கணினி !

அப்பாவோட கணினி பார்
அழகான கணினி பார்
வண்ண வண்ணப் படங்களை
வைத்திருக்கும் அதற்குள்ளே
உலகச் செய்தி யாவையும்
உடனுக்குடன் சொல்லிடும்
பாட்டுப் பாடும் கணினிதான்
படமும் போட்டுப் பார்க்கலாம்
வேடிக்கையும் செய்திடும்
விளையாட்டும் காட்டிடும்
படிப்பதற்குப் பாடங்கள்
பக்குவமாய்த் தந்திடும்…
மடியில் வைத்துப் பார்க்கலாம்
மடக்கி எடுத்துக் கொள்ளலாம்
அப்பா போல ஆனதும்
அதில் நான் வேலை செய்வேனே!

About The Author

1 Comment

Comments are closed.