இராசிபலன்கள்(19-1-2015 முதல் 25-1-2015 வரை)Rasi

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். அசைவப் பொருள் வியாபாரிகள், கழிவுப் பொருள் வியாபாரிகள், தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்பவர்கள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்த பணியாளர்கள், சாயப் பொடி வியாபாரிகள், துப்புரவுத் தொழில் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம். புதிய கடன் வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து காணப்படும். நண்பர்கள், உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். கொடுக்கல் – வாங்கலில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது! பணியாளர்களால் ஆதாயம் இல்லை. குடும்பத்தில் காரணம் இல்லாத விஷயங்களால் வீண் பிரச்சினைகள் வந்து போகும். புனிதப் பயணம் சென்று வரப் போட்டிருந்த திட்டங்களில் சில தடைகள் வந்து விலகும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் கணபதி வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வீடு வாகனங்களைப் பழுது பார்க்கும் வகையில் புதிய செலவுகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது. பொழுதுபோக்கு விஷயங்களுக்காக வீண் செலவுகள் ஏற்படலாம். பயணத்தில் கவனத்துடன் சென்று வாருங்கள்! பூர்விகமான இடங்களுக்குச் சென்று வரப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறக்கூடிய காலமாகும். எழுதுபொருள் வியாபாரிகள், வங்கிப் பணி புரியும் எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சிறிது தடைகள் வந்து விலகும். கணவன் – மனைவி உறவில் சற்று கவனத்துடன் நடந்து கொள்வது நல்லதாகும்! தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். பொதுப் பணிகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது! உடற்சூடு, மேகம் போன்ற உபாதைகள் வந்து போகலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பணம் கிடைக்கலாம். சகோதரர்களால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளும், மனக் குழப்பங்களும் வந்து சேரும். புதிய கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போகக்கூடும் என்பதால் அதைத் தவிர்த்தல் நல்லது!

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாக வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்களைத் துணிச்சலுடன் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். நெருப்பு, மின்சாரம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், கணினி சாதன வியாபாரிகள், இணையத்தளம் நடத்துபவர்கள், கேஸ், வெல்டிங் போன்ற தொழிற்சாலைகளில் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலனை அடைய வாய்ப்பு உள்ளது! பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் திருப்தி அடைவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவது போன்ற முயற்சிகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாம். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லதாகும். வெகு காலமாகக் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கி அவை நடைபெறக்கூடிய காலமாகும். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசும் பாராட்டும் பண உதவியும் கிடைக்கும். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். புதிய வீடு வாகனங்கள் வாங்குவது போன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் சற்றுத் தாமதம் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுக் குறைந்து நண்பர்களால் பொருளுதவி கிடைக்கும். வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தலைதூக்கும். இரும்பு, இயந்திரம், டீசல், பெட்ரோல், எண்ணெய் வியாபாரிகள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், கமிசன் தொழில் செய்பவர்கள், கழிவுப்பொருள் வியாபாரிகள், பலசரக்குக் கடை நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். மற்றவர்களின் விஷயங்களில் வீணாகத் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள்! குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். நீண்ட தூரப் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த காரியங்களில் சில பின்னடைவுகள் ஏற்படும். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்றுக் குறைந்து காணப்படும். வாயுத் தொல்லை, வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியாக திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் வழிபாடும் அன்னதானமும் செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காதல் விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது! பிள்ளைகளுக்கு வெகு காலமாகத் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய காலமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். நாட்பட்ட விசா சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பாக நல்ல செய்திகள் வந்து சேரும். வேலை கிடைக்காதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலமாகும். வாயு, வயிற்று உபாதைகள் வந்து போகலாம். பயணம்த்தில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லதாகும்! நெருப்பு, மின்சாரம் போன்றவற்றிலும் கவனத்துடன் இருப்பது நல்லது! வீட்டைத் திருத்திக் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். பொதுத் தொண்டுகளில் எச்சரிக்கையுடன் பணியாற்றுவது நல்லது. புனிதப் பயணம் சென்று வருவதற்காகப் புதிய கடன்களை வாங்கி அடைப்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். விவசாயம் செய்பவர்கள் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவர். நீதிமன்ற வழக்கு விஷயங்களில் முடிவுகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகும். கணவன் – மனைவி உறவில் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். ஒரு சிலருக்கு நினைத்த இடத்துக்குப் பணியிட மாற்றம் ஏற்படலாம். விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. வெளியூர்ப் பயணங்கள் மூலம் இது நாள் வரை தீராத நோய்களுக்கு விடைகள் காணுவீர்கள். அரசு வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். தரகு, ஏஜன்சி, கமிசன் போன்ற தொழில்கள் செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள், பழைய பொருள் வியாபாரிகள், அறிவியல்துறை சார்ந்த அலுவலகப் பணி புரிபவர்கள் ஆகியோர் லாபம் அடைவீர்கள். காதல் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிற்சாலையைத் திருத்தி அமைக்கும் திட்டங்களில் வெற்றி அடையலாம். காணாமல் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். நிலம், நகை ஆகியவற்றை அடகு வைப்பதன் மூலமாகப் பணம் வந்து சேரும். வேற்று மதத்தவரால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். பயணத்தில் அரசியல்வாதிகள் சிலரின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கவனமாக