கிழங்கான் மீன் குழம்பு

தேவையானவை:

கிழங்கான் மீன் – ½ அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 1
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
சுக்கு – 1 துண்டு
மிளகாய்த் தூள் – 1 மேசைக் கரண்டி
தனியாத் தூள் – 1 ½ மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
புளி – எலுமிச்சையளவு
பூண்டு – 1
கடுகு, வெந்தயம் – அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

மீனை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். புளியை நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சுக்கு, மிளகு, சீரகம், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, அரைத்ததைப் புளியில் கரைத்து உப்பு போட்டுக் கலக்க வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, வெந்தயம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்குங்கள்.

பின், கூட்டிய குழம்பை ஊற்றி, மீன் போட்டு மூடி, நன்றாகக் கொதித்த பிறகு கொத்துமல்லி தூவி இறக்கினால் சுவையான மீன் குழம்பு ரெடி! இந்தக் குழம்பு வழக்கத்தை விட மணமாக இருக்கும். சுக்கு சேர்ப்பதால்,  குளிர்காலத்தில் சளி சேராமல் தடுக்கும்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author