இராசிபலன்கள்(5-1-2015 முதல் 11-1-2015 வரை)

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6, 7 தேதிகளில் புனிதப் பயணம் செல்லும் எண்ணம் நிறைவேறும். தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது! குழந்தைகளுக்காக இன்பச் சுற்றுலாக்களை மேற்கொள்வதன் மூலம் செலவுகள் உண்டாகும். நீண்ட காலமாகப் புதிய வீடு, நிலம் வாங்கப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணத்தையோ பொருட்களையோ கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்! ஜனவரி 8, 9, 10 தேதிகளில் விருந்தினர்களின் வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசியல்வாதிகளிடமிருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த உதவிகள் கிடைக்கும். அரசு வழக்கு போன்ற விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான முடிவுகள் வந்து சேரும். காதல் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லதாகும். கண்களில் கவனத்துடன் இருங்கள்! ஜனவரி 11 அன்று பூர்விகச் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும். உணவகம் போன்ற நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள், மின்சாரம், இராணுவம், காவல்துறை சார்ந்தவர்கள், பங்குச்சந்தை போன்ற தொழில் செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடும் செவ்வாடை தானமும் செய்து வருக!

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6, 7 தேதிகளில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுப் பணத்தையோ பொருளையோ ஏமாறாமல் இருங்கள்! பூஜைப் பொருள் வியாபாரிகள், மனநலக் காப்பகம் நடத்துபவர்கள், தாய் – சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள், உப்பு, உர வியாபாரிகள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவீர்கள். ஜனவரி 8, 9 தேதிகளில் மனைவி, மனைவி வழிச் சொந்த பந்தங்கள் மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய வீடு, தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்யப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். மேலதிகாரிகளால் கண்டிப்பும், இடமாற்றமும் ஏற்படலாம். திருட்டுப் போன பொருட்கள் திரும்பி வீடு வந்து சேரும். விவசாயம் செய்பவர்களுக்குத் தொழில் நன்றாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் மிக நன்றாக இருக்கும். ஜனவரி 10, 11 காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஆகலாம். தந்தையின் உடல்நிலை பாதிக்கப்படலாம். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! தீராத நாட்பட்ட நோய்கள் தீரப் புதிய மருத்துவர்களின் உதவியை நாடுவது நல்லதாகும்!

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6 காலக்கட்டத்தில் வெகு காலமாகப் பூர்விகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் தீர்ந்து நிம்மதி ஏற்படும். அரசு வழக்கு விஷயத்தில் சாதகமான தீர்ப்புகள் வந்து சேரும் காலமாகும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும்! தீராத நோய்களுக்கு விடை காணுவீர்கள். ஜனவரி 7, 8, 9 தேதிகளில் உடல்நிலையில் இருந்து வந்த தொல்லைகள் மாறிச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. நாட்பட்ட வாராக் கடன், பிறரிடம் கொடுத்து வைத்திருந்த பணம் ஆகியவை திரும்பக் கிடைக்கும். சகோதரர்களால் நிம்மதி குறைந்தாலும் அவர்களால் சிற்சில ஆதாயங்களையும் அடைவீர்கள். உணவகத் தொழில் செய்பவர்கள், சிற்றுண்டி விடுதி நடத்துபவர்கள், அரசியல்வாதிகள், மருந்துகளை உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், நெருப்பு சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நற்பலன்களை அடைவீர்கள். ஜனவரி 10, 11 நாட்களில் தேவையான பொருளாதாரம் கை வந்து சேரக்கூடிய காலமாகும். நகை வியாபாரிகள் எதிர்பாராத லாபம் அடைவர். நாட்பட்ட விசா சம்பந்தமான பிரச்சினைகள் தீருவதற்கான வாய்ப்பு உள்ளது. பயணத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் சென்று வருவதன் மூலமாக விபத்துக்களைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்த்திருந்த ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ ஆலய வழிபாடும் காவி ஆடை தானமும் செய்து வருக!

