இராசிபலன்கள்(23-2-2015 முதல் 1-3-2015 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்கள் தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படலாம். கணினி, மின்சாரம் போன்றவற்றில் பணி செய்பவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், தானிய வியாபாரிகள், கார உணவுப்பொருள் விற்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். நீண்ட பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் வந்து சேரும். சமுதாய முன்னேற்றப் பணிகள், பொதுநலத் தொண்டுகள் போன்றவற்றில் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைவீர்கள். நீண்ட காலமாகத் திரும்பி வராமல் இருந்த கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் திரும்பக் கைக்கு வந்து சேரும். பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழிலில் காரணமற்ற பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். வண்டிகளில் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்வது நன்று! வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வர வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி ஆலய வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். கணவன் – மனைவி உறவில் காரணமற்ற வீண் பிரச்சினைகள் உருவாகி, மனக் கசப்பு ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்றுக் குறையும். இரும்பு, எண்ணெய், பலசரக்கு போன்ற பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், பெட்ரோல், டீசல் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். வெகு தூரப் பயணங்களால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நீண்ட தூரச் சுற்றுலாக்களை மேற்கோண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காணாமல் போன பொருட்கள் காவல்துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வட்டித் தொழில் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்! விவசாயம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வருவார்கள். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். காதல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். தந்தை வழிப் பூர்விகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வாயுத்தொல்லை, வயிற்று உபாதை போன்றவை வந்து போகலாம். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது!

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஐயப்பன் ஆலய வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். வீடு, தொழிற்சாலை ஆகியவற்றைப் புதிய இடத்துக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! கண், காது ஆகியவற்றில் சிற்சில உபாதைகள் வந்து போகும். திரும்பி வராத நாட்பட்ட கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் ஆகியவை மற்றவர்களின் தலையீட்டால் திரும்பக் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்குக் கல்வி பயிலும் இடங்களில் அவப்பெயர் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! தந்தை – மகன் உறவில் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! வேதியியல் தொழிற்சாலைகளில் பணி செய்பவர்கள், மத போதகர்கள், அசைவ உணவுப்பொருள் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். தீராத நாட்பட்ட நோய்கள் தீரப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் திடீர் வரவால் துணிச்சலும் பொருள் வரவும் உண்டாகலாம். சகோதர சகோதரிகளுடன் வீண் சஞ்சலங்களும் பிரச்சினைகளும் உருவாகும். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த உதவித்தொகை கிடைக்கும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். விட்டுப் போன பழைய பிரச்சினைகளால் மீண்டும் தொல்லைகள் வந்து நீங்கும். நகைத் தரகர்கள், ஆலயப்பணி செய்பவர்கள், பொறியியல், கணினி போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். நண்பர்களால் பொருள் நஷ்டமும் மன சஞ்சலமும் ஏற்படலாம். நாட்பட்ட சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செய்யும் தொழிலில் பங்காளிகளுடன் இருந்த மன சஞ்சலங்கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். தாய் வழி மாமன் மூலம் சில பிரச்சினைகள் வந்து சேரும். பூர்விகச் சொத்து சம்பந்தமாக வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஆலயத் தொண்டுகளிலும், பொது நலச் சேவைகளிலும் பிரியத்துடன் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். வெளிநாட்டு விஷயங்களில் எதிர்பார்த்த நபர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் இல்லை. பெண்கள் விஷயத்தில் அவப்பெயர் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லது! பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் மனக் கசப்பும் அவர்களால் பணியிட மாற்றமும் ஏற்படலாம்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள், அரசு உயர் பதவி வகிப்பவர்கள், நெருப்புத் தொழில் செய்பவர்கள், ஜவுளி, நூல் வியாபாரிகள், மருந்துப் பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், தானிய வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக இருப்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும்! பெண்களால் தென் திசையில் இருந்து நல்ல செய்திகளுடன் பொருள் வரவும் உண்டாகலாம். பயணத்தின்போது மிகவும் கவனத்துடன் சென்று வருதல் நல்லது! சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் பெரியவர்களின் உதவியால் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த பணம் கை வந்து சேரும். காதல் விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சற்று சுமாராகவே இருப்பதால் புதிய கடன்களை வாங்க முயற்சி செய்வீர்கள். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில காரியங்களில் வெற்றி அடைவீர்கள். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. பிள்ளைகளால் தொல்லைகளும் செலவும் ஏற்படலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது! நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். புதிய வீடு, நில புலன்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறலாம். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். பங்காளிகளுடன் செய்யும் தொழில் விஷயங்களில் சற்றுப் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது! குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் காலமாகும். பயணத்தில் பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் போன்றோருடனான சந்திப்புக்களால் நன்மை அடைவீர்கள். கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும்! தந்தை – மகன் உறவில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். பூஜைப் பொருட்கள் விற்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், திரவ சம்பந்தமான வியாபாரிகள், ஆலயப் பணி செய்பவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கடல்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு, உர வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பயணத்தின்போது வண்டிகளில் மிகுந்த கவனத்துடன் சென்று வாருங்கள்! மற்றவர்களை நம்பிப் பணமாகவோ பொருளாகவோ கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டுகளும் கிடைக்கும். வீட்டைத் திருத்திக் கட்டி அலங்காரம் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். வாயுத்தொல்லை, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது! வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். கணவன் – மனைவி உறவுக்குள் சிறிய பிரச்சினைகளுக்காக வீண் மனக் கசப்பு வந்து சேரும். அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். புனிதப் பயணம் சென்று வருவதற்கான முயற்சிகளில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு விலகும். கலைக் கல்லூரி மாணவர்கள் – ஆசிரியர்கள், திரைப்பட – நாடகத்துறை சார்ந்தவர்கள், சிற்றுண்டி வியாபாரிகள், அலங்காரப் பொருள் வியாபாரிகள், திருமணத் தகவல் நிலையத்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் வெகுவாகக் குறைய வாய்ப்பு உள்ளது. மாமன் வழியின் மூலமாக எதிர்பாராத சில ஆதாயங்கள் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் பரிசு, பாராட்டுக்களுடன் நல்ல மதிப்பெண்களையும் பெறுவார்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த பண உதவி கிடைக்கும். சமுதாய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் பெயர், புகழ் ஏற்பட்டு அதனால் மகிழ்ச்சி அடையும் காலமாகும். பூஜைப்பொருள் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பொதுத் தொண்டு நிறுவனத்தினர், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், கணினிப் பணி செய்பவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள், ஆலயங்களில் பணி புரிபவர்கள், பொதுநலத்துறை சார்ந்த பணியாளர்கள் ஆகியோர் லாபம் அடைவர். வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் வர இருப்பதால் கவனத்துடன் இருங்கள்!

