கொசுபாரதம்

அர்ஜுனா!
கொடிய கொசுக்களை
கொன்றொழித்திடுவாய்

அதற்கென் பேரருள்
எப்போதும் உண்டு

அர்ஜுனா,
கொசுக்களைக் கொல்லுதல்
கொலைச்செயலன்று!

இந்த உன் பிறப்பு
கொசுவதம் செய்யவே!

கொசுக்களை அழிக்கும்
உபாயம் சொல்லி
குவலயம் காத்து
அருள் பாலிப்பாய்!

றெக்கை கட்டி
ரீங்கரிக்கும் கொசுக்களை
றெக்கை வெட்டி
நாசம் செய்திடு:

உனக்கும் அஃதே
பெருமையும் ஆகும்!

கொடுநோய் பரப்பும்
கொசுக்களை வேரறு:
முக்தி வழியில்
முன்னேறிடுவாய்!

அர்ஜுனா,
அயர்ச்சிகொள்ளாதே:
கொசுக்களையழித்திடின்
குலமும் போற்றும்
குதூகலம் வாய்க்கும்!

(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author