இராசிபலன்கள்(24-11-2014 முதல் 30-11-2014 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நோய்கள், கடன் தொல்லைகள் தீர ஆலய வழிபாடுகளைச் செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வங்கிகள் மூலம் புதிய வீடு நிலம் வாங்குவதற்கான திட்டங்கள் சற்றுத் தாமதமாகவே நிறைவேறும். விவசாயம் செய்பவர்கள் சற்று கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷங்களுக்காகப் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். திரைப்படம் நாடகம் போன்ற கலைத்துறைகளைச் சார்ந்தவர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், இனிப்பு வியாபாரிகள், திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். அண்டை அயலாரிடம் கவனமாகப் பேசிப் பழகி விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் மன நிறைவடைவீர்கள். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வடமேற்குத் திசையில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும். வெகு காலமாகப் பிரச்சினையில் இருந்து வந்த பூர்விகச் சொத்துக்கள் சட்டப்பூர்வமாகக் கைக்கு வந்து சேரும். குழந்தைகளுக்காக ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறையும். செய்யாத குற்றத்துக்காக அவப்பெயர் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்!

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. நீதிமன்றம், வழக்குப் போன்ற விஷயங்களில் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெகு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திரும்பி வராமலிருந்த பணம், பொருட்கள் போன்றவை பெரிய மனிதர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் நினைத்த இடத்திற்குப் பணியிட மாற்றமும் ஏற்படலாம். புதிய வீடு, நிலம் வாங்குவதற்காகப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுப் பணிகளில் பங்கு கொண்டு நிம்மதி அடைவீர்கள். பயணங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்! நரம்பு, எலும்பு ஆகியவற்றில் சிற்சில பாதிப்புகள் வந்து போகும். கணவன் – மனைவி உறவு சுமாராகக் காணப்படும். அஞ்சல்துறை சார்ந்தவர்கள், அச்சுத் தொழில் செய்பவர்கள், எழுத்தாளர்கள், இசை அமைப்பாளர்கள், டிராவல்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள், பத்திரிக்கைத்துறை சார்ந்தவர்கள், புத்தக வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- புதன்கிழமையில் மகாவிஷ்ணு வழிபாடு செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். நகை வியாபாரிகள், பூஜை சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், பேராசியர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் திருப்தி அடைவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். வேற்று மதத்தவரால் சில ஆதாயங்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் வந்து சேரும். பணத் தேவைகளுக்காகப் பூர்விகச் சொத்துக்கள் சிலவற்றை விற்பீர்கள். உடற்சூடு, காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகலாம். புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் வங்கிகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். விட்டுப் போன பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்குவதன் மூலம் சில கவலைகள் வந்து நீங்கும். விவசாயம் செய்பவர்கள் புதிய விவசாய முறைகள் மூலம் எதிர்பாராத நல்ல லாபம் அடைவீர்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி ஆலய வழிபாடு செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். அசைவ உணவுப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பழைய இரும்புப் பொருட்கள், பழைய பேப்பர் போன்ற பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், அழுகுபொருள் வியாபாரிகள், மத போதகர்கள், அலுவலக உதவிப் பணி செய்பவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நிம்மதியும் சந்தோஷமும் அடைவீர்கள். காதல் போன்ற பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். நீண்ட காலமாகப் பிரச்சினையில் இருந்து வந்த அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும் மருத்துவச் செலவுகளும் உண்டாகலாம். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நன்மையைத் தரும். பயணத்தில் மிகுந்த கவனத்துடன் சென்று வாருங்கள்! வெகு நாட்களாகக் காணாமல் போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும் காளி போன்ற அம்மன் வழிபாடுகளும் செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் பெரியவர்களின் தலையீட்டால் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும் காலமாகும். தீராத நாட்பட்ட நோய்களுக்கான மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். நீண்ட காலமாகத் திரும்பி வராத பணம் கை வந்து சேரும். புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீர வாய்ப்பு உள்ளது. பூர்விகச் சொத்துக்கள் சிலவற்றை விற்பதன் மூலமாகப் பண வரவு உண்டாகும். கணவன் – மனைவி உறவில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். எடுத்த காரியங்களைச் சற்று முயற்சி செய்து துணிச்சலுடன் முடிப்பீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். தாயின் உடல் பாதிப்புக்களால் மன உளைச்சலும் செலவும் உண்டாகலாம்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். காதல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! பொதுக் காரியங்களில் தலையிட்டு நற்பெயர், புகழ் அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பூ, பழம், சிற்றுண்டி வியாபாரிகள், வாசனைத் திரவிய வியாபாரிகள், ஆலயப் பணி செய்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்த பணியாளர்கள், மடாதிபதிகள், பூஜைப் பொருள் வியாபாரிகள், ஆதரவற்றோர் இல்லம் நடத்துபவர்கள், தாய்-சேய் நல விடுதிப் பணியாளர்கள், பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவர். கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளில் உறவினர்களின் தலையீட்டால் ஓரளவு நிம்மதி அடைவீர்கள். காதல் விஷயங்களில் எதிர்பார்த்திருந்த நல்ல முடிவுகள் வந்து சேரும். பயணத்தின்போது கவனத்துடன் சென்று வருதல் நல்லது! வங்கிகள் மூலமாக எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைப்பதில் இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- வியாழக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். கண், காது, முகம் போன்றவற்றில் சிற்சில உபாதைகள் வந்து போகும். இதுநாள் வரையில் தடைப்பட்டு வந்த காரியங்களை தைரியத்துடன் சற்று முயற்சி செய்து முடிப்பீர்கள். தந்தை – மகன் உறவில் விரிசல்கள் ஏற்பட்டு விலகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த உதவித் தொகைகள் கிடைக்க இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகளால் ஆதாயம் இல்லை. வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்களை நம்பிக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! புதிய வீடு வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். சிறு தின்பண்ட வியாபாரிகள், சமையல் கல்லூரி நடத்துபவர்கள், அதில் பணி புரிபவர்கள், அரசு உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவர். குடும்பத்தில் காரணமற்ற குழப்பங்களும் மன சஞ்சலமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும். வேண்டாத விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலை விலைக்கு வாங்காதீர்கள். தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது! சகோதர சகோதரிகளால் சிற்சில நன்மைகள் வந்து சேரும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். குடும்பச் சொத்து விஷயங்களில் வழக்கு சம்பந்தமான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! கணவன் – மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்று நீடிக்கும். நண்பர்களுடன் பணப் பிரச்சினைகள் சம்பந்தமாக மனக் கசப்புகள் ஏற்படலாம். அழுகுபொருள் வியாபாரிகள், மத போதகர்கள், அசைவ உணவுப் பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள் ஆகியோருக்கு மிகவும் நல்ல பலன்கள் ஏற்படும் காலமாகும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்கள், உறவினர்கள் போன்றோரால் தேவையில்லாத மன சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது! குடும்பத்தில் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். பழுதுபட்ட ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நற்பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். வங்கிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் காலமாகும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வருக!

