என் உயிர்… (தோழி)

என்னவளே . . .
என்னை எனக்கறிவித்து,
என்னுள்ளே என்னை எழுப்பி,
எனக்கேற்றம் கொடுத்து,
என்னுள் என்னை நிலைக்கச் செய்து,
என்னை எங்கும் நிறைவாக்கி,
என் நெஞ்சைப் பஞ்சாக்கி,
என் வீழ்ச்சிகளை விதைகளாக்கி,
என் வீரத்தை விவேகமாக்கி,
என் எழுத்தை கவிதையாக்கி,
என்னுயிரை உவப்பாக்கி,
என் வாழ்வை வளமாக்கிய,
என்னவளே எப்படியடி
என் எலும்பை சுக்குநூறாக்கி,
என் நெஞ்சை இரண்டாக்கி,
என்னிலிருந்த உன்னை இடம்மாற்றி,
எம்மையும் உம்மையும் உடன்பிறப்பாக்கி,
எம் நினைவை நிர்மூலமாக்கி,
எம்மைப் பேசும் ஊமையாக்கி,
எம் வாழ்வை சிதிலமாக்கி……
. . .
…..

என் கண்ணே எப்படியடி,
என்னை இன்னும் உருக்குலையாமல் வைத்திருக்கிறாய்?
என் கண்ணே எப்படியடி
எம் முன் கலைந்த நேசத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறாய்
என்னுயிர்த் தோழியே நான்
எப்பிறப்பில் செய்த தவமடி நீ?

About The Author

6 Comments

  1. prathee

    மிக அருமை முக்கியமக இந்த வரி என் எலும்பை சுக்குநூறாக்கி,
    என் நெஞ்சை இரண்டாக்கி,
    என்னிலிருந்த உன்னை இடம்மாற்றி,
    எம்மையும் உம்மையும் உடன்பிறப்பாக்கி,
    எம் நினைவை நிர்மூலமாக்கி,
    எம்மைப் பேசும் ஊமையாக்கி,
    எம் வாழ்வை சிதிலமாக்கி……

  2. padma

    கவிதை உணர்ச்சி பூர்வமா இருக்கிறது.

    நீ வருவாய்

    என் உயிர்… (தோழி)
    எல்லாம் ஒரே மாதிரி இருக்கு.
    வேறு கவிதையும் எழுதுவிர்களா? .

  3. இரா.சேகர்

    சொற்களின் அடுக்கு./கருத்தில் அதிகக் கவனம் வேண்டும்.செய்வீர்களா?

  4. பிரபு

    சுரேஷ்,
    கவிதையில் வார்த்தைகள் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
    மேலும் ஒரு உணர்ச்சி பெருக்கில் எழுதப்பட்டது போல் தோன்றுகிறது.

    நீங்கள் கவிதையின் பொருளில் அல்லது கருத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஏனென்றால் மூன்று பத்திகளும் ஒட்டாமலே உள்ளது.

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பிரபு
    எமனேஸ்வரம்

Comments are closed.