காதல் ‘புண்’மொழிகள்(2)!

‘உனக்காக நான் நரகத்திற்கும் செல்லத் தயார்’ என்று சொன்னான் அந்தக் காதலன். இப்போது அவன் நிஜமாகவே நரகத்தில்தான் வாழ்கிறான். அவனுக்குத் திருமணமாகிவிட்டது.

****

மனைவியை இழப்பது என்பது ரொம்பக் கடினமானது. ஏனென்றால், என்னால் அது முடியவேயில்லை.

****

காதல் என்பது தன்னைத் தானே எமாற்றி கொள்ளும் ஒரு கொடிய நோய். கல்யாணம் செய்து கொண்டால் சரியாகி விடும்.

****

திருமணத்திற்கும் இறப்பிற்கும் உள்ள வித்தியாசம் –
இறப்பவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்!

****

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் கணவன் தன் வாயை மூடிக்கொண்டு செக் புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

****

உன்னுடைய பக்கத்து வீட்டவரை நேசி. ஆனால் கணவன் ஊரில் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொள்!

****

மிகவும் மகிழ்ச்சியான திருமணம் என்பது காது கேளாதவனைக் கண் தெரியாத பெண் மணந்து கொள்வதுதான்!

****

உன்னை விட்டு அகலாத, சிறிதும் வளராத ஒரே குழந்தை உன் கணவன்தான்!

****

பணத்தை இன்னொரு பெயருக்கு மாற்ற எலக்ட்ரானிக் வங்கி முறையை விட வேகமானது திருமணம்தான்!

****

உன்னுடைய கல்யாணம் என்னும் கோப்பை மகிழ்ச்சியில் நிரம்பியிருக்க வேண்டுமென்றால்,
எப்போது உன்னிடம் தப்பு இருந்தாலும் உடனே ஒத்துக்கொள்!

எப்போது நீ சரியாக இருந்தாலும் வாயை மூடிக் கொள்! – நாஷ்

****

About The Author

1 Comment

Comments are closed.