உருளைக்கிழங்கு வெங்காயக் குழம்பு

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 250 கிராம்
தக்காளி – 3
கறிவேப்பிலை – சிறிது
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்த் துருவல் – 1 கோப்பை
சிவப்பு மிளகாய் – 10
சோம்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 3 தேக்கரண்டி
பட்டை – 2

செய்முறை:

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கை நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள்.

பிறகு, புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு வாணலியில் தேங்காய்த் துருவல், சிவப்பு மிளகாய், சோம்பு, பட்டை, மிளகு பொட்டுக்கடலை ஆகியவற்றை இலேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, மிளகு போட்டு, வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்குங்கள்.

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் உருளைக்கிழங்கு, தக்காளி போட்டு வதக்க வேண்டும்.

பின் புளிக்கரைசலையும், அரைத்த மசாலாவையும் ஊற்றி உப்புப் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள்.

நன்கு வெந்தவுடன் கொத்துமல்லி தூவி இறக்க வேண்டியதுதான். சுவையான உருளைக்கிழங்கு வெங்காயக் குழம்பு தயார்! இது இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். சுவைத்துப் பார்த்து, எப்படி இருந்தது எனச் சொல்லுங்கள்!

About The Author