எது காதல் தெரியவில்லை

என் தனிமையின்
போதெல்லாம் – நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் – நீ
அகப்பட்டுக் கொண்டால் – என்
அகம் வதைபடுகிறதே
அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி – நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட – நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை – நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்கத் தோன்றுமே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு – நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே…
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
‘நாங்கள் நண்பர்களென்று’…

எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்…!

About The Author

3 Comments

  1. pearls

    பிரிவுகள் நேரும்போது
    ஏதோவோர் உணர்வு – நம்
    விழிகளில் நீர்நிரப்பிச்
    செல்கிறதே…
    அதுதான் காதலா? ths lines very for superb.

  2. RAMANISARAVANAN

    எனக்காக நீ
    தந்தவை தவிர்த்து
    சுவாசக் காற்று உட்பட – நீ
    வருடிய அனைத்தையும்
    சேகரிக்கிறேனே
    இதுதான் காதலா

Comments are closed.