கோடைக்கேற்ற குளிர் பானங்கள் (3)

பப்பாளி ஜூஸ்

பப்பாளிப்பழத் துண்டுகளுடன் தண்ணீர்ப் பழம் (water melon) துண்டுகளை சரிசமமாகக் கலந்து கொள்ளவும். அதனுடன் குறுமிளகுத்தூள், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து ஜூஸ் செய்து பருகவும். மிகவும் நன்றாக இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சுப் பழத்தை நன்றாகக் கழுவி தோலுடன் முழுவதுமாக வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் நன்றாக ஆறியதும் மிக்சியில் அடித்து, அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துப் பருகினால் மிகவும் சுவையாக இருக்கும்.

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் பழத்தைக் கழுவி தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். சிறிது சுடுநீரும், ஐஸ் கட்டிகளும் சேர்த்து மிக்சியில் ஜூஸ் செய்து கொள்ளவும். அதனுடன் சிறிது பால் சேர்த்து, எலுமிச்சை ரசம் மற்றும் சர்க்கரையும் சேர்த்துக் குடித்தால் நன்றாக இருக்கும்.

கோடை காலத்திற்கேற்ற கஷாயம்

சுக்கு, மிளகு நைசாகப் பொடி செய்துகொண்டு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து, பின் சிறிது பால் சேர்த்துக் குடிக்கலாம்.

ஜீரகக் கஷாயம்

ஜீரகம் இரண்டு தேக்கரண்டியுடன் இரண்டு தேக்கரண்டி தனியாவையும், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை தேக்கரண்டி வெந்தயத்தையும் ஒன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு மிக்சியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லத்தைக் கொதிக்க வைத்து சிறிது கஷாய பவுடருடன் பாலை சேர்த்துக் குடித்தால் மிகவும் நல்லது.

*********

About The Author