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! காய்ச்சல் போன்ற உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். உலோகப்பொருள் வியாபாரிகள், இராணுவம், காவல்துறை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள், நில புலன்களை வாங்குவோர், விற்போர், தீயணைப்புத்துறை, உணவகத் தொழில் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், மசால் பொடி வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். பெண்களால் வட திசையில் இருந்து பொருள் வரவு உண்டாகும். அரசு சம்பந்தமான நாட்பட்ட வழக்கு விஷயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் வெற்றி பெறுவீர்கள். பழைய வீடு வாகனங்களைப் புதுப்பித்தலுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கல்வியில், கல்வி பயிலும் இடங்களில் சிற்சில சச்சரவுகள் வர இருப்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் இருத்தல் வேண்டும்! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட வழிகளில் பணம் கிடைக்கும் எனக் கருதி ஏமாற்றம் அடைய வேண்டாம்! வேற்று மதத்தவரால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இது நாள் வரை இருந்து வந்த நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் நன்றாக இருக்கும். தலைவலி, முதுகுவலி போன்ற உபாதைகள் வந்து போகலாம். கணவன் – மனைவி உறவில் இன்னும் சற்றுப் பிரச்சினைகள் வந்து போகலாம். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற விஷயங்களில் ஏமாற வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது! விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீர வாய்ப்பு உள்ளது. வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். ஆலய வழிபாடுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் நிம்மதி அடைவீர்கள். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் நல்ல பலன்கள் கிடைக்கும். உறவினர்களின் வரவால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வேலை கிடைக்காத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய காலமாகும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவற்றை விற்பவர்கள், எழுத்துத்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், அரசு வழக்குரைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணி செய்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளின் மூலமாகப் புதிய கடன்கள் வாங்குவதற்கான முயற்சிகளால் செய்யும் தொழிலில் சிறிது தாமதம் ஆகலாம். கால், கைகளில் மிகவும் கவனம் தேவை! நாட்பட்ட பழைய வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய காலமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத ஆதாயங்கள் வந்து சேரும். புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் இன்னும் சிறிது தாமதம் ஏற்படலாம். பணியில் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்துக்குப் பணியிட மாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சகோதரர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் சம்பந்தமான விஷயங்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடி வெற்றி பெறுவீர்கள். பழைய இரும்பு, இயந்திரம், வேதியியல் சார்ந்த தொழிற்சாலைகளில் பணி செய்பவர்கள், இவற்றை வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள், அழுகுபொருள் வியாபாரிகள், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும், காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடும் செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். மகான்களின் தரிசனங்களால் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி அடையும் காலமாகும். திரைப்படம், நாடகம், இன்ன பிற கலைத்துறை சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், நடிகர்கள், கலைத்தொழில் செய்பவர்கள், பாத்திர வியாபாரிகள், கலைக்கல்லூரி சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். வேலை கிடைக்காத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வந்து சேரும். சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் சென்று வருதல் நல்லதாகும்! விடுபட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் காலமாகும். வெகு காலமாக எதிர்பார்த்திருந்த வங்கி உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெகு காலமாகக் காணாமல் போயிருந்த பொருட்கள், நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும். வீடு, வாகனங்களைப் பழுது பார்த்தல் மூலம் புதிய கடன்கள் ஏற்படலாம்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வருக!

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author