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5 அன்று குலதெய்வ வழிபாடு செய்து வரும் எண்ணம் நிறைவேறும். சகோதரர்களால் திடீர் தன வரவு உண்டாகும். சமுதாய நல்லிணக்கத்திற்காக உழைப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு சம்பந்தமான வழக்கு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை! ஜனவரி 6, 7, 8 தேதிகளில் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச்சொல் வந்து போக வாய்ப்பு உள்ளது. பழுதுபட்ட ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணமும் வீண் செலவுகளும் உண்டாகும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் வந்து சேரச் சற்றுத் தாமதம் ஆகலாம். நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றில் கவனத்துடன் இருத்தல் நல்லதாகும்! பிள்ளைகளால் சில செலவுகளும், வீண் பிரச்சினைகளும் வந்து போகும். பணியாற்றுபவர்களுக்கு நினைத்த இடங்களுக்குப் பணியிட மாற்றம் ஏற்படும். ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் பயணம் செய்வது நல்லதாகும்! வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்றுத் தாமதம் ஏற்படலாம். பிரிந்து போன கணவன் – மனைவி உறவு மீண்டும் தொடருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். பொதுத்தொண்டுகளைச் செய்பவர்களுக்கு நல்ல பெயர், புகழ் ஏற்படும் காலமாகும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- துர்க்கை வழிபாடும் செவ்வாடை தானமும் செய்து வருக!

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6 காலக்கட்டத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் ஆரம்பம் செய்யலாம். வேற்று மதத்தவரால் எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. ஜனவரி 7, 8, 9 தேதிகளில் காதல் விஷயங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து உறவுகள் வலுப்பெறும். எழுத்துத்துறை சார்ந்தவர்கள், அச்சுத்தொழில் செய்பவர்கள், புத்தகம், நோட்டு போன்ற எழுதுபொருள் வியாபாரிகள், வழக்குரைஞர்கள், இசையமைப்பாளர்கள், அஞ்சல்துறையைச் சார்ந்தவர்கள், நாடகக் கலைஞர்கள், காய்கறி சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர் நல்ல பலன்களை அடைவர். விவசாயம் சுமாராகக் காணப்படும். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசும் பாராட்டும் பெற வாய்ப்புகள் உள்ளன. ஜனவரி 10, 11 நாட்களில் மகான்களின் எதிர்பாராத தரிசனங்களால் நிம்மதி அடைவீர்கள். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடு சென்று வருதல் போன்ற விஷயங்களில் சற்று கவனமாக நடந்து கொள்ளுங்கள். வீடு, நிலம் போன்றவற்றின் மூலமான புதிய கடன் வாங்கும் முயற்சிகளில் வெற்றி அடையலாம்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மகாவிஷ்ணு வழிபாடும் பச்சை ஆடை தானமும் செய்து வருக!

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5 அன்று கணவன் – மனைவி உறவில் சிற்சில பிரச்சினைகள் வந்து போகும். கூட்டுத்தொழிலில் பங்காளிகளுடன் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து தீரும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும், பாராட்டுக்களையும் பெறுவார்கள். ஜனவரி 6, 7, 8 காலக்கட்டத்தில் பெண்களால் தொலை தூரத்தில் இருந்து நற்செய்திகளும் பொருள்வரவும் உண்டாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் தலையீட்டால் சாதகமான நல்ல முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. வீடு, வாகனங்களைப் பழுது பார்ப்பதால் செலவுகள் ஏற்படும். மகான்களின் தரிசனத்திற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கண், காது ஆகியவற்றில் கவனம் தேவை! ஜனவரி 9, 10, 11 தேதிகளில் புதிய வீடு, நிலபுலன்களை வாங்குவதன் மூலமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்! புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது! குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். கமிஷன், ஏஜன்சி போன்ற தொழில்கள் செய்பவர்கள், பழைய இரும்பு, தகரம் போன்ற பழைய பொருட்களை விற்பனை செய்பவர்கள், அசைவ உணவு வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர், காளி வழிபாடும் கருப்பு ஆடை தானமும் செய்து வருக!

