட்டால் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். விபரீத எண்ணங்களை நினைத்து நிம்மதியை இழக்காதிருங்கள்! குழந்தைகளால் செலவுகள் வந்த போதிலும் அவர்களால் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வயிறு, முதுகு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும், பாராட்டுக்களையும் பெறுவார்கள். பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், ஆலயப்பணி புரிபவர்கள், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், கழிவுப்பொருள் வியாபாரிகள், மீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், ஏஜன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள், அணு ஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள், விமானப் பணியாளர்கள் ஆகியோர்க்கு நற்பலன்களைத் தரும் காலமாகும். புனிதப் பயணம் சென்று வர எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதால் செலவுகள் ஏற்படும். அரசியல்வாதிகள் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 7.
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வருக!

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் நல்ல மதிப்பெண்களையும் பரிசும், பாராட்டும் பெறுவார்கள். மனைவி மற்றும் மனைவி வழிச் சொந்த பந்தங்கள் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயங்கள் வந்து சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லதாகும்! வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவுகள் வந்து சேரலாம். கடல்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு – கடல் வாழ் பொருட்கள் விற்பவர்கள், திரவப்பொருள் வியாபாரிகள், பூஜைப்பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், தாய் சேய் நல விடுதி நடத்துபவர்கள், ரத்தின வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் ஆகியோர் மிகவும் நற்பலன்களை அடைவர். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். திருட்டுப் போன பொருட்கள் திரும்பி வீடு வந்து சேரும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட சம்பந்தமான விஷயங்களில் மிகவும் கவனத்துடன் இருங்கள்! அலுவலகப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் கண்டிப்பும், இடமாற்றமும் ஏற்படலாம். விவசாயம் செய்பவர்களுக்கு அவர்கள் தொழில் நன்றாகப் பலிதமாகும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்க வேண்டாம்! வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் ஏமாற வேண்டாம்!

இராசியான எண்:- 2.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- மேற்கு.
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம் செய்து வருக!

துலாம்:

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் நோய்கள் குறையக்கூடிய காலமாகும். விருந்தினர்களின் வரவால் சிறிய மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். கலைத்துறையினர் பரிசும் பாராட்டுகளும் பெறுவர். தந்தை – மகன் உறவில் சிறிய பிரச்சினைகள் வந்து போகும். பந்தயம், பரிசுச்சீட்டு மூலம் பணம் பொருள் கிடைக்கலாம். சீதளம், ஒவ்வாமை, வாயுத்தொல்லை, வயிற்று உபாதைகள் போன்றவை வந்து போகும். புதிய சொத்துக்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். புதிய தொழில் தொடங்கப் போட்ட திட்டங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து முயற்சி வெற்றி அடையும். நெருப்பு சம்பந்தமான தொழில்களைச் செய்பவர்கள், அரசியல்வாதிகள், மந்திரிப் பதவி வகிப்பவர்கள், காரச் சிற்றுண்டி வியாபாரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், மின்சாரப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! விசா சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்லதொரு முடிவை எதிர்பார்க்கலாம். விபரீதமான எண்ணங்களையும், தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையையும் தவிர்த்தல் நல்லது!

இராசியான எண்:- 1.
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- கிழக்கு.
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து காவி வஸ்திரம் தானம் செய்து வருக!

விருச்சிகம்:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான விஷயத்தில் சச்சரவுகள் வந்து போகும். விருந்தினர்களின் வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்விகச் சொத்து போன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! அரசு வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான முடிவுகள் வந்து சேரும். நீண்ட காலமாகத் திரும்பி வராமலிருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை காவல்துறையினர் உதவியால் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். செய்தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தள்ளிப் போடுங்கள்! குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் செலவு உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்க வேண்டும்! உணவகத் தொழில் போன்ற நெருப்பு சம்பந்தமான வேலைகளைச் செய்பவர்கள், மின்சாரம் சார்ந்த பணியாளர்கள், மின்சாரப் பொருட்களை விற்பவர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர், பங்கு வர்த்தகம் போன்ற தொழில்களில் உள்ளவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகளால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து சிகப்பு வஸ்திரம் தானம் செய்து வருக!

