உருளைகிழங்குப் பொடி வறுவல்

தேவையானப் பொருட்கள்:

சிறிய உருளைக்கிழங்கு – ½ கிலோ,
பெரிய வெங்காயம் – 2,
பூண்டு – 10 பற்கள்,
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி,
சாம்பார் தூள் – 1 மேசைக் கரண்டி,
மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி,
இட்லி மிளகாய்ப்பொடி – ½ தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க :

கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – ½ தேக்கரண்டி.

செய்முறை:

குக்கரில் உருளைக் கிழங்குகளைப் போட்டு உப்புச் சேர்த்து, நன்கு வேகவிடுங்கள். பிறகு எடுத்து, தண்ணீர் வடித்து, தோலை உரித்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மெல்லியதாக அரிந்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்குடன் சாம்பார்த்தூள், மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள்.

நன்றாக வதக்கியதும், அதில் ஊற வைத்த உருளைக்கிழங்கு சேர்த்துப் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி எடுக்க வேண்டும்.

அவ்வளவுதான், சுவையான உருளைக்கிழங்குப் பொடி வறுவல் தயார்! இது சாம்பார் சாதத்துடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

 சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author