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6 நாட்களில் மூளை, நரம்பு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டாம். தொழிலில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது! உற்றார் உறவினர் வருகையால் செலவுகள் உண்டாகும். நீண்ட காலமாக வராத கடன், கொடுத்து வைத்திருந்த பணம், பொருட்கள் ஆகியவை காவல்துறையினர் உதவியால் திரும்பக் கை வந்து சேரும். ஜனவரி 7, 8, 9 தேதிகளில் புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தீராத நோய்களுக்குப் புதிய முறை மருத்துவத்தின் மூலமாக நல்ல குணம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களின் உதவியால் திருமணம் நடக்கும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். பயணத்தின்போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகளால் சில ஆதாயங்களை அடைவீர்கள். குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான விஷயத்தில் சச்சரவுகள் வந்து போகும். திடீர் தன வரவு உண்டாகலாம். ஜனவரி 10, 11 ஆகிய நாட்களில் இரும்பு, இயந்திர, வேதியியல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், எண்ணெய், பலசரக்கு வியாபாரிகள், பணியாட்கள், கழிவுப் பொருட்களை வாங்குபவர்கள், உர வியாபாரிகள், மிசினரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடும் நீல ஆடை தானமும் செய்து வருக!

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6 தேதிகளில் புனிதப் பயணம் மேற்கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடையலாம். நண்பர்கள், உற்றார், உறவினர்களின் வரவால் செலவுகள் வந்து சேரும். ஜனவரி 7, 8 நாட்களில் புதிய சொத்துக்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். கலைத்துறையினர் பரிசும் பாராட்டுகளும் பெறுவார்கள். பொதுப் பணிகளைச் செய்பவர்கள் கவனத்துடன் பணி ஆற்றுவதால் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்கலாம். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பூர்விகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த நாட்பட்ட பிரச்சினைகள் நீங்கிச் சொத்துக்கள் கிடைக்கும். ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் பூ, பழம், பூஜைப் பொருட்கள் விற்பவர்கள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், நறுமணப் பொருட்கள் விற்பவர்கள், கணினித்துறை சார்ந்தவர்கள் ஆகியோர் மிகவும் நல்ல பலன்களை அடைவர். பிரிந்து போன உறவுகளுடன் திரும்பவும் ஒன்று சேருவதற்கான காலமாகும். தந்தை – மகன் உறவில் சிறிய பிரச்சினைகள் வந்து போகும். பந்தயம், பரிசுச்சீட்டு மூலம் பணம், பொருள் கிடைக்கலாம். சீதளம், ஒவ்வாமை போன்ற தொல்லைகள் வந்து போகும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடும் மஞ்சள் ஆடை தானமும் செய்து வருக!

தனுசு

தநுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லதாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் நல்ல மதிப்பெண்களையும் பரிசு, பாராட்டுகளையும் பெறுவார்கள். காதல் சம்பந்தமான விஷயங்களில் நண்பர்கள், உறவினர்களின் உதவிகளால் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். ஜனவரி 7, 8, 9 காலக்கட்டத்தில் தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், கழிவுப் பொருட்களை வாங்குவோர் விற்போர், அணு ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்கள், அசைவ உணவுப் பொருள் வியாபாரிகள், வட்டித் தொழில், தரகு, ஏஜன்சி, கமிசன் போன்ற தொழில்கள் செய்பவர்கள், பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர் நல்ல லாபம் அடைவர். விசா சம்பந்தமான அரசு விஷயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். ஜனவரி 10, 11 குலதெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் சில தடைகள் வரக்கூடும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பழகி வருதல் நல்லது. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முயற்சிப்பீர்கள். திருட்டுப் போன பொருட்கள் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். புதிய நண்பர்களின் சேர்க்கை மூலம் காரணமற்ற பிரச்சினைகள் வந்து சேரக்கூடிய காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லதாகும்.

இராசியான எண்:- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர், அம்மன் வழிபாடும் கருப்பு ஆடை தானமும் செய்து வருக!

