கானாறு

மனமென்னும் காட்டூடே மடைதிறந்த வெள்ளம்போல்
மண்டுபுனற் கரைமருங்கில் மமகாரக் குன்றுருவம்;
சினமெழவே அலைசுழற்றிச் சிந்தையதன் போக்கினிலே
சீறிவரல் காணஅதன் சிகரத்தில் சென்றமர்ந்தேன்.

ஆன்மாவின் கரைபெயர்த்து ஆசைச் சுழிபுரளும்
அகங்காரக் கானாற்றின் அக்கரையில் நிற்பது யார்?
‘நான்’ அதுவா? வெள்ளம் சில நாழிகையில் வடிந்ததுவே
நடந்திட்டேன் அக்கரைக்கு; யாரையுமே காண்கிலனே!

About The Author