கற்கள் பற்றி மேலும்…

கற்கள் பற்றிய மேலும் சில அதிசயத் தகவல்களைப் பார்ப்போம்.

மிதக்கும் கற்கள்…

இது தொடர்பாக ‘டெக்கான் கிரானிக்கல்'(10.9.2009)நாளிதழில் வெளிவந்த ஒரு நவீனக் காட்சியைக் காண்போம்:

செய்தி, 2000 வருடங்கள் பழமையான கல்யாண காமாட்சியம்மன் கோயில் பற்றியது. கோட்டையம்மன் கோயில் என்று பக்தர்களால் தினமும் வழிபடப்படும் இந்தக் கோயில் தமிழ்நாட்டிலுள்ள தர்மபுரி நகரில் அமைந்துள்ளது.

இதன் மண்டபம், ஒவ்வொன்றும் 12.5 டன் எடையுள்ள பன்னிரெண்டு பிரம்மாண்டமான தூண்களால் தாங்கப்பட்டு நிற்கிறது.
முன்னொரு காலத்தில் அம்மனுக்கு முன், எரியும் சூட வேள்வியில் தங்களைத் தாங்களே பலி கொடுத்துக்கொண்ட போர் வீரர்களே இந்தத் தூண்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இது என்ன பிரமாதம் என்கிறீர்களா?

இவைகளில் இரண்டு தூண்கள் மட்டும் பூமியில் பதியாமல் தொங்கிக் கொண்டுள்ளன!!

இது சாத்தியமா?

நமது நவீன அறிவியல், புவி ஈர்ப்பு விசையை மீறிய ஒரு மாற்று anti-gravity

எதிர்ப்பு விசை இருக்கச் சாத்தியமில்லை என்று சத்தியமிட்டுச் சொல்கிறதே?

இதே போன்ற ஒரு கோயில்(சின்ன கேசவப்பெருமாள்) கர்நாடகாவிலுள்ள பேலூரிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது! (மேலும் பல இருக்கலாம்)

அறிவியலுக்குச் சவால்…

அறிவியலுக்குச் சவால் விடும் ஒத்த நிகழ்ச்சிகள் மேலும் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம் :

1..ஊற்றப்படும் தண்ணீர் பள்ளம் நோக்கி இறங்காமல் மேடு நோக்கிப் பாயும் இடங்கள்.

2.உந்து விசை நிறுத்தப்பட்டும் தொடர்ந்து கார்களை மேடேற்றும் மலைகள்.

இவை போன்ற சில இடங்கள் / மலைகள் உலகத்தின் பல இடங்களில் இருப்பதை Gravity hills, anti-gravity hill, magnetic hill, magic hill, spooky hill போன்ற தலைப்புகளில் உள்ள வலைத்தளங்களில் காணலாம்.

3.இராமபிரானால் கட்டப்பட்டதாக வழிபடப்படும் சேது பாலத்தை ஒட்டிய கடற்கரையில், இன்றும் கிடக்கும் பாறைகள், கடலில் மிதக்கக் கூடியவையாக உள்ளனவாகப் பேசப்படுகின்றனவே….

அறிவியல் ‘தடுமாற்றத்துடன்’ கூறும் காரணங்கள்….

1.புவியிலுள்ள ஒவ்வொரு பொருளும் தமக்கென ஒரு இடத்தை(SPACE) ஏற்படுத்திக் கொள்கிறது.

2.ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்பு விசைக்கு ஈடாக எதிர்ப்பு விசையும் உண்டு.

3.ஒவ்வொரு பொருளும் தனக்குரிய இடத்தைச் சுருக்கியோ விரித்தோ ஈர்ப்பு விசையை அணைத்துக் கொள்ளவோ முறைத்துக் கொள்ளவோ செய்கிறது. அக்காரணம் பற்றியே gravity அல்லது anti-gravity விசைகள் தோன்றுகின்றன.

4.ஒலி மற்றும் ஒளிகளைப்போலவே ஈர்ப்பு விசைகளும் அலைகளாகப் பரவுகின்றன.
ஆனால் இவைகளின் வேகம் ஒளியைப்போல 300 மடங்கு!

இந்த விசைகள் தமது இடத்தில்,

1.பொருளின் எடை விகிதத்திலோ

2.பொருள் அடங்கிய இடத்தின் வரைவிதத்திலோ (G e o m e try) அடங்கி இருக்கின்றன.

5.சில இடங்களில் இயற்கையே, அந்த இடத்தின் வரைவிதத்தை ஒடுக்கி, அந்த இடத்திலும் அந்த இடத்திலுள்ள பொருள்களின் மீதும் எதிர்ப்பு ஈர்ப்பு விசையை உருவாக்கி விடுகிறது.

நமது கேள்விகளுக்கான விளக்கங்கள்…

1.அபூர்வக் கற்களின் தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2.அவை அமைந்துள்ள இடங்களின் உள் அமைப்பு, வரைவிதம் மற்றும் அவ்விடத்தில் பரவியுள்ள கதிர் வீச்சுகளின் வீரியமும் அளவிடப்படவேண்டும்.

3.தூண்களும் சேது பாலப் பாறைகளும் மேற்குறிப்பிட்டவாறே ஆய்வு செய்யப்பட வேண்டும்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author