கோவை கோவா

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்
கடலை மாவு – 250 கிராம்
சர்க்கரை – 700 கிராம்
நெய் – 300 கிராம்

செய்முறை:

நெய்யில் கடலை மாவைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பாலை நன்றாகச் சூடாக்கி இறக்கிக் கடலை மாவில் ஊற்றிக் கிளறுங்கள். கலவை கெட்டியாகும். பிறகு, கலவையை அடுப்பில் ஏற்றுங்கள். தொடர்ந்து கிளறியவாறு இருந்தால் கோவா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும். அப்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டமிட்டு மேலே அலங்காரம் செய்யலாம். அல்லது, தட்டில் கொட்டிய கேக்கைச் சிறு சிறு உருண்டைகளாக்கி மேலே முந்திரி, திராட்சை, செர்ரி பதிக்கலாம்.

புதுமையான இந்தக் கோவை கோவா சுலபமானது; அதே நேரம் சுவையானது!

About The Author