இராசிபலன்கள்(20-10-2014 முதல் 26-10-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வர வேண்டிய பூர்விகச் சொத்துக்கள் சம்பந்தமாக இதுநாள் வரையில் இருந்து வந்த பிரச்சினைகளில் பெரிய மனிதர்களின் தலையீட்டால் நல்ல முடிவுகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் செலவுகளும், நிம்மதியின்மையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை! வங்கித் தொழில் புரிவோர், வழக்கறிஞர்கள், அஞ்சல்துறை சார்ந்தவர்கள், எழுதுபொருள் வியாபாரிகள், மூலிகை சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள், மருத்துவர்கள், மருத்துவத்துறை மாணவர்கள், அலுவலக எழுத்தர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். நீண்ட பயணங்களை மேற்கொள்வதன் மூலம் எதிர்பார்த்த காரியங்களில் மன நிறைவடைவீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள். காதல் விஷயங்களில் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். நிறுவனப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாகி இருக்கும். விசா சம்பந்தமான நாட்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். அசைவப் பொருள் வியாபாரிகள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் வியாபாரிகள், அணுசக்தித்துறை சார்ந்த அறிவியலாளர்கள், பழைய பொருள் வியாபாரிகள், அலுவலக உதவிப் பணி ஆற்றுபவர்கள், மடாதிபதிகள், மதபோதகர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த வங்கி உதவித்தொகை கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. விவசாயம் சுமாராகப் பலிதமாகும். புதிய ஆடை ஆபரணங்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும்! சளி, ஒவ்வாமை (allergy) போன்ற தொல்லைகள் வந்து போகும். சமுதாய முன்னேற்றப் பணிக்கான பொதுத் தொண்டுகளில் தலையிட்டுப் பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதன் மூலம் செலவுகள் உண்டாகலாம். பயணத்தின்போது முன் கோபம் தவிர்த்தல் நல்லதாகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள் – மாணவர்கள், கலைத்துறையில் பணியாற்றுபவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், கலைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர்கள், கட்டுமானப்பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேர இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பந்தயம், பரிசுச்சீட்டு போன்றவற்றில் ஈடுபட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம்! வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் முன் கோபத்தைத் தவிர்த்துப் பேசிப் பழகுதல் நல்லதாகும். வாயு, வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். வீட்டை அலங்கரிப்பதிலும், வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமும் செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் பரிசும் பாராட்டுக்களும் கிடைக்கும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கட்டி முடிக்கப்படாத தடைப்பட்ட ஆலயப் பணிகளை மீண்டும் தொடர்ந்து செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு, தொழிற்சாலை போன்றவற்றைப் பழுது பார்ப்பதன் மூலம் செலவுகள் ஏற்படலாம். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த புனிதப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். காய்கறி, இலை, கீரை போன்ற உணவுப்பொருள் வியாபாரிகள், கலைக்கல்லூரிப் பேராசிரியர்கள் – மாணவர்கள், கலைத்துறையில் சேவை புரிபவர்கள், ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், கலைப்பொருட்கள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைய வாய்ப்பு உள்ளது. பயணத்தின்போது வாகனங்களில் மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லது! புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள். பிரிந்து போன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ள காலமாகும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். வீடு, வாகனங்களை வாங்குவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவீர்கள்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை.
இராசியான திசை:- தென்கிழக்கு.
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது. அண்டை அயலாருடன் காரணமற்ற சிறிய விஷயங்களுக்காக வீண் பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனத்துடன் பேசிப் பழகுதல் நல்லது! தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசும் பாராட்டும் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவரால் நல்ல தகவல்கள் கிடைக்கக்கூடும். தாயின் உடல்நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும். பூ, பழம், நறுமணப் பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், கணினிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், ஆதரவற்றோர் இல்லம் நடத்துபவர்கள், ஆன்மிகத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் மிகுந்த நற்பலன்களை அடைவர். மற்றவர்களின் விஷயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்த்தல் நல்லது! பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டுகளும் பொருள் வரவும் உண்டாகும். தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! வாயு, வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகலாம். ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், நறுமணப் பொருள் விற்பவர்கள், நவரத்தின வியாபாரிகள், நகை வியாபாரிகள், பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள், திரவப் பொருள் வியாபாரிகள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். வீடுகளிலோ பயணத்தின்போதோ பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருங்கள்! பயணத்தில் புதிய நட்புகள் உண்டாகி அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். எலும்பு, நரம்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகலாம். இதுநாள் வரையில் இருந்து வந்த பண நெருக்கடி மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் நிம்மதி அடைவீர்கள்.
காதல் சம்பந்தமான நாட்பட்ட விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். மகான்களின் எதிர்பாராத ஆசிகளால் நிம்மதி அடைவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக் குழப்பங்கள் உண்டாகலாம். கணவன் – மனைவி உறவில் இதுநாள் வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மன நிறைவை அடைவீர்கள். அசைவப் பொருட்கள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் வியாபாரிகள், அணுசக்தித்துறை சார்ந்த அறிவியலாளர்கள், பழைய பொருள் வியாபாரிகள், அலுவலக உதவிப் பணி ஆற்றுபவர்கள், மடாதிபதிகள், மதபோதகர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். நீண்ட காலமாகக் காணாமல் போன அல்லது நீண்ட காலமாகத் திரும்பி வராத பணம், பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விவகாரங்களின் முடிவு தாமதம் ஆகலாம். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும். வெளிநாட்டில் இருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் இட்டுப் பிதுர் வழிபாடு, காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடுகள் ஆகியவற்றைச் செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். மின்சாரம், எரிபொருள், உணவகம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், கணினி சாதன வியாபாரிகள், கணினியில் பணிபுரிவோர், வேதியியல், அணு ஆற்றல் ஆகிய அறிவியல் துறைகளைச் சார்ந்தவர்கள், காவல்துறை, இராணுவம், தீயணைப்புத்துறை ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள், மசாலாப் பொடிகளை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் செலவும், புதிய பொறுப்புக்களும் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருத்தல் உகந்ததாகும். பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுவது நல்லது! தொழிலில் புதிய கூட்டாளிகளால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! சளி, காய்ச்சல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். பொதுச் சேவைகளான ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு நற்பெயர் எடுப்பீர்கள். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருங்கள்!

