குருவி – திரை விமரிசனம்

டைரக்டர் தரணியிடமிருந்து ‘கில்லி’க்குப் பிறகு சொல்லி அடிக்கும் என்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் குருவி. நன்றாகவே ஏமாற்றியிருக்கிறார் தரணி. விஜய், தரணி, வித்யாசாகர், திரிஷா என அதே வெற்றிக் கூட்டணி களமிறங்கி இம்முறை கோட்டை விட்டிருக்கிறது.

கதை? ஆங் – கதை…..?

தன்னுடைய தந்தைக்கு வரவேண்டிய 50 லட்சம் ரூபாய் செக் பவுன்ஸ் ஆனதால், காசோலை கொடுத்து ஏமாற்றியவரைத்தேடி மலேசியா பறக்கிறார் விஜய், குருவியாக. அப்புறம் நடக்கும் வீர சாகசங்களும், வில்லன்கள் சிறைப்பிடித்திருந்த தந்தை மணிவண்னனையும், அவர்கள் பிடியில் வைரச் சுரங்கத்தில் கொத்தடிமைகளாய் இருக்கும் தொழிலாளிகளையும் மீட்டு வருவதும்தான் கதை. நடுவே வில்லனின் தங்கை திரிஷாவுடன் காதல்.

மசாலாப் படத்திற்கு வேண்டிய அம்சங்கள் அத்தனையும் இருக்கிறது. நெடி ரொம்பத் தூக்கல், கில்லியில் இருந்த கிக்கைத்தான் காணோம்.

குருவி விஜயின் அறிமுகமே படம் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு முன்னோடி. தண்ணீர்க் குழாயை ரிப்பேர் செய்துவிட்டு நீர்வீழ்ச்சியாகத் தண்ணீர் பிரவாகமெடுக்க மேலெழுந்து வருகிறார்.

பின்னர் தகர டப்பா காரை வைத்துக்கொண்டு கார் ரேசில் ஜெயிக்கிறார். வில்லன்களைப் பறந்து பறந்து அவர் கொடுக்கும் ஒவ்வொரு அடியும் இடி போல எதிரிகளை பல நூறு அடிகளுக்குப் பறக்க வைக்கிறது. வில்லன் கோச்சாவைப் பின்னிப் பெடலெடுக்க அவர் பறந்துபோய் ஓடுகின்ற ரெயிலில் மோதி மூச்சுப்பேசில்லாமல் ஆகிறார்.

எட்டாவது மாடியிலிருந்து ஒரு முறை மலேசியாவிலும், பின்னர் சென்னையிலும் கைக்கு வாகாகக் கிடக்கும் கயிறைப் பிடித்துத் திரிஷாவுடன் (நன்றாகவே கயிறு திரித்திருக்கிறார்கள்!) கீழே ஜிவ்வென்று இறங்குகிறார். சூப்பர்மேன் போல் பறந்து பறந்து அடிக்கிறார். ஒவ்வொரு அடிக்குப் பிறகும் திரிஷாவுடன் டூயட் பாடி பாடியை மசாஜ் செய்து கொள்கிறார். காட்சியமைப்பில் லாஜிக் மொத்தமாய் மிஸ்ஸிங்.

மலேசியா, ஆந்திரா, சென்னை என்று குருவி பறக்கிறது. ஆந்திர ‘லு’ நெடி அதிகமாகவே வீசுகிறது. சுமன் மற்றும் ஆசிஷ் வித்யார்த்தி நடிப்பில் ஒன்றுமேயில்லை.

ஊறுகாயாக த்ரிஷா. தொடைக்குக் கீழே உடை போடுவது அநாகரீகம் என்று பல இடங்களில் எடுத்துச் சொல்லி (காட்டி)யிருக்கிறார்கள். டூயட் பாடுவதைத் தவிர வேறு வேலையே இல்லை அவருக்கு.

விவேக் காமெடி பல இடங்களில் உவேக்! சரண்யா, மணிவண்ணன் என்று மற்றும் பலர் இருக்கிறார்கள்.

பாடல் வரிகளில் பல என்ன மொழி என்பதே தெரியவில்லை. வித்யாசாகர் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை.

படத்தின் சிறப்பு அம்சம் காமிராதான். காட்சிகளைத் துல்லியமாக, பிரம்மாண்டமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

அடுத்த சூப்பர் ஸ்டாராக விஜயை அறிமுகப்படுத்தும் வேகம் படம் முழுதும் தெரிகிறது.

படம் முழுவதும் ஏதோ ஃபான்டசி உலகத்தில் இருப்பதுபோலத் தோன்றுகிறது. ஒரு காட்சியாவது நம்பும் படியாக இல்லை. மூளையை அடகு வைத்துவிட்டுப் பார்க்கவேண்டிய படம்.

மொத்தத்தில் குருவி – ‘ஊர்க்குருவி’

குருவியின் சில பஞ்ச் வசனங்கள் :

"திரும்பிப் போறவன் இல்லடா, திருப்பி குடுக்கறவன்."

"நாங்க அப்பன் பேச்ச கேக்க மாட்டோம், அது வயசு. ஆனா, அப்பனுக்கு ஒண்ணுன்னா எவன் பேச்சையும் கேக்க மாட்டோம்."

"காடுன்னா நான் சிங்கம், வானம்னா இடி, கடல்னா சுறா, காத்துன்னா சூறாவளி. சும்மா சுத்தீ சுத்தீ அடிக்கும்."

‘குருவி’ பற்றி படித்த ஒரு கடி

உங்க குருவி படம் முதல் நாள் அன்னிக்கு உங்க ரசிகர்கள் 101 குருவிகளைப் பறக்கவிட்டாங்களாம்.
விஜய் : ஆமா, என்னோட தீவிர ரசிகர்கள் அவர்கள்.
உங்க அடுத்த படத் தலைப்பு ‘சிங்கம்’ன்னு கேள்விப்பட்டேன்.”

About The Author

6 Comments

  1. antony

    it was expected….. its gonna flop and it has got good producer,director,camera man,actor vijay etc…… but trisha hmmm….. not looking good…..she is not worth for her fame i guess….. and will become true.
    i hope the same team will come out with good movie in the future without the same heroin ….

  2. maleek

    இந்தக்குருவி”க்கு சிக்கன் குன்யான்னு ஒரு கழுகு சொல்லுச்சி.”

  3. yuvaraj

    இ டிட்ன்’ட் சே திச் கின்ட் ஒf மொவிஎ இன் டமில். Tஒடல்ல்ய் திச் மொவிஎ இச் உன்லொகிcஅல் அன்ட் சேஇங் திச் மொவிஎ இச் நச்டெ ஒf டிமெ அன்ட் மகிங் fஓலிஷ் தொசெ ந்கொ அரெ சேஇங் தெ மொவிஎ. Cஅன் ஈ கிவெ அன் இடெஅ, திச் மொவிஎ இச் ஷொஉல்ட் டெலெcஅச்ட் இன் விஜய் கொஉசெ அன்ட் தெ மொவிஎ ஷொஉல்ட் ப்ய் நட்செட் ப்ய் கிம் அன்ட் கிச் fஅமில்ய். Tகிச் மொவிஎ cஅன்’ட் நட்ச் ப்ய் அன் ஒர்டினர்ய் பெர்சொன்.

Comments are closed.