கெருகு வடை தட்டைகள்

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 2 அரைக்கால்
உளுத்தம்பருப்பு மாவு – 3/4 கப்
பயத்தம்பருப்பு – 1/2 அரைக்கால்
பச்சைக் கடலைப்பருப்பு – 1/2 அரைக்கால்
முந்திரிப்பருப்பு – 1/2 அரைக்கால்
எள் – 1/2 அரைக்கால்
வெள்ளரி விதை – 1/2 அரைக்கால்
பூசணி விதை – 1/2 அரைக்கால்
மோர் மிளகாய் – 7 (அ) 9
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

1. இரண்டு அரைக்கால் அரிசிமாவை ஒன்றிற்கு ஒன்றரை என்னும் கணக்கில் நீர் எடுத்துக்கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்கவும். 
3. கொதிக்க வைத்த நீரில் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும்.
4. பயத்தம்பருப்பு, பச்சைக் கடலைப்பருப்பு இரண்டையும் நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து விடவும். 
5. சற்று சூடாக இருக்கையில் கிளறி வைத்த அரிசி மாவை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
6. பூசணி விதையையும், முந்திரிப் பருப்பையும் பொடியாக நறுக்கிப் போட்டு அதனுடன் எள்ளையும், வெள்ளரி விதையையும் மாவுடன் சேர்க்கவும். மோர் மிளகாயை துண்டுகளாக்கி மாவுடன் சேர்க்கவும். 
7. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெயை சூடாக்கவும்.
8. கலந்து வைத்த மாவுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்துப் பிசைந்துக்கொண்டு சிறு சிறு தட்டைகளாகத் தட்டி, சூடாக்கிய எண்ணெயில் ஐந்து அல்லது ஆறு தட்டைகளாகப் போட்டு பொன்னிறமாகப் பொறித்து காற்று புகாத டப்பிகளில் வைக்கவும்.

சிறு குறிப்பு : பருப்பு வகைகளை அதிகமாக சேர்ப்பதினால் கூடுதலான சுவையுடன் இருப்பதால் அனைவரும் விரும்புவார்கள்.

About The Author

2 Comments

  1. MahiArun

    அரைக்கால் என்பதற்கு பதிலாக இப்பொழுது உபயோகத்தில் இருக்கும் அளவுகளில் குறிப்புகள் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்…. நன்றி.

  2. madeena

    அரைக்கால் என்றால் எவ்வளவு என்று தெரியவில்லை.

Comments are closed.