கற்கள் பற்றி மேலும்…

கல் ஜாதிகள் பற்றி…

(நன்றி – டாக்டர்.இராசுபவுன்துரை அவர்களின் -"தமிழகக் கோயிற் கட்டடக் கலை மரபு – மயன் அறிவியல் தொழில் நுட்பம்")

கற்களில் ஆண்,பெண் மற்றும் அலி ஜாதிக் கற்கள் உண்டு.

நேராகவும் நீண்ட விரலின் ரேகை போல அமைந்துள்ள கல் ஆண் கல்லாகும்.

விரல் பதிந்திருப்பது ஒற்றை எண் வரிசையில் இருப்பின் அது பெண் கல்லாகும்.

கோணலான ரேகைகள் கோடுகளாகத் தோன்றின் அவை அலிக் கற்களாகும்.

இராசியான மனை அமைய ஆண்களுடைய அறை ஆண் கற்களாலும்,பெண்களுடைய இருப்பிடம் பெண் கற்களாலும், அலிக் கற்கள் சிறைச்சாலைகள் கட்டவும் முற்காலத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டன.

சிற்பங்கள் செய்வதற்கு ரேகைகள் இல்லாத கற்கள் பயன்படுத்தப்பட்டன.

எதிர்-ஈர்ப்பு விசை பற்றி மேலும்…

மிதக்கும் கற்களுக்கே காரணம் சொல்லத் தடுமாறும் அறிவியல் மிதக்கும் யோகிகள் பற்றி மெளனமே சாதிக்கிறது…

மிதக்கும் யோகிகளை நம்மில் சிலராவது பார்த்திருப்பார்கள்! அல்லது நம்பத் தகுந்தவர்கள் சொல்வதையாவது கேட்டிருப்பார்கள்.

புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மனிதன் தன்னுடைய சுய முயற்சியால் எழுந்து நிற்க முடியுமா?

அறிவியலை வாய் மூட வைத்த இந்தக் கேள்விக்கு பதில் தருகிறார் நமது ஆன்மீக அறிவியலாளர் சுவாமி விவேகானந்தர்.!

சுவாமிஜியின் அறிவிப்புகளாவன:

சுவாமிஜியின் "இராச யோகம் மற்றும் மூச்சுப் பயிற்சி" உரைகளில் இருந்து…

1.உள்ளம்(MIIND) உடலின் ஒரு பகுதியே. உள்ளமே உடலை இயக்குகிறது.

2.அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது.

3.மனித உடலில் இயங்கும் பிராண சக்தியே அண்டமெங்கும் புவி ஈர்ப்பு விசையெனவும், காந்த சக்தியெனவும் பரவிக் கிடக்கிறது. அதாவது, பிராணனின் தொடர்ச்சியே புவி ஈர்ப்பும் எதிர்-விசை புவி ஈர்ப்புமாகும்.

4.ஒரு தேர்ந்த யோகி, தன்னுள் இயங்கும் பிராணனை ஆள்வதன் மூலம் அதன் தொடர்ச்சியான எதிர் விசை புவி ஈர்ப்பையும் ஆட்டுவிக்க முடியும்.

கற்களைப் பற்றிய தகவல்கள் சொல்பவை என்ன?

மனிதன் இன்னும் புவி ஈர்ப்பு விசையை முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை.

அதிலும் எதிர்-ஈர்ப்பு விசையைப் பற்றி சிறிதும் அறியாதவனாகவே உள்ளான்!

எதிர்-ஈர்ப்பு விசையின் நடப்பு உண்மைகள் இரண்டைப் பார்ப்போம் :

1.முதலாவது,மனித ஜீவிதம். ஆணின் ஜீவித உறுப்பு ஈர்ப்பு விசையை மீறி எழுவதன் காரணமாகவே அதற்கு உயிர்ப்பிக்கும்
சக்தி கிடைக்கிறது.

2.இரண்டாவது. தென்னையின் இளநீர். இது ஆணின்(உயிர்ப்பிக்கும்) வீரிய சக்தியை வளர்க்கிறது.

(நிலத்திலிருந்து உறிஞ்சப்பட்ட நீர், ஈர்ப்பு விசையை எதிர்த்து மரத்தின் உச்சிக்கு ஏற்றப்படுகிறது)

மேற்கண்ட இரண்டு உதாரணங்களும் ஒரு உண்மையைத் தெரிவிக்கின்றன :

ஈர்ப்பு விசையை எதிர்த்து மனிதன் எழும்போது, இன்னொரு ஜீவனைத் தோற்றுவிக்கும் வல்லமை பெறுகிறான் என்பதே அது!
நாம் செய்ய வேண்டுவது என்ன?

உலக அறிவியலாளர்கள் எவருக்கும் கிடைக்கப் பெறாத அருமையான உதாரணங்கள் நம்மிடையே அமையப் பெற்றுள்ளன.
வாய்ப்பும் ஆர்வமும் உள்ள நமது படிப்பு வளம் பெற்றவர்கள் ஆய்வைத் தொடங்கலாமே?

ஆன்மீகம் மூலமாக அறிவியலை வளர்க்கலாமே?

About The Author