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குச் சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6 நாட்களில் வீடு, நிலம் போன்றவற்றினைப் புதுப்பித்துக் கட்டுவதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. விபரீதமான எண்ணங்களையும், தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையையும் தவிர்த்தல் நல்லது. சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். வாயுத்தொல்லை, வயிற்று உபாதை போன்ற தொல்லைகள் வந்து போகும். ஜனவரி 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் பொருளாதாரத்தில் இதுநாள் வரையில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும். புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து தொழிலைத் தொடங்குவீர்கள். கடல்வளத்துறை சார்ந்தவர்கள், உப்பு, கடல் வாழ் பொருட்கள் விற்பவர்கள், திரவப் பொருள் வியாபாரிகள், பூஜைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், தாய் – சேய் நல விடுதி நடத்துபவர்கள், ரத்தின வியாபாரிகள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் – பேராசிரியர்கள் ஆகியோர் மிகவும் நற்பலன்களை அடைவர். ஜனவரி 11 அன்று விருந்தினர்களின் வரவால் சிறிய மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். தாயின் நோய்கள் குறையக்கூடிய காலமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பொருள்வரவும் உண்டாகும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6 தேதிகளில் பயணத்தின்போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில நன்மைகளை அடையலாம். பூர்விகச் சொத்து போன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்றுத் தாமதம் ஆகலாம். வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாராத ஆதாயங்கள் வந்து சேரும். ஜனவரி 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், திரைப்படம், நாடகத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், வாகன சம்பந்தமான தொழில் செய்பவர்கள், வாகன ஓட்டுநர்கள், அழகுக்கூடம் நடத்துபவர்கள், நவரத்தின வியாபாரிகள், திருமணத் தகவல் மையம், திருமணக்கூடம் நடத்துபவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள் ஆகியோர் மிகவும் லாபம் அடைவர். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுநலக் காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர், புகழ் அடைவதன் மூலம் மனநிறைவடைவீர்கள். ஜனவரி 10, 11 ஆகிய நாட்களில் கண்களில் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லதாகும்! சகோதர, சகோதரிகளின் சுப நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற்று அவர்களுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். மூலம், நீர் சம்பந்தமான உபாதைகள் போன்றவை வந்து போகும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரக்கூடிய காலமாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மகாலட்சுமி வழிபாடும் வெள்ளை ஆடை தானமும் செய்து வருக!

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்குக் கேது நன்மை தரும் கிரகமாகும். ஜனவரி 5, 6 தேதிகளில் காதல் விஷயங்களில் அநுகூலமான சில செய்திகள் வந்து சேரும். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது! பந்தயம், பரிசுச்சீட்டு போன்ற சூதாட்ட சம்பந்தமான விஷயங்களில் மிகவும் கவனத்துடன் இருங்கள். ஜனவரி 7, 8, 9 தேதிகளில் குழந்தைகளால் செலவுகள் வந்தாலும் அவர்களால் நன்மதிப்பையும் பெறுவீர்கள். வயிறு, முதுகு ஆகியவற்றில் உபாதைகள் வந்து போகும். பொதுப்பணித்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்துபவர்கள், ஆலயப் பணி புரிபவர்கள், அறிவியல்துறை சார்ந்தவர்கள், கழிவுப் பொருட்களின் வியாபாரிகள், அசைவப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், ஏஜன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள், அணு ஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள், விமானப் பணியாளர்கள் ஆகியோர்க்கு நற்பலன் தரும் காலமாகும். ஜனவரி 10, 11 நாட்களில் ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நிம்மதி அடைவீர்கள். பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் பணியிட மாற்றமும் ஏற்படலாம். விபரீத எண்ணங்களை நினைத்து நிம்மதி இழக்காதிருங்கள்! வங்கிகளிலிருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அரசு வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்திருந்த சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்கும்.

இராசியான எண்:- 7
இராசியான நிறம்:- கருஞ்சிகப்பு
இராசியான திசை:- வடமேற்கு

*****************

Gnanayohi Dr.P.Esakki, I.B.A.M., R.M.P., D.I.S.M,
18 (25-B/1), Pulavar Street,
Krishnapuram,
Kadayanallur – 627759.
Thirunelveli District, TamilNadu, India.
Phone: 04633-243029.
Mobile: 9842510578, 9842529691.
Fax: 04633-240390.
Website: www.gnanayohi.com.

About The Author