தனுசு:

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! கண்களில் கவனத்துடன் இருங்கள்! பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். பிரிந்து போன உறவுகளுடன் திரும்பவும் ஒன்று சேருவதற்கான காலமாகும். மூளை, நரம்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். உணவகத் தொழில் செய்பவர்கள், காவல்துறை ராணுவம் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், எரிபொருள் வியாபாரிகள், மின்சாரப்பொருள் வியாபாரிகள், மின்வாரியத்துறை சார்ந்தவர்கள், கேஸ் வெல்டிங் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், விறகு நிலக்கரி போன்ற பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். புதிய வீடு நிலம் வாங்க நீண்ட காலமாகப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டாம்! செய்தொழிலில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது! உற்றார் உறவினர் வருகையால் பணச் செலவுகள் உண்டாகும். புதுப்பித்துக் கட்டுவதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 9.
இராசியான நிறம்:- சிகப்பு.
இராசியான திசை:- தெற்கு.
பரிகாரம்:- துர்க்கை வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வருக!

மகரம்:

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். ஆலயப்பணிகளில் பங்கு கொண்டு நிம்மதி அடைவீர்கள். மஹான்களின் தரிசனத்திற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்க்க வேண்டும்! பெண்களால் தொலைவிலிருந்து நற்செய்திகளும் பொருள்வரவும் உண்டாகும். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! புதிய வீடு, நில புலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்! அரசு வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். பழைய பொருட்கள் விற்பவர்கள், கமிஷன் ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரக்கூடிய காலமாகும். வங்கிகளிலிருந்து நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. காதல் விஷயங்களில் அநுகூலமான சில செய்திகள் வந்து சேரும்.

இராசியான எண்:- 4.
இராசியான நிறம்:- கருப்பு.
இராசியான திசை:- வடமேற்கு.
பரிகாரம்:- பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து கருப்பு ஆடை தானம் செய்து வருக!

கும்பம்:

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அலுவலகப் பணியாளர்களுக்கு நினைத்த இடத்துக்குப் பணியிட மாற்றம் ஏற்படும். வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஏற்படலாம். பிரிந்து போன கணவன் – மனைவி உறவுகள் மீண்டும் தொடருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். மூலம், நீர் சம்பந்தமான உபாதைகள் போன்றவை வந்து போகும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் சில நன்மைகளை அடையலாம். தீராத, நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவது நல்லதாகும். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது! எழுத்துத்துறையினர், அச்சுத்தொழில் செய்பவர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். பொதுத்தொண்டு செய்பவர்களுக்கு நல்ல பெயர் புகழ் ஏற்படும் காலமாகும். சகோதர, சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற்று அவர்களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும்!

இராசியான எண்:- 5.
இராசியான நிறம்:- பச்சை.
இராசியான திசை:- வடக்கு.
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பச்சை வஸ்திரம் தானம் செய்து வருக!

மீனம்:

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை மூலம் காரணமற்ற பிரச்சினைகள் வந்து சேரக்கூடிய காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும். பொருளாதார நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் மிக நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். உடல்நிலை பாதிப்பால் வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும். காதல் சம்பந்தமான விஷயங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவியால் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். தந்தையின் உடம்பில், குறிப்பாகக் கண் காது ஆகியவற்றில் கவனம் தேவை! அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! இரும்பு – இயந்திர – இரசாயன சம்பந்தமான வியாபாரிகள், எண்ணெய் – பலசரக்கு போன்றவற்றை விற்பவர்கள், பணியாட்கள், கழிவுப்பொருட்களை வாங்குபவர்கள், உர வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வரக்கூடும். திருட்டுப் போன பொருட்கள் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். நீண்ட பயணங்களை மேற்கொள்ள முயற்சிப்பீர்கள்.

இராசியான எண்:- 8.
இராசியான நிறம்:- நீலம்.
இராசியான திசை:- தென்மேற்கு.
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து நீல வஸ்திரம் தானம் செய்து வருக!

***********************************************************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author