நடந்து கொள்வதால் வீண் பிரச்சினைகள் குறையும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணக் காரியங்கள் நிறைவேறும். பழைய பொருட்களை விற்றுப் புதிய பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு மாற்றம் செய்ய போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும் காலமாகும். தென் திசையில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வந்து சேரும். திரவப் பொருள் வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனை நடத்துபவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். மாணவர்கள் கல்வியில் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள். மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து நிம்மதி அடைவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் போன்றோரின் ஆதரவால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். குலதெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லதாகும்! வாயு, வாதம் போன்ற உபாதைகள் வந்து போகலாம்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வகைகளில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர் பிரச்சினைகளில் வீணாகத் தலையிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்! பங்குத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். வங்கிகள், கொடுக்கல் – வாங்கல் சம்பந்தமான அலுவலகங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சொந்த பந்தங்களுடன் குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்! பூஜைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், கணினி சாதன வியாபாரிகள், பேராசிரியர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், நகை வியாபாரிகள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். தந்தை – மகன் உறவில் நல்ல சூழ்நிலை காணப்படும். பயணத்தில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக வீண் பிரச்சினைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்க்க வேண்டும்! தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறையும். வெகு காலமாகத் திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்குத் தடைகள் நீங்கித் திருமணம் ஆகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், காய்கறி வியாபாரிகள், மர வியாபாரம் செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், மருந்து விற்பனையாளர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். பணியாற்றுபவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயர் எடுப்பீர்கள். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! எடுத்துக் கொண்ட காரியங்களை மிகுந்த முயற்சியின் மேல் செய்து முடிப்பீர்கள். பிறருக்காக உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் சற்றுக் குறைந்து காணப்படும். புதிய மருத்துவர்களின் உதவியால் நோய்கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். நீண்ட நாட்களாக வராத கடன், கொடுத்திருந்த பணம் போன்றவை பிரச்சினைகளின் பேரில் திரும்பக் கிடைக்கும். தீராத நோய்க்கு வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து ஓரளவு மகிழ்ச்சி அடையலாம்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். மேகம், உடற்சூடு சம்பந்தமான உபாதைகளும், ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற தொற்று நோய்களும் வந்து நீங்கும். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது! திரைப்படம், நாடகம், இசைத்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். நாட்பட்ட பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்கள் வாங்க முயற்சிப்பீர்கள். வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்! தேவையற்ற புதிய நண்பர்களின் தொடர்புகளால் நிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! மனைவியின் உடல்நலக் குறைவு காரணமாகச் செலவுகள் உண்டாகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களால் ஏமாற்றம் அடைய வேண்டாம்! தூரத்து உறவினர்களின் வருகையால் சில சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். விபரீதமான எண்ணங்களை நினைத்து வீண் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்! புதிய கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லதாகும்! பிரிந்து போன கணவன் – மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேரக்கூடிய காலமாகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. உயரமான இடங்களில் மிகுந்த கவனத்துடன் வேலை செய்வது நல்லது! குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைந்து நிம்மதி ஏற்படும். பொது நலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பூர்விகமான இடங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது. செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைத்த போதிலும் சில பிரச்சினைகள் வந்து மிகுந்த முயற்சியின் மேல் சரி செய்து விடுவீர்கள். கலைத்துறை சார்ந்த பொருட்கள் விற்பவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், நகை வியாபாரிகள், கமிசன் தொழில் செய்பவர்கள், வீடு நிலம் போன்றவற்றை விற்பவர்கள், நெருப்புத் தொழில் செய்பவர்கள், உணவு விடுதி நடத்துபவர்கள், காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் ஆகியோர் ஆதாயங்களை அடைவர்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்! நிம்மதியின்மை காரணமாகத் தூக்கம் பாதிக்கப்படும்; உணவருந்துதலும் தாமதமாகும். பலசரக்கு, இரும்பு, எண்ணெய் போன்றவற்றை வியாபாரம் செய்பவர்கள், மின்சாரம், வேதியியல், அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள், அரசுத்துறை சார்ந்த அலுவலக உதவிப்பணி ஆற்றுபவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலனை அடைவீர்கள். அரசியல்வாதிகளால் சில எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். நண்பர்கள் உறவினர்களின் வருகையால் பண உதவியும் நிம்மதியும் உண்டாகும். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றுக்காக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்திருந்த பண உதவி கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதில் சற்றுத் தாமதம் ஏற்படும். நாட்பட்ட தீராத நோய்க்கு விடை காணும் காலமாகும்! அண்டை அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது! வீடு, தொழிற்சாலை ஆகியவற்றை இடமாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது! குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் நிறைவேறும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும் அம்மன் ஆலய வழிபாடும் செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author