கிழக்குச் சாளரம்(1)

கிழக்குச்
சாளரத்தோரம்
என் அறைக்குத் தினம் வரும்
ஒரு
கிளி.

பச்சை ஆன்மாவுக்குள்
படபடக்கும் என் சிறகுகள்.

கவிதை முகம்
காணாமல் காத்துக்கிடந்த
சொற்கள்
வாரிச் சுருட்டிக்கொண்டு
எழுந்து வந்தன என்னுள்.

பூங்கிளையாகி
அசைந்தது முதல் வரி.
தாவிய
கிளி அதில் ஊஞ்சலாடியது.

பழுத்த வார்த்தைகளைக்
கொத்திக் கொத்திக்
காகிதம் முழுக்க
விதைகள்.

(மீதி அடுத்த  வாரம்)

About The Author