என்று இருந்தான்

பள்ளியில் பையனைச்
சேர்த்து விட்டால்
கவலை தீரும் என்றிருந்தான்;

பள்ளியில்
சேர்த்த கவலை
படிப்பு முடிந்தால் தீரும்
என்றிருந்தான்;

மூன்றாம் வகுப்பில்
பையன் தேறிய கவலை
வேலை ஒன்று கிடைத்தால் தீரும்
என்றிருந்தான்;

வேலையில்
உயர்வு கிடைக்காதா என்று
கிடைத்த வேலையில்
கவலை தீராதிருந்தான்.

கிடைத்த வேலை உயர்வு
நிரந்தரமாகாதா
என்ற கவலை நீங்கும் முன்
வரதட்சணை
வாரிக் கொடுத்துப்
பெண்ணொருத்தியைக்
கட்டிக் கொடுக்க
வராதா இடம் என்று
கவலைப் பட்டான்;

பையனைவிட இப்படிக்
கவலையை வளர்த்து வளர்த்தே
அவன் காலமானான்.

கவலைப் படாமலே
பையன்
அடக்கம் செய்தான்
அப்பனை.

About The Author

1 Comment

  1. Kaa Na Kalyanasundaram

    வாழ்வியல் நிதர்சனஙளை அழகாக சொல்லியுள்ளீர்கல் ஐயா. தாங்கள் நலம்தானா?

    அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

Comments are closed.