சரியாக மையத்தில்

என் வாழ்க்கை சுழல்கிறது
பிறப்பு இளமை
வயோதிகம் இறப்பு எனும் சுழற்சியில்

எனது உடலை மாற்றிக்கொள்கிறேன்
நேற்று அணிவித்த மாலையினை நீக்கி
புதியதை பூஜைக்கென கடவுளுக்கு சூட்டுவதாய்
முடிவே இல்லாது இதை மறுபடியும் செய்கிறேன்
என்னுடைய விருப்பங்கள் கனவுகள் என்னென்ன
அவைகளுடைய இயல்பு இயல்பற்றது என்ன என்பதைக்காட்டி

வெறுமையை நெருங்கும் முயற்சியில்
உனக்காகக் காத்திருக்கிறேன்
ஆனந்தக்கண்ணீரின் வெள்ளத்தில் உன்னைப் பெற்றவுடன்
உன்னை இழந்தேன் எல்லையில்லா வெறுமையில்
இதுவே என்னுடைய முழுமையான அநுபவம்
நான் இப்போது நிரந்தரமானவளானேன்
அலைகிறேன் சுற்றிலும் காலத்தைக் கடந்தும்
யாரது அங்கே மையத்தில்
யார் அந்த ஒளிமின்னலாய் வருவது
போய்க்கொண்டும் வந்துகொண்டும் இப்போதும் மறுபடியும்
நீ அந்த நடுவில் சரியாக பொருந்தியிருக்கிறாயா
வட்டவெளிக் கோட்டிலிருந்து ஆரத்துக்கு
எப்போதும் அசையாத மையத்தில்…

(மூலம் : பிரதீபா சத்பதி)
தமிழில் – மதுமிதா

About The Author