இராசிபலன்கள்(1-12-2014 முதல் 7-12-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். கணவன் – மனைவி உறவில் வெகு காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். தாயின் உடல்நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். காதல் விஷயங்களில் மிக எச்சரிக்கையுடன் இருங்கள்! உறவினர்கள், நண்பர்கள் போன்றோரின் எதிர்பாராத திடீர் வரவால் பணம், பொருட்செலவுகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள். விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். நீண்ட காலமாகப் பிரச்சினைகள் உண்டாகிப் பிரிந்து போன கணவன் – மனைவி இருவரும் திரும்ப ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும். நெடு நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். காது, முதுகு சம்பந்தமான வலி போன்ற உபாதைகள் வந்து போகலாம்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் செய்வதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராத பணம் கை வந்து சேர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாகத் திரும்பி வராத கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் போன்றவை நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வங்கிகளின் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைக்கும். பூர்விகச் சொத்து விஷயங்களில் மற்றவர்களின் உதவியால் சொத்து கை வந்து சேரும். கை கால்களில் கவனம் தேவை! வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். திரவப் பொருள் வியாபாரிகள், உப்பு, உரம் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடல்துறை சார்ந்தவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள், தாய் – சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்க்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டாகும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் ஆலய வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறக் கூடிய காலமாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதாக எண்ணிச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் காலமாகும். மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மனநிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகப் புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்கள். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி வந்து சேரும். படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு நடத்துபவர்கள், ஆபரண வியாபாரிகள் போன்ற கலைத்துறை சார்ந்தவர்களும், திருமணத் தகவல் மையம், திருமணக் கூடம் ஆகிவற்றை நடத்துபவர்களும் நற்பலன் அடைவர். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளுக்காகப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! இரத்த சம்பந்தமான உபாதைகள் வந்து போக வாய்ப்புகள் உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். காணாமல் போன பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். புதிய தொழில்கள் ஆரம்பம் செய்வதற்கான வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். அரசியல்வாதிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் காலமாகும். வாயுத் தொல்லை, வயிற்று உபாதை போன்றவை வந்து போகும். குலதெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவீர்கள். அஞ்சல்துறை சார்ந்தவர்கள், பேப்பர், அச்சு தொடர்பான தொழிற்சாலைகளை நடத்துபவர்கள். காய்கறி, இலை, கீரை, பருப்பு சம்பந்தமான உணவுப்பொருள் வியாபாரிகள், திரைப்படம், நாடகம் போன்ற கலைத்துறைகளைச் சார்ந்தவர்கள், மருந்துப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். திருப்பிச் செலுத்த இயலாமல் போகுமாகையால் புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். விவசாயம் செய்பவர்கள் சுமாரான விளைச்சல் மூலம் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடு செய்து பச்சை ஆடை தானம் செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் எதிர்பார்த்த செய்திகள் சற்றுத் தாமதமாகவே கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு மூலம் திடீர் தன வரவுகள் ஏற்படலாம். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவடைவீர்கள். வீடு வாகனங்களை வாங்குவதற்கும், தொழிற்சாலை வளர்ச்சிக்காகவும் நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கைக்கு வந்து சேரும் காலமாகும். மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருளையோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! தாய் வழிச் சொந்த பந்தங்களின் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். வெகு காலமாகப் பிரிந்துபோன கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. ஆடம்பர அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், கலைக்கல்லூரி மாணவர்கள், சிற்றுண்டி வியாபாரிகள், நறுமணப் பொருட்கள், பூஜைப்பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். புதிய ஆடை அணிகலன் வாங்குவதைத் தள்ளிப் போடுங்கள்! பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். நண்பர்களால் ஒரு சிலர் ஆதாயங்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை தானம் செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவி நாடிச் செல்லுவீர்கள். குடும்பத்தில் காரணமற்ற குழப்பங்களும் சச்சரவுகளும் வந்து போகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளுக்காக மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள் மிகவும் லாபம் அடைவர். உற்றார் உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பொதுத் தொண்டு நிறுவனத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது! வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். உறவினர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றின் மூலமாகத் திடீர் தன வரவுகள் உண்டாகலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்திருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடு செய்து கருப்பு ஆடை தானம் செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஒரு சில