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கட்டடம் நில புலன்கள் கட்டுமானப் பொருட்கள் சம்பந்தமான வியாபாரிகள், கலைத்துறை சார்ந்தவர்கள், கலைக் கல்லூரி சார்ந்த மாணவர்கள், அழகு சாதன வியாபாரிகள், திருமண மண்டபம் நடத்துபவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவர். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுவதில் மன நிறைவை அடைவீர்கள். தந்தை – மகன் உறவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான ஏஜன்சி தொழில் செய்வோர் கவனத்துடன் செயல்பட வேண்டும்! இது வரையில் நெருக்கடியில் இருந்து வந்த பணத் தட்டுப்பாடுகள் நீங்கிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் இன்னும் சற்றுத் தாமதமாகவே தீரும். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தவிர்த்தல் நல்லது. குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவீர்கள். பெண்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணத் தகவல் மையங்கள், நண்பர்கள் ஆகியோர் உதவியால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். திருடு போன பொருட்கள் காவல்துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும். திரவப் பொருள் வியாபாரிகள், உப்பு வியாபாரிகள், கடல் வளத்துறை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்பவர்கள், பூஜைப்பொருள் வியாபாரிகள், மீன் பிடித் தொழில் செய்பவர்கள் ஆகியோர் மிகுந்த லாபம் அடையக்கூடிய காலமாகும். காதல் சம்பந்தமான விஷயங்களுக்காக வீண் செலவுகள் செய்து ஏமாற்றம் அடையாதீர்கள்! பழுதுபட்ட ஆலயங்கள், வீடு, வாகனம் ஆகியவற்றைப் புதுப்பிப்பதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். மனைவியின் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். நாட்பட்ட தீராத நோய்கள் தீர வேண்டிப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவதன் மூலம் நல்ல பலன் அடைவீர்கள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புதிய பிரச்சினைகள் வர இருப்பதால் பயணங்களைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகளைக் குறைப்பதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வெகு தூரச் சுற்றுலாக்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- திங்கட்கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது! புதிய கடன்களை வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமல் போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது! மிக நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தபடி புனிதப் பயணங்கள் சென்று வர வாய்ப்பு உள்ளது. கண், காது ஆகியவற்றில் கவனத்துடன் இருங்கள்! பலசரக்கு, எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை விற்பவர்கள், பொறியியல்துறை சார்ந்தவர்கள், விசைத்தறி போன்ற ஆலைகளின் அதிபர்கள், இரும்பு, இயந்திரம் சம்பந்தமான வியாபாரிகள், பழைய பொருட்களை ஏற்றுமதி / இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். தேவையில்லாத புதிய நண்பர்களின் தொடர்புகளால் வீண் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம்! கொடுக்கல் வாங்கல் தொழில் செய்பவர்கள் புதிய கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது! குடும்பத்தில் காரணமில்லாத மனக் கசப்புகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். பழைய கடன்களால் மீண்டும் தொல்லைகள் வந்து சேரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளால் பொருள் வரவும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலம் பொருள் வரவு உண்டாகும். பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்! விட்டுப் போன கணவன் – மனைவி உறவில் இருந்த மனக் கசப்புகள் நீங்கி அவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! நிலம் சம்பந்தமான வழக்குகளிலிருந்தும், பிற வழக்குகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும் காலமாகும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுத் தொண்டுகளில் ஈடுபடும்பொழுது கவனத்துடன் பணி ஆற்றுவது நல்லது! இரும்பு, இயந்திரம், கணினி, மின்சாரப் பொருட்கள் ஆகியவற்றை விற்பவர்கள், இந்தத் துறைகளில் பணிபுரிவோர், கமிசன், தரகு, ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், பங்குச்சந்தையில் ஈடுபடுவோர், வேதியியல், மூலிகை சம்பந்தமான ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள், தோல் சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் நற்பலன் அடைவீர்கள். குழந்தைகளுக்குப் பரிசும் பாராட்டுக்களும் கிடைக்கும் காலமாகும். வேலை விஷயமாகப் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! மகான்களின் தரிசனங்களால் நிம்மதி ஏற்படும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது!

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- ஞாயிற்றுக்கிழமையில் பிதுர் வழிபாடும் அம்மன் ஆலய வழிபாடும் செய்து வருக!

*****************
Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author