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணியது நிறைவேறும். மகான்களின் தரிசனத்தால் மகிழ்ச்சியும் காரியத்தில் வெற்றியும் அடைவீர்கள். உடல்நிலையால் இதுநாள் வரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். நிலபுலன் சம்பந்தமான பழைய வழக்குகள் மீண்டும் தொடரும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். அரசியல்வாதிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுப் பொறுமையுடன் இருத்தல் நல்லது. இரும்பு, இயந்திரம், வேதியியல் சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள், பழைய பொருள் விற்பனை செய்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், கமிஷன் தொழில் செய்பவர்கள், இரும்பு ஆலைகளில் பணியாற்றுபவர்கள், எண்ணெய், பலசரக்கு வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். அலுவலகப் பணியாளர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீடுகளைப் புதுப்பித்துக் கட்டும் திட்டங்கள் நிறைவேறும். காதல் விஷயங்களில் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது!

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் இட்டு சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். கை விட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பயணத்தில் கவனம் தேவை! வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த பண உதவி கிடைப்பதற்குச் சற்றுத் தாமதம் ஆகலாம். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் வீண் செலவுகள் உண்டாகும். தீராத நாட்பட்ட நோய்களுக்குப் புதிய மருத்துவரின் உதவியை நாடுவீர்கள். சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்! மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருங்கள்! மின்சாரம், எரிபொருள், உணவகம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள், கணினி சாதன வியாபாரிகள், கணினியில் பணிபுரிவோர், வேதியியல், அணு ஆற்றல் ஆகிய அறிவியல் துறைகளைச் சார்ந்தவர்கள், காவல், இராணுவம், தீயணைப்பு ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். நிறுவனப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடங்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். ஒரு சிலர் வீடு, தொழிற்சாலை ஆகியவற்றைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற புதிய நட்புகளால் நிம்மதி இழக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருங்கள்!

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கண், காது போன்ற உறுப்புகளில் கவனம் தேவை! வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். குடும்பச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் பெரிய மனிதர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி மாறிச் சற்று முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாடு வாழ் நண்பர்கள் உறவினர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது! ஒரு சிலருக்குப் பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற திடீர் அதிர்ஷ்ட வழிகளில் பண வரவு உண்டாகும். சகோதர சகோதரிகளின் தடைப்பட்டு வந்த திருமணக் காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். நெருப்பு, காவல்துறை, ராணுவம் சார்ந்தவர்கள், வாகனத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், அரசியல்வாதிகள், கமிஷன், தரகு போன்ற தொழில்களைச் செய்பவர்கள், மந்திரிகள், வெளிநாட்டுத் தூதர்கள் ஆகியோர் லாபம் அடைவர். காதல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். தீராத, நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வேறு மருத்துவர்களின் உதவியை நாடுவீர்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், பொதுத்தொண்டு நிறுவனத்தினர், ஆலயப்பணி புரிவோர், வங்கி எழுத்தர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், பத்திரிகையாளர்கள், காய்கறி வியாபாரிகள், மூலிகை மருந்து வியாபாரிகள், எழுதுபொருள் வியாபாரிகள் ஆகியோர்க்கு நற்பலன் வரக் கூடிய காலமாகும். பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் தொடர்பு ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நிம்மதி இழக்காதீர்கள்! வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் பணத்தை ஏமாற வேண்டாம்! புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகை கை வந்து சேரும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வர இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது! குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரச் சுற்றுலா சென்று வருவீர்கள். புதிய செலவுகளைச் செய்வதன் மூலம் விசா பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author