ஆதாயங்களையும் அடைவீர்கள். திருட்டுப்போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்குச் சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் வந்து சேரும். விவசாயம் சுமாரான நற்பலன் தரும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது. புதிதாக வீடு மாற முயற்சிப்பீர்கள். இனிப்புப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம், முதியோர் இல்லம் போன்றவற்றை நடத்துபவர்கள், கணினித்துறையினர், நில வளத்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பயணங்களின்பொழுது சம்பந்தம் இல்லாத புதிய நபர்கள் மூலமாகச் சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. மின்சாரம், அடுப்பு ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கையாளுதல் நல்லது! தொலை தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது! வாய், வயிறு, முதுகு போன்றவற்றில் சில உபாதைகள் வந்து போகலாம். பயணங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். இரும்பு, இயந்திரம், வேதியியல் போன்றவற்றைச் சார்ந்தவர்கள், பழைய பொருள் வியாபாரிகள், எண்ணெய் வியாபாரிகள், அலுவலக உதவியாளர்கள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள், கழிவுப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். வேலை இல்லாத படித்தவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பரிசும் பாராட்டும் சலுகைகளும் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது! உற்றார் உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகக் கூடிய காலமாகும். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு வீண் மனக் குழப்பங்கள் அடைய வேண்டாம். சொத்து, பண விஷயங்களில் மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்த்தல் நல்லது! குடும்பத்தில் பல காலமாக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையக் கூடிய காலமாகும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தொழிற்சாலை இருப்பிடம் போன்றவற்றை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் முயன்று அவற்றைச் சாதிப்பீர்கள்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து நீல ஆடை தானம் செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். திரும்பி வராமலிருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் போன்றவை காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமாகப் பணம் வந்து சேரும் காலமாகும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்க்கும் பொருட்டுச் செலவுகள் உண்டாகலாம். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்றுத் தாமதமாகவே தீரும். பயணங்களில் மிகுந்த கவனத்துடன் இருங்கள்! வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை. மாணவர்கள் நினைத்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கலாம். நாட்பட்ட தீராத வியாதிகள் தீரப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தில் திருமண விஷயமாகக் காரணமில்லாத சிற்சில மனக் கசப்புகள் வந்து போகும். இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், காவல்துறை, இராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், உணவகத் தொழில் செய்பவர்கள், தங்க நகை வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்களும் பாராட்டுக்களும் கிடைக்கும். தந்தை – மகன் உறவில் சிற்சில காரணமில்லாத பிரச்சினைகள் வந்து போகலாம். வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் நண்பர்கள் போன்றோரிடமிருந்து நல்ல செய்திகள் வந்து சேர வாய்ப்பு உள்ள காலமாகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களும் விவசாயம் செய்பவர்களும் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! காதல் விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். சொத்து, பண விஷயங்களுக்காக மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்ப்பது நல்லது! நரம்பு, எலும்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகலாம். பூ பழம் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், மந்திரிகள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை தானம் செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் காரணமற்ற செலவுகள் வந்து சேரலாம். வாயுத்தொல்லை, வயிற்று உபாதை போன்றவை வந்து போகலாம். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். தெய்வத் தொண்டுகளைப் பிரியத்துடன் செய்து நற்பெயர் எடுப்பீர்கள். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். நண்பர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். அரசியல்வாதிகளிடமிருந்து ஆதாயங்களைப் பெறுவீர்கள். பழுதுபட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நறுமணப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், கார் லாரி ஆடு மாடு போன்ற வாகனங்களை வியாபாரம் செய்பவர்கள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள் – மாணவர்கள், கட்டுமானப்பொருள் விற்பனை செய்பவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், திரைப்படம், நாடகம் போன்றவற்றைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்ய முயற்சி செய்வீர்கள். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது. காய்கறி, இலை போன்ற பொருட்களை விற்பவர்கள், மர வியாபாரம் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறிச் சிறிது முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த அரசு உதவித் தொகைகள் கிடைப்பதோடு நினைத்த இடங்களுக்குப் பணியிட மாற்றமும் ஏற்படக்கூடிய காலமாகும். செய்யும் தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைச் சிறிது தள்ளிப் போடுதல் உகந்ததாகும்! தந்தை – மகன் உறவில் வெகு காலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் மனச் சிக்கலை விலைக்கு வாங்க வேண்டாம்! தாயின் உடல்நிலை பாதிப்புகள் இன்னும் சில காலம் வரை நீடிக்கும். கணவன் – மனைவி உறவில் நல்ல மன மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பொருள் வரவும் நிம்மதியும் கிடைக்கும். அவர்களால் பரிசும் பாராட்டுக்களும் பெறுவீர்கள்!

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து பச்சை ஆடை தானம் செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author